Monday 20 May 2013

சீதாப்பாட்டியின் அந்தகால உண்மைப்போராட்டம்...நேரலை.....ரிப்போர்ட்டிங்..!


என் சீதை பாட்டி எங்கே ?.. ஒரு சின்ன சந்தேகம் அவர்களிடத்தில் கேட்கனும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை..என் கேள்விகளின் வேகத்திற்கு பதிலாக எப்படியாவது சீதைப்பாட்டி தன் அமைதி கலந்த பதிலை எனக்கு சொல்லியே ஆகனும் என்று வானலாவிய தூரத்தில் கண்டுபிடித்து, கஷ்டப்பட்டு அழைத்து வந்து இருக்கேன்…இனி அவருடன் தொடரும் கேள்விகளை படியுங்கள்…(BBC,NDTV,TIMES OF INDIA TV யில் வரும் (மோனோ ஆக்ட் போட்டோ கேரக்டர்.).சீதா பாட்டி..நான் ரிப்போர்ட்டர் பிரதிபா…)

இன்றைய காலகட்டப்படி நான் உனக்கு சொல்லிக்கொடுக்கும் சில அஸ்டாக்கு…மிஸ்டாக்கு வேலைகளை இனிமேலாவது உன் கண் கண்ட கணவனின் முகத்திற்கு நேராகப் பார்த்து எதிர்த்து நின்று கேள்வி கேளுங்க சீதாப்பாட்டி .

என் பாட்டி இப்படி ஒரு கஷ்டத்தை அனுபவித்து இருந்து இருந்தால் நான் இப்படித்தான் கேள்வி கேட்கச் சொல்லியிருப்பேன்.நீ இந்தப்பேத்தியை தப்பா எடுத்துக்காதீங்க பாட்டி….என் அருமைச் சீதாபாட்டி….(என்று என்னுடைய இடைப்பட்ட தகவலை கேமரா ஆன் ஆவதற்குள் சொல்லிவிட்டு மேக்கப்புடன் தயாராக இருந்தோம்)

ஒகே ஸ்டார்ட் கேமாரா ஆங்கில்….

நேரலை தொடங்குகிறது....

ஸ்பீக்
வணக்கம்,நமஸ்கார்….வெல்கம் பேக் டூ தி ஒன் அன் ஒன்லி டாக்‌ஷோ இன் தமிழ் சொல்லுவது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக…உண்மை பேச தயாராக இருக்கும் சீதாப்பாட்டியை வரவேற்கிறோம்.

ஒகே வாங்க….சீதா பாட்டி வாங்க….முதல்முறையாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..பெண்களுக்குள் இருக்கும் அடிமைத்தனத்தை ஒழித்து..,நமக்குள் இருக்கும் பெண் உணர்வுக்கு அதில் படர்ந்து கொடி போட நினைக்கும் ஆண் வேட்கைகளுக்கு ஒரு மின்சாரக்கம்பி பாய்ச்சி தடை போடலாம்.உண்மையை பேசலாம்….

என் கேள்விகளுக்கு சற்றும் தயங்காமல் பதில் சொல்லி எல்லோருக்கும் உங்களது நிலைமையை புரிய வையுங்கள்.அதற்காகத்தான் இந்த ஏற்பாடு…
உலகம் உங்களைப்பார்க்கிறது நீங்கள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் உண்மையை பேசுங்கள்.உங்களோடு நாங்களும்,எங்கள் தொலைத்தொடர்பும் இருக்கிறோம் என்றேன்.

தயக்கம் இன்றி சற்றே வெட்கத்துடன் அந்த மேலோட்டமான சேரில் அமர்ந்தார்.நானும் அருகில் அமர்ந்தேன்.

ப்ரதி ;சரி சொல்லுங்க பாட்டி உன் கணவர் உங்களை எப்படியெல்லாம் கவனித்துக்கொண்டார்.?இன்றும் அநேகநபர்கள் உதாரணமாகச்சொல்வது உங்கள் கணவர் ராமரைத்தான்.பெண்களும் ராமன் போல புருஷன் அமையனும்டி என்று தான் கூறிக்கொள்கிறார்கள்.அதற்கு உங்கள் பதில் என்ன..?

