Wednesday 7 October 2015

சாமுத்ரிகா லட்சணம் 5

பழக்கமாக போய்க்கொண்டிருந்தது ஒருநாள் எல்லை மீறிப்போய்கிறது.அதாவது,வீட்டில் மனைவி குழந்தை பெற்றுக்கொள்ளச் சென்று இருந்ததால்,உடன் வேலை பார்க்கும் அந்தப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருகிறார் அந்தக் கணவர்.

ஒ,இது தான் உங்க மனைவியா,என்று வீட்டில் மாட்டியிருந்த கல்யாண போட்டோவைப்பார்த்து அந்தப்பெண் கேட்டதும்,”ஆமாம்” என்று சொல்லி கண் கலங்குகிறார் கணவர்.

ஏன்..என்ன ஆச்சு ஏன் அழறீங்க,என்றவளிடம்.

நான் என் அப்பா,அம்மா விருப்பத்திற்காகவே தான் இவளைத் திருமணம் செய்துகொண்டேன்.ஆனால் என் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு குணம் கூட,அவளிடம் இல்லை..

எனக்கு மனைவியாக வருபவள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருந்தேனோ முதலிரவு அன்றே அந்தக் கனவெல்லாம் முடிந்து போனது,,அவளுடைய செய்கை எல்லாம் கிராமத்து பெண்கள் நடந்து கொள்வது போல் இருந்தது நான் எவ்வளவோ,விட்டுக்கொடுத்துப் போனாலும்,தினமும் என்னுடன் சண்டை போடுவாள்.

என் வேலை பற்றியோ,எனது முன்னேற்றம் பற்றியோ எதுவும் கவலைப்படாமல்,ஏன் வீட்டுக்கு லேட்டா வர்றீங்க,எங்க போய் சுத்திட்டு வர்றீங்க,உங்களுக்கு என் மேல் அக்கறையே இல்லை.எவளையோ நீங்க வச்சுட்டு இருக்கீங்க.அதான் என் மீது உங்களுக்கு ஆசையே ஏற்பட மாட்டேங்கிறது,என்று என்னை சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பாள்.

தினம் தினம் அவகூட செத்து,செத்து வாழ்ந்துட்டு இருக்கேன் தெரியுமா..?என பொய்யாக கண்களை கசியவிட,உடன் இருந்த அந்தப்பெண்ணும் ஆறுதல் சொல்வதுபோல் அவனை மடியில் சாய்த்துக்கொள்ள,கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் சொன்ன அவளை படுக்கையில் படுக்க வைக்கிறான்.

அவளுக்கும் அவன் மீது ஒரு ஈடுபாடு.தன்னுடைய மேல் அதிகாரி,பணம் அதிகம் வைத்து இருப்பவன்.நமது லைப் ஸ்டையெலுக்கு ஏற்றவனாக இருக்கிறான்.அவனுக்கு ஆறுதலாக இருப்பது போல் நடித்தால் நாம் நினைக்கும் அனைத்தும் நமக்காக செய்வான்.என்று நினைத்தபடி அவன் அணைக்கும் போது சும்மாவே இருந்தாள்.

அவள் அமைதியாக இருந்தது இவனுக்கு சாதகமாக ஆகிவிட்டது.கண்ணீரில் நனைந்த அவன்,பின்னர் முத்தத்தில் அவளை முத்தத்தில் நனைக்க ஆரம்பித்தான்.எல்லாம் முடிந்தது.எழுந்து குளிக்கப்போனவளை,மறுபடியும் இழுத்து அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு,தேங்க்ஸ் என்கிறான்.
அவளும் வித் மை ப்ளஸர்.என்கிறாள்.

அடுத்து.. அடுத்து…இந்த உறவு தொடர்கிறது.

மூன்று மாதங்களும் இப்படித்தான்..ஒருநாள் வீட்டில் இருவரும் கட்டியணைத்து படுத்துக் கொண்டிருக்கும் போது,வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது.

கதவின் ஓட்டையில் பார்க்கும்போது,தனது மனைவி கையில் குழந்தையுடனும்,மனைவியின் அப்பா,அம்மாவும் வெளியில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

பயந்தவன்,பெட்ரூமுக்குள் சென்று அவளை எழுப்பி,டிரஸையும் அவளையும் பாத்ரூமுக்குள் தள்ளினான்.

பின்னர் கதவை திறந்து”என்னமா இது,நான் வந்து உன்னை அழைத்து வருகிறேன்னு சொன்னேன்ல,அதற்குள் ஏன் கிளம்பி வந்த என்று கேட்டவனிடம்,

ஆமா குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகிவிட்டது.நீங்க ரெண்டு தடவை தான் வந்து பார்த்தீங்க.போனில் பேசினால் கூட வேலையில் இருக்கேன் அப்புறமா பேசுறேன்னு சொல்றீங்க.உங்களப்பார்க்காமல் இருக்க முடியல.அதான் நீங்க எப்போ வந்து கூப்பிடுறது,நான் எப்போ வர்றது…?அதான் நானே அப்பா,அம்மாவுடன் வந்துட்டேன்.என்றாள்.

குழந்தையைப்பிடிங்க,நான் பாத்ரூம் போய்ட்டு வர்றேன்,என்றவளிடம்,இரும்மா நான் பாதி குளிச்சுட்டு இருக்கும் போது கதவு தட்டியதும் உடனே வந்துட்டேன்.நல்லா குளிச்சுட்டு வர்றேன்.அத்தை,மாமா நீங்க உட்காருங்க,இத்ப்ப் வந்துடுறேன்.

என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான் கணவன்,அங்கே ஆடையணிந்து ரெடியாக இருந்த காதலியை,அவளின் சாலையும்,இவனது கைலியையும் கட்டி பாத்ரூம் ஜன்னல் வழியாக அவளை இறக்கிவிட்டு,கால் பண்றேன்.பை பை…என கையாட்டிவிட்டு,தன் கைலியை கட்டிக்கொணுட் வெளியே வந்தான்.

சொல்லுங்க மாமா பயணம் எல்லாம் எப்படி இருந்தது.குழந்தையை என்கிட்ட கொடு,என்று மனைவியிடம் வாங்கி மடியில் வைத்து,செல்லக்குட்டி,அப்பாவை பார்க்க வேண்டும் என்று அவசரமா வந்துட்டீங்களாடி,என் கன்னுக்குட்டி என்று கொஞ்சினான்.

பாத்ரூம் சென்ற மனைவி”என்னங்க…”என்று கூப்பிட்டதும்,அதிர்ந்தான்…..

அதிர்ந்தது எதனால் என்பதை அடுத்தவாரம் பார்ப்போம்..!

பாத்ரூமுக்குள் இருந்து மனைவிஏங்கஎன்று குரல் கொடுத்ததும் அதிர்ந்து போன கணவன்.குழந்தையை அவனது மாமாவிடம் கொடுத்துவிட்டு,அவசரமாக என்ன ஆச்சு என்று கேட்டபடி பாத்ரூமை எட்டிப்பார்த்தான்.


என்னங்க இது..?பாத்ரூம்ல என்ன பெண்கள் போடுற ஜட்டி இருக்கு என்று கேட்டாள் மனைவி.


பயந்த கணவன் சற்று சிந்தித்து,உடனே ஆமாம்மா,நேத்து மாடில என் துணிய துவைச்சு காயப்போட்டு,இரவு எடுக்கும் போது,இருட்டுல,என் துணியோட,இந்த ஜட்டியும் வந்துடுச்சு.கொடுக்கனும்னு நினைச்சேன்.ஆனா யாரோடதுனு தெரியல,அதான் பாத்ரூம்ல போட்டு வச்சேன்.என்று சமாளித்தான்.


அப்படியா சரி ,நானே நம்ம பிளாட்ல யாரோடதுனு கேட்டு கொடுத்துடுறேன்.என்றாள் மனைவி.


திரும்ப இவனுக்கு பயம் அதிகமாயிடுச்சு,அய்யோ பிளாட்ல யாரிடமாவது கேட்டு இல்லைனு சொல்லிட்டா என்ன பண்ணுவது,நான் அனுப்பி வச்சவ,நல்லபடியா வீட்டுக்குப் போய் சேர்ந்தாலனு தெரியல.முதல்ல ஆபிஸ் கிளம்பிப் போய்.அவகிட்ட கேட்கனும்.என்று யோசித்தபடி இருந்தான் கணவன்.


சகஜமாக இல்லாமல்,சம்பிராதயத்திற்கு எல்லோரிடமும் பேசிவிட்டு,ஆபிஸ் கிளம்பியவனை ஏங்க, இன்னைக்குத்தான் நாங்க வந்து இருக்கோம்,குழந்தையை இன்னைக்காவது ஆசை தீர கொஞ்சுங்க,அதோட எங்க அப்பா,அம்மா வேற இருக்காங்க.மளிகை சாமான் ஒன்னு கூட இல்ல,எல்லாம் வாங்கனும்,அதுனால இன்னைக்கு ஒருநாள் லீவு போட்டு எங்க கூட இருக்கக்கூடாதா என்றாள் மனைவி.


இல்லம்மா,அந்த வேலையை இன்னைக்கு முடிச்சாகனும்,நான் போய் முடிச்சுட்டு எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு,மனைவியை பெட்ரூமில் வைத்து நெற்றியில் முத்தமிட்டுச் சென்றான் கணவன்.


வேலை பிஸியாக இருக்கும் போல அதான் கிளம்பிட்டார்,பாவம்.என நினைத்துக்கொண்டே..,


Sunday 20 October 2013

சுவேதா 2 (என்னுள் ஆணின் அகிம்சை.. பெண்ணின் இம்சை)

ஓ நாம் ஆணாகப்பிறக்கப்போகிறோமோ….இந்த உலகத்தில் என்று சந்தோஷமாக உணர்ந்தேன் என் உள்ளுறுப்புக்கண்டு ஆச்சரியமும் கொண்டேன்.

என்னுடைய கடவுளுக்கு அப்போதே நான் நன்றி சொல்லிக்கொண்டேன்.என் ஆண்மைப்பிறப்பின் சந்தோஷத்தை வெளிவந்து அனுபவிக்க,காலம் இன்னும் ஆகும் என்பதால்  சிறிதுகாலம் அந்த இருட்டறையில் உருண்டைக்குள் ஆதரவாக கை.,கால்களை ஆட்டிக்கொண்டு,,என் வாயினுள் கை வைத்துக்கொண்டு,நகங்களால் நான் தங்கியிருந்த உள் பாகத்தில் தடவிக்கொண்டும்,உள்ளே பொழுதுபோகாமல் விளையாடிக்கொண்டு இருந்தேன். ஆனால் இங்கே என் அம்மாவோ என்னுடைய சேட்டைகளை ரசிக்கக்கூட முடியாமல் சோகத்தில் ஆழ்ந்து இருந்தாள் என்பது எனக்கு அப்போது தெரியாது.

தெரிந்து இருந்தால் கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே…என்று சிந்து பைரவி யில் வரும் பாட்டு மாதிரி கலைந்து போய் இருப்பேன். ஆனால் எனக்கு அப்போது உள்ளுக்குள் நடக்கும் விசயம் தெரிய வந்ததே தவிர,என் அம்மாவின் சோதனை காலம் என்பது நான் உள்ளிருந்தகாலம் தான் என்பதை அப்போது உணரவும் இல்லை.உணரவேண்டிய வயதும் எனக்கு இல்லை.

என் அம்மாவின் வலி நிறைந்த நாட்களாய் ஆகிப்போனது என் உயிர் உள்ளுக்குள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் காலம்.
எனக்கு அப்போது தெரியாது.என் அம்மாவும்,அப்பாவும் ஒருவருக்கொருவர் உறவினர் என்பது, என் பாட்டியின் நாத்தனார் பையன் தான் என் அப்பா,அதனால் உறவு விட்டுப்போகக்கூடாது என்பதற்காக என் அம்மாவை என் பாட்டி கட்டிவைத்துள்ளார்.ஆரம்பத்தில் இருந்தே குடிக்கு அடிமையாகிப்போன என் அப்பாவிற்கு என் அம்மாவை சரிவர பார்த்துக்கொள்ள முடியவில்லை.

இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள்தான் நடந்து கொண்டு இருந்திருக்கின்றன. இந்த சண்டைக்கு நடுவில் என் அப்பா அம்மா இருவருக்கும் இருந்த அன்பிலும்,ஆசையிலும்,காமத்திலும் நானும் எனக்கு முன்பாக என் அக்காவும் கருப்பைக்குள் வாழ வேண்டியதாகிவிட்டது. என் அக்கா எனக்கு முன்பாக இவ்வுலகத்தைக் காண வெளியேறிவிட்டாள். அடுத்துதான் நான் உருவாக்கப்பட்டு கருப்பைக்குள் வளர்ந்து கொண்டு இருக்கிறேன்.

பம்பாயில் தான் என் அம்மாவும்,அப்பாவும் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறார்கள். என்னை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த என் அம்மாவிற்கு பசியும் வேதனையும் தான் மிஞ்சியிருக்கிறது. அதனால் என் அம்மா ,அப்பாவிடம் சொல்லிக்கொள்ளாமல் ரயில் ஏறி எங்க அக்காவை கையிலும் என்னை வயிற்றிலும் சுமந்துகொண்டு ரயிலில் சாப்பிடக்கூட காசு இல்லாமல் பட்டினியாக சேத்துப்பட்டில் உள்ள என் பாட்டி வீட்டிற்கு வந்து தஞ்சம் அடைந்தார்.

என் பாட்டி ஆயிரம் சமாதானப்படுத்திப்பார்த்தும் என் அம்மாவிற்கு என் அப்பாவின் மீது இருந்த கோபம் குறையவே இல்லை. நாளடைவில் என் பாட்டியும் அறிவுரை செய்வதையும், மருமகனுடன் சென்று வாழ் என்று சொல்வதையும் கைவிட்டாள்.

நான் பிறக்கும் நாள் வந்தது. எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம் என் அம்மாவை சந்திக்கப்போகிறேன். வெளி உலகத்தை காணப்போகிறேன்..இந்த நாளுக்காக எத்தனை நாள் ஒரு உருண்டைக்குள் என் வாழ்க்கையை அடைத்துக்கொண்டு இருந்தேன்.அப்பாடா,விடிவு காலம் வந்தது.

இப்போது என் தலை சுற்றி என் அம்மாவிடமிருந்து இருந்து மெல்ல மெல்ல  வெளியேறுகிறேன். மூச்சு முட்டுகிறது.
நானும் என் சுவாசத்தை இழுத்து விட்டுக்கொண்டு வெளியில் வந்து கொண்டு இருக்கிறேன். வெளி வரும் வழியில் வலி தாங்காமல் என் அம்மா கத்தும் சத்தம் என்னை பயப்பட வைத்தது. அந்த சத்தத்தில் நானும் பயந்து போய் கத்த ஆரம்பித்தேன்.

ஒரு வழியாக அம்மாவிடமிருந்து வெளிவந்து விழுந்துவிட்டேன். ஒரு ஆதரவுக்கை என்னை தாங்கிப்பிடித்தது.தலைகீழாக தொங்கவிட்டது.
எனக்கு இத்தனை நாளாக என் அம்மாவின் தொப்புள் கொடி மூலம் வந்த உணவு வழியை வெட்டி எடுத்தனர். வலியில் நானும் என் அம்மாவும் ஒரு சேர கத்த ஆரம்பித்தோம்.

என் அம்மாவிடம் உனக்கு சிங்கக்குட்டி மாதிரி ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கு என்று என் முகத்தை என் அம்மாவிடம் காண்பித்தார்,  பொம்மை போன்ற உருவத்தில் அங்கிருந்த செவிலி.

நானும் என் அம்மாவின் முகத்தை காண கண் முழித்துப்பார்த்தேன்.அம்மாவின் உருவம் தெரிந்தது.அம்மாவின் முகத்தை கண்டு சந்தோஷத்திலும்,பசியினாலும் மேலும் அழுதுகொண்டே இருந்தேன்.

அய்யா நாம் நம் அம்மாவை கண்கலங்க வைத்துவிட்டு வந்துகொண்டு இருக்கிறோமா…?என்ற பாரத்துடன் வெளியில் வந்து விட்டேன்.
‘’ஏய் இங்கபாருடி…உனக்கு ஒரு ஆம்பிள்ள குட்டில பிறந்து இருக்கான்.கண்ண முழிச்சு பாரும்மா…’’என்று என் அம்மாவின் கன்னத்தில் என் பாட்டி கைகளால் தட்டி என்னைக் காண்பித்துக்கொண்டு இருந்தாள்.
என் அம்மா என்னைப்பார்த்தார். அழுதுகொண்டே…,என் நெற்றியில் தன் உதடுகளால் ஈரத்தை பதித்தார். எனக்கும் என் அம்மாவிற்கும் ஆன உறவு அன்றிலிருந்து வெளியுலகத்திற்கு வந்துவிட்டது.

இனி என் வாழ்க்கை வெளியுலக வாழ்க்கையை மையப்படுத்திபோகும்…இதில் இடஞ்சல்,சங்கடங்கள்,சந்தோஷத்தருணங்கள், கேள்விகள், பதில்கள் எல்லாம் நிறைந்ததாகவே இருக்கும்.
ஆனால் நான் நிறைந்தவனாக வாழ்ந்தேனா…..கேள்விகள் அடங்கிய கோப்பைகள்…அதில் ஒவ்வொரு சொட்டுத்தண்ணீராக விடுகிறேன். தாகம் தீர்க்க போதுமானதாக இல்லையெனினும்..உசுரு பொழைக்க இந்த நீர் உதவக் கூடும்.அதனால் எல்லாரும் ஒரு சொட்டு நீரை தொட்டு பருகிக்கொள்ளுங்கள்.


வளரும் சுவேதா… 

Wednesday 9 October 2013

இன்றைய டிரண்ட் என்ன தெரியுமா…?



பழங்காலத்தில் இருந்த பெண்கள் எல்லாம் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.ஒரு போருக்கே தலைமை ஏற்கும் பொறுப்புகளை பல பெண்கள்(அரசிகள்) ஏற்றார்கள்.

இடைப்பட்ட காலத்தில் பெண் அடிமையானாள்..,கீழ்த்தரமாக நடத்தப்பட்டாள்.கணவன் இறந்துவிட்டால்.அவளையும் கணவனின் சிதையில் தூக்கிப்போட்டு கொன்றுவிடும் அளவிற்கு பெண்களின் நிலை மோசமடைந்தது.

பின்னர் பெரியார், அண்ணா,இன்னும் பல தலைவர்கள் போராடி மீட்டு வந்தனர் மீண்டும் பெண் சுதந்திரத்தை..
காலங்கள் ஓட ஓட…..பெண்கள் அதிக அளவில் வளர்ச்சியடைத்தனர்.ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்ற அளவிற்கு பேசி ஜெயித்தும் காட்டினர்.

சமீபகாலமாக பெண்கள் பற்றி கேள்விப்படும்….உண்மை (?) பற்றி அறிந்தபோது வேதனையாகிவிட்டது.இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பெண்குலமே…என்ற ரீதியில் பெண்கள் மற்றவர்களுக்கு தவறாகவும்,தனக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும் தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட அந்தப்பெண் யாரைப்பிடித்தால் நாம் உடனடியாக முன்னேறலாம் என்று சமீபகாலமாக சினிமாத்துறை சார்ந்த நண்பர்களிடம் நல்ல பழக்கம் வைத்துக்கொண்டு,தன் விருப்பத்தை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டே  இருந்தாள்.

யாரும் செட் ஆகவில்லை.எல்லாம் பழகிவிட்டு சிபாரிசு என்று வந்தவுடன் இடத்தை காலிபண்ணிக்கொண்டு போய்விட்டனர்.ஏமாற்றம் அடைந்த அப்பெண் தனக்கு சினிமாத்துறை சார்ந்து என்ன என்ன விசயங்கள் தெரியுமோ அதில் மூக்கை நுழைத்து,அதன்மூலம் பல பிரபல நண்பர்களின் அறிமுகத்தை பிடிக்க ஆரம்பித்தாள்.

அப்போது தான் அந்த நபரை சந்தித்தாள் அப்பெண். நல்ல அழகு,பதவி,பணம் எல்லாம் நிறைந்த அவரைப் பார்க்கும்போது தனக்குள் கணக்குப்போட ஆரம்பித்தாள்.

இவரை எப்படியாவது பிடித்து வளைத்துப்போட வேண்டும்.இவர் மூலம் பல புரடியூஸர்ஸ் மற்றும் டைரக்டர்ஸ் இவர்களை மீட் பண்ணலாம் என்ற நம்பிக்கையில் அந்த நபருடன் நன்கு பழக ஆரம்பித்தாள்.

ஜொள்ளுப்பார்ட்டியான அந்த நபரும் இப்பெண்ணுடன் பழக ஆரம்பித்தார்.பழக்கம் வேகமாக வளர்ந்து நாளடைவில் காதலாகவும் மாறிவிட்டது.

நீ இல்லையெனில் நான் இல்லை..என்ற ரீதியில் ஒருவருக்கொருவர் இணை பிரியாமல் வாழ்ந்தனர்.அந்த சமயத்தில் தான் அப்பெண்ணுக்குத் தெரிந்தது, தன் நண்பருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது.

முதலில் கோபப்பட்ட அப்பெண் நாளடைவில் சரி போகட்டும் அவளை மனைவியாக வைத்துக்கொள்…என்னை மனைவியாகவும்,காதலியாகவும் வைத்துக்கொள் என்றபடி சமாதானம் ஆனாள்.  கல்யாணம் ஆகாத இப்பெண், ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கும் ஒரு தகப்பனுக்குத் தன் வாழ்க்கையை ஏன் பரிசாக தரவேண்டும் என்ற கேள்வி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தியது.

அப்போது தான் தன் தோழி ஒருவள் அப்பெண்ணுக்கு அட்வைஸ் பண்ணினாள். ஏண்டி இப்ப உனக்கு என்ன குறை ஏன் இரண்டாம் தாரமாக போய் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிற..?அவ்வளவு காதலா அவர் மேல்…?என்றவளை..

சிரிப்புடன் நோக்கினாள் அப்பெண்.  நீ வேற போடி காதலாவது கத்திரிக்கையாவது…அந்த ஆளுக்கு நிறைய சினிமாத்துறை சார்ந்த ஆட்களைத்தெரியும்,அதன்மூலம் நான் சினிமா சான்ஸ் தேடிக்கலாம் என்று தான் அவரோடு சுத்திட்டு இருக்கேன்.ஒரு பெரிய சான்ஸ் கிடைக்கட்டும் இந்த ஆளதூக்கி ஓரம் கட்டிட்டு போய்ட்டே இருப்பேன்.என்றாள்.

அதிர்ச்சியானாள் தோழி என்னடி இது முன்னேற்றத்திற்கு விலை உன் வாழ்க்கையா…?என்னடி சொல்றா..அப்போ அவர்மேல் காதல் கொண்டது போல் நடந்துகொள்வது எல்லாம்……

நடிப்பு தாண்டி நாம முன்னேறனும் என்றால் அதுக்கு இணையாக என் ‘கற்பு’ மட்டுமல்ல என் வாழ்க்கையே வைத்து பணயம் ஆடித்தான் ஜெயிக்கப்போறேன்..என்றாள் வெறியோடு…….

இச்சம்பவம் சினிமாத்துறை சார்ந்த இந்தப்பெண்ணுக்கு மட்டுமல்ல,காலேஜ் படிக்கும் பெண் முதல்கொண்டு…அரசியலில் கால்பதிக்க ஆசைபடும் பெண் முதல்கொண்டு எல்லோரும் இன்று இப்படி தான் நினைக்கிறார்கள். பெண்ணின் உடல் அவனுக்குத்தேவைப்படுது, எனக்கு அவன் பணம்,செல்வாக்கு தேவைப்படுது கிவ் அண்ட் டேக் பாலிஸி இதுல என்ன இருக்கு…? எனக்குத்தேவை முன்னேற்றம், பாப்புலாரிட்டி, பணம் இதுமட்டும் தான் என்கிறார்கள் இவ்வகைப் பெண்கள்.

பார்த்தீங்களா இன்றைய டிரண்ட் இதுதான் இப்படித்தான் சில பெண்கள் சில ஆண்களை பயன்படுத்தி வெற்றிகொள்கின்றனர்…


அடுத்து இன்னொரு  டிரண்ட்…..