Friday 31 May 2013

தன் மனைவியின் செக்ஸ் தேவைக்கு மதிப்புக்கொடுத்த கணவன்...!


கணவனிடம் எப்படி இயல்பாக இருக்க வேண்டும் அல்லது நடந்துகொள்ள வேண்டும்..தன் கணவனிடம் தனக்குத்தேவையான வடிகாலை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அப்பெண் புரிந்துகொள்ளவில்லை,அல்லது அவளது வளர்ந்தவிதம் அப்படி இருக்கலாம் என்று சாதாரணமாக விட்டுவிடமுடியாது என்பதால் அவளைக்கூட்டிக்கொண்டு அவளது அம்மா வீட்டிற்குச் சென்றேன்.

அங்கே அமைதியான சூழலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.அவளது இன்னோஸண்டான விசயங்களை எடுத்துக்கூறினேன்.ஆரம்பத்தில் புரிந்துகொள்ள மறுத்த அவள்,பின்னர் கொஞ்சமாக புரிந்துகொண்டாள்.
அவளது கணவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும்,அவருக்கு உன்னுடைய பீலிங்ஸையும் எப்படி புரிய வைக்க முயற்சிக்க வேண்டும் என்பதையும் சொன்னேன்.

என்ன பண்றது..?நான் எப்படி ஒரு ஆணிடம் சென்று எனக்கு இந்த மாதிரி செக்ஸ் தேவைப்படுது என்பதை அவரிடம் சொல்லமுடியும், என்னைப்பற்றி என்ன நினைப்பார்.நான் உடல்தேவைக்காக அலைகிறேன் என்று நினைத்துக்கொள்ள மாட்டாரா…?என்று பல கேள்விகளை என்னிடம் அடுக்கினாள்.

முதலில் தெரிந்துகொள், அவர் வேறு ஒரு ஆண்மகன் அல்ல..உன்னுடைய கணவன்.உன்னுள் சகலமும் அவர் அடக்கம்.என்று உன்னை மணமுடித்தாரோ..என்று உன்னோடு உடலுறவு வைத்துக்கொண்டாரோ,அன்றே நீயும்,அவரும் ஒன்னுள் ஒன்றில் அடக்கம்.
எனவே உன்னுடைய எதிர்பார்ப்புகளை அவரிடம் சொல்லிப்புரிய வைப்பதில் தவறில்லை.எனக்குத் தெரிந்து என்னைப்போன்றோரிடம் உன் மன அழுத்தங்களை சொல்லிக்கொண்டு இருப்பதை விட உன்னுடைய கணவரிடம் சென்று சொல்லிப்புரிய வை.

அவர் ஏதாவது தப்பாக நினைப்பவர் என்றால்,உடனே ஒரு செக்ஸாலஜி டாக்டரிடம் கூட்டிச்செல்,அவர் உன்னையும்,அவரையும் ஒன்றாக அமர்த்தி உங்களுக்குள் ஏற்படும் செக்ஸ் பிரச்னைக்கு இருவரிடம் பேசி புரியவைக்க முயற்சிப்பார் என்றேன்.

இதற்கு எல்லாம் அவசியம் ஏற்படாது.உன் கணவரிடம் நீ முதலில் தைரியமாகப்பேசிப்புரிய வை. பின்னர் பார் உன் எதிர்பார்ப்பு எப்படி நிவர்த்தி ஆகிறது என்றேன்.

கொஞ்சம் சஞ்சலங்கள்,மற்றும் எதிர்பார்ப்புகளோடு அவள் வீட்டிற்குச்சென்றாள்.

இரண்டுநாள் கழித்து தொடர்பு கொண்ட அவள்
ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..நீங்க சொன்னமாதிரியே ஒர்க் அவுட் ஆயிடுச்சு.சொல்லத்தயங்கிய விசயங்களை நான் தயங்கித்தயங்கி பேசுவதைப் பார்த்து புரிந்துகொண்டு என் கணவரே…உனக்கு என்ன பிரச்னை ?என்று கேட்டார்.

நான் அழ ஆரம்பித்துவிட்டேன். உடனே என்னைக் கட்டித்தழுவிக் கொண்டு,இப்போ சொல்லு உனக்கு என்ன பிரச்னை ..என்றார்.
நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,நீங்க என்னிடம் அன்பாக நடந்துக்குறீங்க.ஆனா எனக்கு உங்களுடனான செக்ஸு சுகமும் தேவைப்படுது.நீங்க என்ன ரசிக்கனும்,அரவணைக்கனும் என்று ஆசைப்படுறேன்.இதையெல்லாம் நான் சொல்வதால் நீங்க என்ன தப்பா நினைச்சாலும் சரி.எனக்கு உங்களைவிட்டா மற்று வேறு யாரிடம் சென்று என் தேவைகளை கேட்கமுடியும்.என படபடவென்று பேசிவிட்டு பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்துக்குடித்தேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக என்னை உற்று நோக்கிய அவர்.நான் எப்படி நடந்துக்கனும் என்று ஆசைப்படுற..?

சரி…நானே சொல்றேன்…..

நான் உன்னை வெறுக்கிறேன்,அல்லது கண்டுகிறது இல்லைனு நினைக்கிற அளவுக்கு என்னுடைய செயல்பாடுகள் இருந்து இருக்கு.என்னை மன்னிச்சுடு.இனிமே உன் தேவைகளை நான் சரி செய்கிறேன்.உன்னிடம் அன்பாகத் தான் இருக்கிறேன்.இருந்தும் அதை இனிமேல் உன்னிடம் வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நான் பார்க்கும் வேலை,சூழ்நிலை இதையெல்லாம் நீ புரிஞ்சுக்கிற வரைக்கும் நான் உனக்குத்தகுந்தபடி நடந்துக்கிறேண்டி என் செல்லம்…என்று என்னைக்கட்டி அணைத்துக்கொண்டார்..

யம்மாடி எனக்கு சந்தோஷமா தாங்கல…உங்க யோசனையை கேட்காம மனசுல வச்சுட்டு இருந்தேன்னா…இந்நேரம் ரொம்ப மன உளைச்சலில் சிக்கி தவித்து இருப்பேன்.இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.என் கணவர் இரண்டு நாட்களா என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுத்துறார் என்றாள்.

அவளது கணவர் மிகுந்த புத்திசாலியாக இருந்து இருக்கிறார்.தன் மனைவியின் சந்தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.அவளது தேவையை அவர் உணர்ந்து இருக்கிறார் என்றதால் தான் அவர் உடனே தன் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு இருக்கிறார் தன் மனைவியிடம் ஈகோ பார்க்காமல்…

புரிந்து கொண்ட கணவனோ,மனைவியோ அமைந்துவிட்டால் வாழ்க்கை முழுதும் சந்தோஷம் நம்முடையதாகத்தான் இருக்கும்..
இவைதான்.. …இதுதான்…...இவ்வளவே தான்….. புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வார்கள்…

மற்றவர்கள் …….?அடுத்ததாகப்பார்ப்போம்…….

1 comment: