Saturday 28 September 2013

நட்பிற்கு முண்டோ அடைக்கும் தாழ்....?

ஒருவர் தன் மனைவி படுத்தும் பாட்டால்,வீட்டிற்கு வருவதற்கே...விருப்பமில்லாமல் வந்துகொண்டு இருந்தார்.எப்போதும் சந்தேகம்,தன் பேச்சைத்தான் கேட்க வேண்டும் என்ற அகம்பாவம் இதனால் கணவருக்கும் மனைவிக்கும் இடையே பிரச்னைகள் தோன்றிக்கொண்டே இருந்தது.இருவரும் தன் இரு பிள்ளைகளுக்காக விருப்பமே இல்லாமல் ஒருவீட்டில் வாழ்ந்துகொண்டு இருந்தார்கள்.

தன் நண்பன் ஒருவரின் ஆலோசனையின் படி கேட்க ஆரம்பித்தார்.ஒரு பெண்ணின் நட்பின் மூலம் நமக்கு ஓரளவு நிம்மதி கிடைக்க வாய்ப்புண்டு.ஒரு பெண் தான் நமக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவாள்.ஆண் நண்பர்கள் நம் சோகக்கதையை கேட்டுவிட்டு அடுத்தவர்களிடம் சொல்லி கிண்டல் பண்ணிக்கொண்டு இருப்பார்கள் என்று தன் நண்பன் கூறியதை மனதிற்குள் வைத்துக்கொண்டே,

ஒரு பெண் தோழியை தேட ஆரம்பித்தார்.எதன்மூலம் தேடுவது..?முதல் வழி பேஸ்புக்,டிவிட்டர் என தேடி அலைய ஆரம்பித்தார்.அவருக்கு இன்பாக்ஸில் வரும் பெண்களின் நட்புகளை சோதிக்க விரும்பி அனைவரிடமும் தனக்கு திருமணம் ஆகிவிட்டது.ஆனால் நல்ல பெண் தோழி கிடைக்க ஏங்குகிறேன் என்று கூறினார்.யப்பா...கல்யாணம் ஆன பெண்கள் ஒரு க்யூவில் நின்று இவருக்கு நட்பு வலை வீசினர்.

கடைசியாக இவர் தேர்ந்தெடுத்த பத்து பெண்களில் இருவர் மட்டும் நட்புத்தொடர நல்லவர்களாக அமைவார்கள் என்று நினைத்தார். அவர்களிடம் சகலமும் பேசி தன் துயரை துடைக்க விரும்பினார்.வீட்டில் நடக்கும் பிரச்னைகள்,சண்டைகள் என இவரும்,அந்த இருவரும் (பெண்கள்)பேசிக்கொண்டு இருந்தனர்.

ஒரு பெண் என்னடா இது நட்பு இவ்வளவு சோகமாக போகுது என்றபடி எஸ்கேப் ஆகிட்டா..மற்ற ஒரு பெண்ணும்,இவரும் நட்பை தொடர்ந்து,பின் ஒருநாள் சந்திக்க விரும்பி,மகாபலிபுரத்தில் ரூம் போட சம்மதித்து,அவரும்,அப்பெண்ணும் ஒன்று சேர்ந்து குளவி தங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள்.

காத்துக்கொண்டிருந்த அவரைப் பார்க்க அப்பெண் கால் டாக்ஸியில் வந்து இறங்கினாள்.இறங்கியவளை கண்ட இவன் தலை சுற்றி கீழே விழுந்தான்.அப்பெண் அழுது கொண்டே மீண்டும் டாக்ஸியில் ஏறி கிளம்பிவிட்டாள்.

ஏன்..?ஏன் அதிர்ச்சி ஆனான்..?ஏன் அவள் அழுதாள்..?

ஏனெனில் கால் டாக்ஸியில் வந்து இறங்கியது,இத்தனை நாள் தன் சோகங்களை பகிர்ந்து கொண்டது,தன் கணவர் பற்றிய குறைகளைச் சொல்லிக்கொண்டு இருந்தது..எல்லாம் தன் தங்கை தான் என்றதும்,இவரால் அவமானத்தை,ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.
அதனால் வந்த மயக்கம் அவருக்கு...

இத்தனை சோகங்களையும் பகிர்ந்த நாம் இவர் யார்..?எங்கு வேலை செய்கிறார்? என்று கூட கேட்கவில்லையே..இப்படி அண்ணனிடமே தன் அந்தரங்க விசயங்களைக் கூறி அசிங்கப்பட்டுவிட்டோமே..என்ற வருத்தத்தில்,அசிங்கத்தில் அவளும் சென்றாள்.

அடுத்தவர்களிடம் ஆறுதல் தேட வந்தவர்கள் தன் உண்மையான முகங்களையும் பேரையும் ஏன் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்தனர்.?

என்ன மனது...இது..நாம் நினைக்கும் நமக்குச் சாதகமான விசயங்களுக்கு எல்லாம் நம்முடன் சேர்ந்து நம் நிஜங்களையும் ஏமாற்றப்பார்க்கிறதே..?

இவர்கள் ஏன் பிரிந்தனர்.அது அண்ணன் தங்கையாக இருந்தாக்கூட,பார்த்ததும் அழுதபடி  தன் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு இருக்கலாமே.தன் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள வெறும் வார்த்தைகள்,ஆறுதல்களை நம்பி மட்டும் இருவரும் மகாபலிபுரம் வரவில்லை என்பது திரும்பிச்செல்லும் போது அவர்கள் மனதிற்குள் தோன்றியது. காரின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து...காரித்துப்ப வேண்டும்  போல் இருந்தது.

நடைமுறை வாழ்க்கையில் வெறும் வார்த்தைகளோடு நட்பை முடித்துக்கொள்ள....உணர்ந்து கொள்ள...ஆண் நண்பர்களோ..பெண் நண்பர்களோ...விரும்புவதில்லை.அதையும் தாண்டி ஒரு உணர்வு,மனதிற்குள் தோன்றும் சல்லாபம் இவைகளைத்தான் எதிர்பாலினத்தவரின்( உள்மன )நட்புக்கள் எதிர்பார்க்கின்றன.

(அதனால் தான் எதிர்பார்த்து வந்த உறவு தன் தங்கை என்றதும்,அவனால் மயங்கி விழ முடிந்தது.தன் நட்பு காதலனை எண்ணி வந்த வேளையில் தன் அண்ணன் தான் அந்த நண்பன் என்ற போது அப்பெண் அழுகையுடன் காரில் ஏறிச் சென்றுவிட்டாள்.)

ஒருவேளை இருவரும் அண்ணன் தங்கையாக இல்லாமல் இருந்து இருந்தால்..கண்டிப்பாக ஒரு நட்பு மகாபலிபுரத்தில் ஒரு ரூமில் ஒரு படுக்கையில் களவாடப்பட்டு,அங்கே ஒளிந்துகொண்டிருந்த ஒரு வேசியின் மகனோ,மகளோ தங்கள் கஷ்டங்களை மறந்து ஏக்க மூச்சை, வெட்கத்தை விட்டு பெற்றுக்கொண்டு இருந்து இருப்பார்கள்.

நல்லவேளை இவர்களின் அம்மா அந்தக் கெட்ட(வேசி) பெயரிலிருந்து தப்பித்து விட்டாள்.

எதிர்பாலினரின் நட்பு விக்கிரமன் பட லாலாலாலாலலல....போன்றது அல்ல,எங்காவது ஒருவகையில் ஒரு சின்ன ஆசையை வெளிப்படுத்திக்கொண்டால் போதும்.அந்த ஆசை மிருகத்தனமாக மாறி நமது உண்மையான நட்பை மாற்றி தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க பழகிக்கொள்ளும்.அந்த மாதிரி நட்பின் எல்லையைத்தான் தாண்டிவிட்டார்கள் இந்த கதையில் வரும் நட்பு கதாப்பாத்திரம்.

ஏதோ ஒரு வகையில்......எதிர்பாலின நட்பு எல்லை மீறலை தேடிக்கொண்டு இருக்கும்.அந்த மீறலையும் தாண்டி ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் இருக்குமானால்...அது தான் உண்மையான நட்பின் இலக்கணமாக மாறி இலக்கியமாகக்கூடும்.


நட்பிற்கு முண்டோ அடைக்கும் தாழ்....?

Friday 27 September 2013

ஒரினச்சேர்க்கை...குடும்பத்திற்கு ஒவ்வாத சேர்க்கை......!

அழுது கொண்டிருந்த அந்த தோழியை என்னால் சமாதானப் படுத்தவே முடியல…சிறிது நேரம் கழித்து அவரே கண்களைத்துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

என் கணவரும்,கணவரின் நண்பரும் சின்ன வயதிலிருந்தே நட்பாக இருந்து இருக்கிறார்கள்.ஒரு காலகட்டத்தில் இருவரும் அன்யோன்யமாக வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள்.என் கணவர் சென்னையில் இருந்தாலும்,அவரின் நண்பர் திருச்சியில் இருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறை என் கணவரைத்தேடி வந்துவிடுவார்.

அந்த நண்பருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது.இருந்தும் இந்த நட்பு இன்னும் கொஞ்சம் ஆழமாக வளர்ந்து கொண்டு இருப்பது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.

இருவரும் ஒன்றாக ஒரு போர்வைக்குள் படுத்து இருந்ததை என்னால் தாங்க முடியல.அதுவும் திருமணம் ஆகி கொஞ்சநாளில் என்னை ரூமில் படுக்க வைத்துவிட்டு இப்படி நண்பருடன் படுக்கும் அளவிற்கு என்ன தேவை இருக்கிறது என்ற பல யோசனைகளில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது.

மாடிப்படியில் உட்கார்ந்து கொண்டு அழது கொண்டிருந்த என்னை என் கணவர் தேடி வந்தார்.ஏன் இங்க உட்கார்ந்துட்டு இருக்க என்றதும்,எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.நீங்க உங்க நண்பருடன் பழகுங்க.அதுக்காக அவருடன் படுக்கவும்,அவர் சொல்வதைத்தான் வேதவாக்காக நம்புவதும் எனக்கு வேதனையா இருக்குங்க.நான் உங்களை மட்டுமே முழுமையாக நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.ஆனா உங்களுடைய இந்த ஆழ்ந்த நட்பு எனக்கு ஒருவித அச்சத்தை உண்டாக்குகிறது.என்று கூறிவிட்டு கணவரை தள்ளிவிட்டு உள் ரூமில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டேன்.

திரும்ப வந்த கணவர்,என்னை மன்னித்துவிடு,இனிமேல் இப்படி நடக்காது என்றார்.இதுதான் நான் கடைசியாக பண்ணிய தப்பாக இருக்கும் என்று என் தலையில் அடித்து சத்தியம் செய்து கொடுத்தார்.
நானும் நம் குடும்பவாழ்க்கை,அம்மா,அப்பாவுக்கு தெரிந்தால் தவறாகிவிடும் என்பதை எண்ணி மறந்து மன்னித்து வாழ்ந்து வருகிறேன்.ஆனால் அந்த நண்பர் வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறார்.

என் கணவரை இரவு நேரத்தில் கதவு தட்டி எழுப்பும் போது,நான் எழுந்து தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள்.உங்கள் நட்பு எந்த அளவு தவறாக போய்க்கொண்டு இருக்கிறது என்பதை உணருங்கள் என்று கூறி கதவை அடைத்துவிட்டேன்.

அதன் பிறகு இரண்டு மாதம் எங்கள் வீட்டிற்கு வரவேயில்லை.
என்னங்க ஆச்சு உங்க நண்பருக்கு,ஆளைக்காணோம்,போனில் பேசுகிறாரா எனக்கேட்டேன்.இல்லை அவனுக்கு சென்ற மாதம் ஆக்ஸிடெண்ட் ஆகி ஹோமாவில் கிடந்து இப்போது தான் வீட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.நாமும் சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வருவோம் என்றார்.நானும் சரி என்று தலையாட்டினேன்.

திருச்சியில் உள்ள நண்பரின் வீட்டிற்கு சென்றேன்.கொஞ்சம் மனபிசக்கு ஏற்பட்டதைப் போலத்தான் பேசினார்.அந்த நண்பரின் மனைவியும் எங்களிடம் வருத்தப்பட்டு பேசிக் கொண்டு இருந்தார்.

என் கணவரும்,நண்பரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்.அவர்கள் கண்களுக்குள் ஒரு காதல் அரும்பி இருந்தது.பிரியா விடை பெற்று நாங்கள் சென்னை வந்தோம்.என் கணவருக்கு நண்பரின் மீது காதலும் விடமுடியவில்லை.தன் மனைவியான என்னையும் கைவிட முடியவில்லை.இருதலைக்கொள்ளி எறும்பாக தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

எனக்கு நாள் தோறும் ஒரு ஆணுக்கு ஆண் தப்பாக பழகி இருக்கிறார்கள்.அதுவும் என் கணவர் அந்த தப்பை செய்துவிட்டாரே என்று இரவில் கூட தூக்கம் வராமல்,இதைப்பற்றி வெளியில் கூட பேசி ஆறுதல் அடைய முடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறேன் என்று அழுதார் அந்தத்தோழி.


அவளது நிலை யாருக்காக இருந்தாலும் மிக வருத்தமளிக்க கூடிய மன அமைதியை குழைக்கக்கூடிய ஒருவிசயம்.

திடிரென எனக்கு ஒரு ஐடியா தோன்றியது.அப்பெண்ணிடம் செக்ஸாலஜி டாக்டர் நாராயண ரெட்டி அவரின் அட்ரஸ் கொடுத்து கவுன்சிலிங் போகச்சொன்னேன்.சரி என்று நம்பிக்கை இல்லாமல் தலையாட்டிவிட்டுச் சென்றார்.

மறு மாதம் அதே ஹாஸ்பிட்டலில் நானும்,அப்பெண்ணும் சந்திக்க நேர்ந்தது.அவளின் முகத்தில் மிகுந்த சந்தோசம்.என்னை வந்து கட்டிக்கொண்டாள்.

நீ கொடுத்த ஐடியாவினால் இன்று நான் சந்தோஷத்துடன் வாழ்கிறேன்.மிக்க நன்றி என்றாள்.

நன்றி எல்லாம் இருக்கட்டும் என்னாச்சு என்று சொல் என்றதும்,
டாக்டர் இருமுறை கவுன்சிலீங் வரசொன்னாங்க சில மாத்திரைகள் கொடுத்தாங்க.அவருக்கு மைண்ட் ரிலாக்ஸ் ஆகுமாறு சில அட்வைஸ் கொடுத்தாங்க.எனக்கு பழைய ஞாபகங்களை கிளப்ப வேண்டாம்,அந்த ஞாபகம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எனக்கும் டாக்டர் அட்வைஸ் பண்ணினார்.

நீங்கள் செய்தது தவறு தான் என்றாலும் அதை மன்னிக்கக்கூடிய தவறுதான். நீங்களே திருந்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு,நல்ல மனைவி அமைந்திருக்கிறார் எனவே நீங்கள் முன்னிருந்த நட்பை நேசித்தே வாழவேண்டிய அவசியம் இல்லை.அந்த நண்பரும் தான்.எனவே இருவரும் குடும்ப சூழலை மனதில் வைத்து,இருபாலினருக்குள் இருக்கும் உண்மையான உடல் ஆசையைவிட்டுவிட்டு,குடும்பத்துடனும்,அவரவர் மனைவிகளுடன் சந்தோஷமான முறையில் உடல் உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..அதிலில்லாம ஓரினச்சேர்க்கை என்பது நம் நாட்டு கலாச்சாரத்திற்கும்,குடும்ப முறைகளுக்கு ஒத்துவராத விசயம் என்று என் கணவருக்கு புரிய வைத்தார்.

புரிந்து கொண்ட என் கணவர் தன் நண்பரிடமும் இந்த டாக்டர் சொன்ன அட்வைஸ்களைக் கூறி இனி அவரவர் குடும்பம் தான் முக்கியம் என்பதை நீயும் நானும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இனிமேல் நம் இருவருக்குள் இருக்கும் அந்த நேசம் வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டார்.அவர்களின் நெருக்கம் குறைய குறைய எனக்கும் என் கணவருக்குமிடையே அன்னியோன்யம் ஏற்பட்டு மிக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..

எல்லாவற்றுக்கும் நீங்க தான் எனக்கு உதவி செய்தாய்.எனவே உன்னைக்காலம் பூராவும் மறக்கமாட்டேன் என்றாள்.

எனக்கு அவளின் முகத்தில் தோன்றிய புன்னகையை பார்த்து சந்தோஷப்பட்டேன்.இன்னும் எங்களுக்குள் நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த பழைய நினைப்பை தூக்கி போட்டு இன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறாள்.


அடுத்தவாரம் தொடர்வோம்./…….

Sunday 8 September 2013

கொழுக்கட்டை தினநாள் வாழ்த்துக்கள்

பெரிய பெரிய கோவிலையெல்லாம் பார்த்தா இடது பக்கம் விநாயகர் சிலை வச்சு இருப்பாங்க.ஏன்னா விநாயகர் கும்பிட்டு போனா நம்ம பாவம் எல்லாம் கழிந்துவிடுமாம்.அதன் பிறகு மெயின்(சிவனோ, எவனோ,அல்லது பெண் சாமியோ) சாமியை போய் சந்திக்கலாமாம்.

ஏனென்றால் விநாயகரிடம் தான் சனி பகவான் கூட அண்டவில்லையாம்.மற்ற எல்லா சாமிகளிடத்தும் சனிஸ்வர சாமி என்னும் கஷ்டம் கொடுக்கும் சாமி பிடித்துக்கொண்டு ஆறு மாதமோ அல்லது ஏழரை வருடமோ பிடித்து கஷ்டங்களை கொடுத்து ஆட்டி படைத்து விடுமாம்.

ஆனால் விநாயகர் மட்டும் சனிஸ்வரன் பிடிக்க வரும் போது டகால்டி வேலை காண்பித்து எஸ்கேப் ஆகிவிட்டார்.அதனால் தான் விநாயகரை பர்ஸ்டு கும்புடு போட்டு நெக்ஸ்ட் மற்ற சாமிகளுக்கு வணக்கம் செலுத்தனுமாம்.

ஆனா விநாயகர் பிறந்த கதையை மட்டும் கேட்டு அவரை தப்பு சொல்லாதீங்க.பார்வதியின் முதுகில் இருந்த அழுக்கை சுரண்டி எடுத்து தான் விநாயகர் உருவானாராம்.சிவனுக்கு ஒன்னும் வேலைப்பளு இல்லாமல் பிறந்த விநாயகர் மீது தான் பார்வதிக்கு மிகுந்த பிரியமாம்.

அதனால் தான் குளிக்க செல்லும் போது பார்வதி விநாயகரை காவலுக்கு உட்கார வைத்துவிட்டு செல்வாராம்.(அவ்வளவு நம்பிக்கை சிவன் மீது)ஒருநாள் பார்வதி இப்படி குளிக்கச்செல்லும் போது,சிவன் வந்து இருக்கிறார்.

விநாயகரும் அம்மா குளிக்கிறாங்க அதனால் சற்று நேரம் கழித்து வாங்கன்னு தன் அப்பா(?)விடம் சொல்லியிருக்கிறார்.ஆனால் சிவன் என்ன அவசரமோ பாத்ரூமுக்குச் செல்ல வேண்டும் என அடம்பிடித்து இருக்கிறார்.விநாயகர் விடவே இல்லை.கோபம் கொண்ட,சிவன் விநாயகரின் கழுத்தை தன்னிடம் இருந்த வாளினால் ஒரே வெட்டு வெட்டி இருக்கிறார்.

விநாயகருக்கோ கழுத்து துண்டாகி அழுக்கு வராமல் இரத்தம் தான் வந்து இருக்கிறது.அதைக்கண்ட பார்வதி வழக்கம் போல் கோபித்துக்கொண்டு அப்பாவீட்டுக்குச் சென்று விட்டார்.(இந்த பெண்கள் கோபித்துக்கொண்டு செல்லும் பழக்கம் அப்போ இருந்தே தொடர்ந்து இருந்து இருக்கிறது.).கடைசி வரை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த சிவனுக்கு யாரோ ஐடியா கொடுத்து வடக்குப் பக்கம் சென்று அங்கே முதலாவது வடக்குப்பக்கம் தலை வைத்து படுத்து இருக்கும் உயிரினத்தின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் விநாயகர் முகத்தில் ஒட்டிவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

இவரும் வடக்குப்பக்கம் தேடிக்கொண்டே செல்லும் போது முதலாவதாக வடக்குப்பக்கம் தலை வைத்து படுத்து இருந்தது யானை மட்டுமே எனவே யானையின் தலையை வெட்டி அதன் தலையை கொண்டு வந்து இருக்கிறார்.(அதனால் தான் நாம் வடக்குப்பக்கமாக தலையை வைத்து தூங்கக்கூடாது என்று பெரியவங்க சொல்லுவாங்க.ஏன்னா யானைக்கு வந்த ஆபத்தை போல நமக்கு வந்துவிடுமாம்.ஹஹஹ என்ன கொடும சரவணா வடக்குப்பக்கம் வைப்ரேஷன் அதிகமாக வரும் என்ற அறிவியலை சொன்னால் மக்கள் கேட்க மாட்டார்கள் அதனால் இப்படி ஒரு பயக்கதை)

அந்த யானை முகத்தை கொண்டு வந்து தன் பையனுக்கு ஒட்ட வைத்து விநாயகரை யானைமுகத்தோடு ஆக்கிவிட்டார்.உடனே பார்வதியும் வந்துவிட்டார்.தன் பையன் யானைமுகதோடு இருப்பதைக்கண்டு அழுதாலும் பாசத்துடன் அணைத்துக்கொண்டார்.

அன்றிலிருந்து தான் யானைமுகத்தானே என்று விநாயகர் அழைக்கப்படுகிறார்.ஒருநாள் குடும்பத்தில் கோபத்தை உண்டாக்குவதற்கே ஒளவை பாட்டு ஒரு மாம்பழக்கனியை கொண்டு வந்து சிவனிடம் கொடுத்துள்ளார்.முருகனும் விநாயகரும் அந்த மாங்கனிக்கு ஆசைப்பட்டு சண்டை போட்டுக்கொண்டனர்.உடனே சிவன் ஒரு ஐடியா எடுத்தார் ”இக்கனி யாருக்கு வேண்டுமோ”? அவர்கள் இந்த உலகத்தை ஒருமுறை சுற்றி வரவேண்டும்,முதலாவதாக வருபவருக்குத்தான் இக்கனி என்று  கூறிவிட்டார்.

முருகன் தன்னுடைய மயில் வாகனத்தில் உலகைச்சுற்ற போய்விட்டார்.ஆனால் விநாயகரோ தன்னுடைய அம்மா அப்பாவை சுற்றி விட்டு அக்கனியை பெற்றுக்கொண்டார்.அப்போது அங்கே வந்த முருகன் சீட்டிங் சீட்டிங் என்று கத்திக்கொண்டு வந்தார்.என் அம்மாவும் அப்பாவும் தான் எனக்கு உலகம் அதனால் அவர்களை சுற்றிக்கொண்டு வந்து நான் கனியை பெற்றுக்கொண்டேன் என்றதும் கோபித்துக்கொண்டு பழனி மலையில் போய் உட்கார்ந்து விட்டார்.(முருகன் ஆனா ஊனா மலைல போய் உட்கார்ந்து கொள்வதே அவர் வேலை.)

அசுரனாக வந்த மூஞ்சுறுவை தனது வாகனமாக ஆக்கிக்கொண்டார்.யானைமுகத்தோனுக்கு கொழுக்கட்டை என்றால் உயிர் அதான்ல் தான் அவருக்கு கொழுக்கட்டை படைத்து காட்டி விட்டு நாம அதை திங்கிறோம்.

இப்படி விநாயகனுக்கு பல திறமைகள் இருக்கு அதையெல்லாம் எழுத வேண்டும் எனில் நிறைய பக்கம் தேவைப்படும்.ஆனால் நமக்கு போர் அடித்துவிடும் என்பதால்..இத்தோடு முழித்துக்கொள்கிறேன்.

என்ன இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…யாருக்கு……

உண்மையிலேயே விநாயகர் இருந்தா விநாயகருக்கு………ஹி ஹி ஹி… இல்லைனா கொழுக்கட்டைக்கு…..!

Monday 2 September 2013

இணைய பாசறை நண்பர்களை இணைக்கும் பாசறை :

