Sunday 12 May 2013

அட்ஷயப் பாத்திரம்...எப்படி திருதியையாக மாறியது..?


நகை வாங்கலையோ.....நகை.... என்று கூவிக்கூவி ஒவ்வொரு நகைக்கடையிலும் விளம்பரம் பண்ணிட்டு இருக்காங்க...அதுக்கு அம்பாஸிடராக...பிரபல நடிகர் நடிகைகளும் வந்து அவங்க கை நீட்டி வாங்குன காசுக்கு மேல கூவிப்போராடுறாங்க....

ஒரு குடும்பம் தங்களுக்கான இன்வெஸ்ட்மெண்டாக நகை வாங்கி வைத்துக்கொள்வதில் தவறில்லை..அதுக்காக இது ஸ்பெஷல் நாள்,இந்தநாளில் நகை வாங்கினால் நகை பெறுகும் என்று நினைப்பது வேடிக்கையான விசயம்.

இன்று எல்லோரும் நகைக்கடைகளில் போய் முட்டி மோதி நகை வாங்குவதை விட...கூட்டம் இல்லாத நாட்களில் சென்று நல்ல டிசைன் ஆகப்பார்த்து நகை வாங்குங்க.....(இது ஒரு சின்ன ஐடியாதான்)

அப்படி இன்றுதான் நகை வாங்குவோம் என்று சொல்பவர்கள் இதற்கு பதில் சொல்லுங்க......

1.கோலார் தங்கச்சுரங்கம்..எந்த அட்ஷயதிருதியை நாளில் தோன்றியதாம்..?

2.திருடர்கள் அட்ஷதிருதியை நாளில் தான் கொள்ளை அடிப்பார்களா..?அவர்கள் வியாபாரம் மட்டும் பெருகிக்கொண்டே போகிறதே..?

3.அட்ஷயம் என்பது வரலாற்றுக்கதைப்படி வற்றாத பாத்திரம்,அந்த பாத்திரம் ஒவ்வொரு நகைக்கடைகளிலும் கொடுக்கிறார்களா...?அப்படி அந்த ஒரு பாத்திரம் மட்டும் கொடுத்தால் போதுமே..தேவைக்கும் அதிகமான நகைகளை நாம் அதில் எடுத்துக்கொள்ளலாமே...?

4.அப்படி அட்ஷயப்பாத்திரத்தில் நகைகள் மட்டும் ஏகப்பட்டது கிடைத்தால் அடுத்தவர்களுக்கு இலவசமாக நாம் யாரேனும் கொடுக்க முன் வருவோமா...?

5.மணிமேகலைக்கு கிடைத்த அட்ஷயப்பாத்திரம்.(மாடுமேய்க்கும் ஒருவன்,பின்னர் அரசனாக மாறியவன் அவன் உபயோகப்படுத்திய பாத்திரம்) காயகண்டிகை என்ற பசி நோயினால்(சாபத்தால்) ஆட்பட்ட ஒரு பெண்ணிற்கு உணவிட்டு அதன் மூலம் அந்த பாத்திரம் அள்ள அள்ளக்குறையாத உணவு பாத்திரமாக மாறியது.அதுவும் உன்னதமான மணிமேகலையின் கை பட்டதால் என்று வரலாறு கூறுகிறது.உணவு பாத்திரமாக இருந்த அட்ஷதிருதியை பாத்திரம் எப்படி திருதியை நாளாக மாறியது..?

6.இன்றைய நாளில் தான் வாங்க வேண்டும் என்று எத்தனை பெண்கள்,சில ஆண்கள் தங்களின் சேமிப்பு மட்டும் அல்லாது சில நகைகளை அடமானம் வைத்து மூட நம்பிக்கையால் இருப்பதை வீணாக்கி புதிதாக பொருள் வாங்கிக்கிறார்கள் தெரியுமா...?வெட்டியாக வட்டி கட்ட வாங்கிய நகையை விற்க முடிவெடுப்பது தான் வீண் வேலை.

7.வியாபார நோக்கோடு இன்றைய நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இடையில் நகை வாங்க சிறந்தநாளாக இருந்த அட்ஷயதிருதியை நாள் இப்போது கார்,மற்றும் இதர பொருட்கள் வாங்க சிறந்தநாள் என்று ஆக்கப்பட்டு உள்ளது...ஏன் எதற்கு இதில் இருந்தே புரிய வேண்டாமா?நம்மை எல்லாம் அரசாங்கம் மட்டுமல்ல வியாபாரிகளும் முட்டாள் ஆக்குகிறார்கள் என்று...?

8.இந்த விஷேச நாட்களில் பயன்பெறுவோர்..,பணக்காரர்களும்,நடிகை நடிககளும்,வியாபாரிகளும் மட்டும் தான்.சாதாரண நம்மைப்போன்றோர் கிடையாது..

9.வட்டிக்கு வாங்கி அட்ஷயதிருதியை நாளில் நகை வாங்க நினைக்கும் ஒவ்வொருவரும் திருந்துங்க...கூட்ட நாளில் நகை நல்ல டிசைன் செலக்ட் பண்ணமுடியாது.அதனால் கூட்டம் இல்லாத செவ்வாய்,சனிக்கிழமை போய் வாங்கினால் நல்ல டிசைனும் பார்த்து வாங்கலாம்..அன்று நம் பர்ஸ்,நகைகள் கூட திருட்டும் போகாது.

இதையெல்லாம் சொல்ல நீ யார் என்று கேட்டால்...நானும் ஒரு நகை வாங்க ஆசைப்படும் பெண் தான்.ஆனால் புத்திசாலியாக நகை வாங்க முடிவு எடுக்கும் பெண்....

கூட்டத்தில் கோவிந்தா போடாதீங்க....நமக்குத்தான் நஷ்டம்.....கூட்டம் இல்லாதப்போ....போய்  கணவரின் பர்ஸ்க்கு வேட்டு வைங்க........!ஆல் த பெஸ்ட்...

3 comments:

  1. கடந்த ஆண்டுகளில் அட்சய திருதியை அன்று நகை வாங்கியதன் காரணமாக யார்வீட்டிலும் செல்வம் சேர்ந்துவிட்டதாக வரலாறு மற்றும் அறிவியல் பூர்வமாக ஆதாரம் ஏதும் இல்லை....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்...

      Delete
  2. made understand Vigilant Department official used to visit "selected" residence for Raids in these days ? is that True mr Mohan

    ReplyDelete