சீதா பாட்டி : அந்தக்காலகட்டத்தில் என்னை விரும்பி கல்யாணம் கட்டிக்கிட்டார்.எனக்காக வில்லை அம்பாக வளைத்து,பல வீர விளையாட்டுகளை எல்லாம் எனக்கு சாதகமாக காட்டி என் தந்தையின் அனுமதியைப்பெற்று கல்யாணம் பண்ணிக்கொண்டார்.எனக்கு மிகுந்த ஆசை என் கணவர் மீது.

நானும்,அவரும் இன்ப கேளிக்கைகள் சில நாட்கள் அனுபவித்துக்கொண்டு இருந்தபோது,எல்லா குடும்பத்திலும் ஏற்படும் டிவிஸ்டு என்ற குடும்பத்திலும் ஏற்பட்டது.என் மாமியாக்காரி ரொம்ப பொல்லாதவ..தன் பையனுக்குத்தான் அரியணை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் என் மாமனாரை சரிகட்டி என் கணவரை வனவாசம் போகச்செய்தார்.
(அப்போதே இந்த வன்கொடுமை,வரதட்சணை சட்டம் எல்லாம் இருந்து இருந்தா அப்போதே கேஸ் போட்டு என் மாமியாவ உள்ள தள்ளி இருப்பேன் (என்ன பண்றது காலம் கெட்டு சூர்ய நமஸ்காரம்.)

அப்போ உள்ள பதி பக்தியில் நானும் வர்றேன்னு என் கணவருடன் கிளம்ப,என் கணவரின் தம்பி லட்சுமணனும் கிளம்பிட்டான்.(அதற்குக்கூட அந்த நாட்டு மக்கள் கதை கட்டிவிட்டதுங்க,அண்ணிய விட்டு இவனால இருக்கமுடியாதுனு) ஆனா லட்சுமணம் என் மேல மிகுந்த அன்பு வைத்து இருந்தான்.என் கணவர் மீதும்.அவரும் வரவில்லையெனில் எங்களுக்கு அந்தக்காட்டில் பொழுதே போய் இருக்காது.

இயற்கை உணவுகளை உண்டு களித்து வாழ்ந்து வந்தோம்.அனுமாரின் சகவாசமும் என் கணவருக்கு கிடைத்தது.அனுமார்,வாலி அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்னை அதனால் சரி பண்ணச்சொல்லி என் கணவரிடம் உதவி கேட்ட அனுமானுக்கு என் கணவர் செய்தது பின்னிருந்து ஒழிந்து வாலியை அம்பால் எய்து கொன்று,அந்தப்பதவியை பெற்றுக்கொடுத்தது தான்.அதற்காகத்தான் அனுமான் இன்னும் சஜ்சீவி மலையை தூக்கிக்கொண்டு என் கணவரின் முகத்தை தன் நெஞ்சில் பதித்துக்கொண்டு இருக்கிறார் .(எனக்கு அப்போது தெரியாது இது போங்கு ஆட்டம் என்று,இல்லையெனில் அப்போதே சட்டையை பிடித்து ராமரை கேள்வி கேட்டு இருப்பேன்)

ப்ரதி :ஏன் பாட்டி அப்போதே நீங்கள் விவரமாகத்தானே இருந்தீர்கள்.இராவணனிடம் இருந்து உங்களை பாதுக்காத்துக்கொள்ள இருந்த துணிவு,உங்கள் கணவரிடம் எதிர்த்து கேட்டு இருக்காலாமே….ஒரு மான் வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் அலையவிட்டு விட்டு,அப்புறம் பாருங்கள் இராவணன் வந்து கடத்திச்சென்றது கூட தெரியாதபடி போய்விட்டது.அவ்வளவு நீங்கள் இன்னோஸ்ண்டாக இருக்க காரணம் என்ன…?

சீதாப்பாட்டி :அதை ஏன்மா கேட்குற..இன்னைக்கு மாதிரி இருந்து இருந்தா சும்மா விட்டு இருப்பேனா….நான் விஜயசாந்தி ஐபி எஸ் மாதிரி எகிறி எகிறி அடிச்சு என் காப்பாற்றிக்கொள்ள முற்பட்டு இருப்பேன்..ஆனா இராவணம் என்னை முறை தவறி இழுத்து சென்றாரே ஒழிய முறை தவறி நடக்கவில்லை..அவர் ஒரு நல்லவர்……..அதாவது…..

விளம்பர இடைவேளைக்குப்பிறகு தொடரும் கேள்விகள்………..

No comments:

Post a Comment