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு அவர்கள் எனக்கு நட்பு வட்டத்தில் இருந்தாலும்,அவரை பற்றிய அறிமுகம் எனக்குக் கிடையாது.நண்பர்கள் அனைவரும் புதுக்கோட்டையில் நடக்கும் பாசறை கூட்டத்திற்கு வருவார்கள்,அதில் என் கணவர் கோவி.லெனின் பேசுகிறார் என்பது மட்டும் தெரியும்.
பாசறை கூட்டம் நடக்கும் முதல் நாள் வரை நான் கலந்துகொள்ள முடியுமா என்பது பற்றிய கவலைதான் இருந்தது.அந்த அளவிற்கு என் உடல்நிலை இருந்தது.இருந்தும் நான் கலந்துகொள்கிறேன் எனப்பிடிவாதம்  பிடித்து தோழர் சரவணக்குமார் மற்றும் ஜெயின் கூபி அண்ணன் என் கணவர் மற்றும் என் பொண்ணுடன் புதுக்கோட்டை நோக்கி பயணம் செய்தோம்.
செப்டம்பர் 1ந் தேதி காலையில் மண்டபத்தை அடைந்தபோது தான் தெரியும் மிகப்பெரிய நண்பர்கள் கூட்டம்,தேன் கூடில் மொய்க்கும் ஈக்கள் போல் நிறைந்து இருந்தனர்.காலை உணவு கல்யாண உணவைப்போல் சிறப்பாக இருந்தது.
பெரியண்ணன் அரசு அவர்கள் ஒரு 50 வயதை கடந்தவராக இருப்பார் என நினைத்து இருந்தேன்.சாப்பிட அழைத்துச்செல்லும் போது தான் தெரிந்தது.இவ்வளவு இளமையாக இருப்பார் என்பது.தினகரன் அரசு அண்ணன் அவர்கள் மிலிட்டரி மேன் ரூபத்தில் அப்படியே இருந்தார்.எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வெள்ளைக்கலர் டி சர்ட்,அணிந்து வயது,கலர்,ஏற்ற, இறக்கம் எதுவும் இல்லாமல் எல்லோரும் ஒரே ரூபத்தில் இருந்தனர்.
காலையில் பேசிய செளமியன்,அப்துல்லா,ராஜா,கீரை தமிழ்ராஜா இவர்களைத்தொடர்ந்து பேசிய கோவி.லெனின் திமுக உறுப்பினர் அல்லாத திமுகவின் உண்மையான,உறுதியான ரசிகனாக ,கலைஞர் அவர்களின் மேல் வைத்துள்ள பாசத்தின் எல்லையை அவரின் பேச்சில் காணமுடிந்தது.
மதிய உணவு வேளையின் போது முஸ்லீம் வீட்டு கல்யாணம் போல் உணவு பரிமாறப்பட்டது.உண்டமயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்ற பழமொழியை மாற்றியது,வக்கீல் வைரமுத்து,திருப்பூர் கார்த்திக்,சிவானந்தம் அவர்களைத்தொடர்ந்து பேசிய மாணவர் அணி துணைச் செயலாளர் தோழர் ஜெரால்டு மற்றும் ஐ பெரியசாமி அவர்களின் புதல்வர்  இளைஞர் அணி துணைச்செயலாளர் செந்தில்,மற்றும் டி ஆர் பி ராஜா எம் எல் ஏ ,மன்னை தொகுதி எம் எல் ஏ எஸ் எஸ் சிவசங்கர் அவர்களும் எல்லோரையும் கவரும் வகையில் பேசினார்கள்.அதிலும் டி ஆர் பி ராஜா அவர்கள் நகைச்சுவையை மழையாக பெய்ய,அனைவரும் அதில் நனைந்தே விட்டோம்.
இறுதியாக பேச வந்த சு ப வீரபாண்டியன் அய்யா மிகவும் அழகான தமிழில் ஆணித்தரமாக பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார்.விழா ஏற்பாட்டில் உறுதுணையாக இருந்த தினகரன் அரசு அண்ணன் நன்றியுரை கூறியதும்,எல்லோருக்கும் ஒருலேப்டாப் பேக் அதில் உழுந்து மாவு பாக்கெட்,ஒரு தொப்பி,விருது,பேனா,நோட்பேடு,ஒரு புத்தகம் என அனைத்தும் ஒவ்வொரு நண்பர்களுக்கும் கொடுத்து திகைப்பில் திழைக்கச்செய்து விட்டார் மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு அவர்கள்.
நம்ம தெருவில் இருக்கும் கவுன்சிலர்களையே இப்போதெல்லாம் பார்க்கமுடிவதில்லை.ஆனால் ஒரு மாவட்ட செயலாளர் அனைவருடனும் அன்பாக பேசி அரவணைத்துச்செல்வது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
மேடையில் அமர்ந்து இருந்தவர்களில் சு ப வீ அய்யாவைத்தவிர மற்ற அனைவரும் 30 ,40 வயதுகளில் இருந்தார்கள்.அடுத்த தலைமுறைகளின்  கையில் தமிழ்நாடு வரும் காலம் நெருங்கிவிட்டது.தலைவர் கலைஞரும்,தளபதி முக ஸ்டாலினும் விழாவில் பேசியவர்களில் எல்லோரும் வியந்து பாராட்டும் நாயகர்களாக பின்னால் இருந்த பேனரில் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.

இந்த இணைய பாசறை கூட்டம் அடுத்தடுத்த மாவட்டங்களில் தொடரும் என நம்பிக்கை வாக்குறுதி கொடுத்தார்கள் டி ஆர் பி ராஜா அவர்களும்,எஸ் எஸ் சிவசங்கர் அவர்களும்,ஐ பி செந்தில் அவர்களும்.மிக அருமையான சந்திப்பு கலந்து கொள்ளாமல் இருந்து இருந்தால் நான் நிறைய விசயங்களை அன்பான நண்பர்களையும் மிஸ் பண்ணியிருப்பேன்.விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பெரியண்ணன் அரசு அவர்களுக்கு மிக்க நன்றி..