Wednesday 8 May 2013

சொல்கிறவன் சாவான்....கலைஞர் வாழ்வார்....!


திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் திமுகவின்  தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி பற்றி எல்லோருக்கும் தெரியும்..அவர் சிறந்த பண்முக ஆற்றலாளர் என்பதும் எல்லோரும் அறிந்ததே..

கலைஞர் அவர்கள் தன் 75 ஆண்டுகால பொதுவாழ்வில் கடந்து வந்த பாதையில் சரிபாதி வயது கூட அல்லாதவர்கள்தான் இன்று அவரைப்பற்றி புறம் பேசித் தங்கள் மனதின் தாகம் தீர்த்துக்கொள்கிறார்கள்.
எங்களைப்போல பலருக்குத்தான் அவர் இன்னும் என்னென்ன சாதனைகள் செய்து கொண்டு இருக்கிறார்.எந்ததெந்த வியாக்யாணங்களை எல்லாம் முறியடிக்கிறார், நாட்டுநடப்புகளை நொடிக்கொருதரம் உற்று நோக்கி அதனை எழுத்துப்பணி மூலம் எப்படி வெளிப்படுத்துகிறார், அதற்காக எவ்வளவு படிக்கிறார் என்பது புரியும்.

இதெல்லாம் புரியாத சில பேர் அவரை இந்த வயதில் ஏன் இந்த தேவையில்லாத வேலை,வயதான காலத்தில் வீட்டில் முடங்கிகிடக்காமல்,அறிக்கைவிட்டுட்டு அலையுறாரு என்பது போன்று கேலி நடவடிக்கைகளையும்  மனவக்கிரத்தையும் அவ்வப்போது எழுதியும்  பேசியும் அவர்களுக்குள்ளாக நகைத்துக்கொள்கிறார்கள். அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் மேலே போய் அவரை இந்த வயதிலும் இன்னொருவருடன் தொடர்பு படுத்திப் பேசி தங்கள் தரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி அதை பத்திரிக்கைவாயிலாக வியாபாரித்து, அதில் சோறு தின்றுக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கெல்லாம் சவுக்கடிபோல பதில் தரும் வகையில், கலைஞரின் வாரிசுகளும் ஒரு நிலையில் இல்லை. தளபதி மட்டும் அரசியலில் தீவிரமாக கால் எடுத்து வைத்திருந்தாலும், முழுமையாக அதிகாரம் செலுத்தினால் எங்கே தலைவர் கோபிச்சுக்குவாரோ என்ற எண்ணத்தில் இன்னும் அதிகார கட்டளை ஏதும் இடாமல் தலைவரின் பின்னால் நிற்கும் பிள்ளையாக இருக்கவே விரும்புகிறார்.

மற்ற பிள்ளைகள் தற்போது வாயடக்கம் மட்டுமே கொண்டு எந்தவிதப்பிரச்னைகளிலும் தலையிடாமல் அடங்கி கொண்டு இருக்கிறார்கள். அதுவே நல்லதும்கூட.
பேரன்,பேத்திகள் தங்களுக்குறிய வயதினால்,தாங்கள் புகழ் அடைந்தவர்களின் பிள்ளைகள் என்பதால் அவர்கள் நட்புக்கு ஈடு இணையாக தங்கள் தரத்தையும் மேம்படுத்திக்காட்டிக்கொண்டு,ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து அரசியலுக்கு அப்பாற்பபட்டு அவர்கள் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஆக, தளபதியைத் தவிர வேறு யாரும் தி.மு.கவுக்கு பலமோ பலனோ சேர்க்கும் நிலையில் இல்லை.
இதன் மூலமாக கலைஞர், குடும்ப அரசியல் நடத்துகிறார் என்று கேவலமாக பேசியவர்கள் வாயெல்லாம் அடைத்துக்காட்டி ஆயிற்று.

இருந்தும், இன்னும் குடும்ப அரசியல் தன் குடும்பத்திற்காக கொள்ளை அடித்து சேர்த்து வைக்கிறார் என்று அரசியலில் எதையும் செய்யமுடியாத ஈனமக்கள் கலைஞரை இன்னும் கல்லெறிந்து கொண்டு தான் தங்கள் மீது தாங்களே எச்சிலை துப்பிப் படுத்துக்கொள்கிறார்கள்.
ஈழத்தில் 400000 ஆயிரம் பேரைக்கொன்றார் என்ற அவதூறை இன்னும் தூற்றிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் தன் தாத்தாக்களை தரக்குறைவாக பேசக்கூடிய உத்தமர்கள்..ஆவார்கள் என்றே கருதுகிறேன்.

இன்னும் இயக்கக்கொள்கையோடு,இன்னும் தன் இன மக்களுக்காக,இன்னும் பத்திரிக்கை சுதந்திரத்திற்காக,இன்னும் பல தரப்பட்ட மக்களின் பயன்களுக்காக சிந்தித்துக்கொண்டே இருக்கிறார் கலைஞர்,ஆனால் இந்த முதுமை நேரத்தில் அவரைத்திரும்பிப்பார்க்க குடும்பத்தில் ஆள் இல்லை என்பது தான் தற்போதைய நிலைமை.
இருவீட்டு அம்மாக்களுக்கும் உடல்நிலை சரியில்லை.மருமகள்கள் யாரும் உடன் இல்லை. பேரன்-பேத்திகளுக்கு தாத்தாவின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு எதிலும் ஈடுபாடு இல்லை.கட்சிப்பணியே கழகப்பணியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் தன் உடல்நிலை மேற்பார்வை பணிகளுக்கிடையே மக்கள் பணியையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை.

அவரை வீட்டில் ரெஸ்ட் எடு,அல்லது தயவு செய்து செத்துப்போ என்று கூச்சலிடும் கூலிக்காரர்கள்..தான் தன் வாழ்க்கையில் ரெஸ்ட் எடுக்க வேண்டியவர்கள்.அவர்களையும் எதுவும் கூறாமல்,அதிமுக ஆட்சியின் பொய் பித்தாலாட்டங்களை அம்பலப்படுத்திக்கொண்டும். ஜெயலலிதாவின் புளுகுகளுக்கு பதில் அளித்துக்கொண்டும் ஜெயலலிதாவின் பொய் முகத்தை ஆதாரத்தோடு கிழித்துக் காண்பித்துக்கொண்டு இந்த வயோதிகத்திலும் தன் மூளையை கான்கீரிட்- கிரில் போல் உறுதியாக ஆக்கிக்கொண்டு வளரும் 89 வயது இளைஞருக்கு யாரும் துணையும் தேவையில்லைதான்.

தன் வழியையும்,பார்த்துக்கொண்டு,தன் வழி நடக்கும்  தொண்டர்களின் மூச்சாக விளங்கும் கழகத்தின் பணியையும் பார்த்துக்கொண்டு இன்னும் பல ஆண்டுகள் நமக்காக வாழ்வார் கலைஞர்.
அந்த தன்னம்பிக்கையோடு அவரும் இருக்க நாங்களும் பின்பற்றி இருக்கிறோம். அவரின் மேல் அச்சம் கொண்டவர்கள் மட்டும் இன்னும் பிதற்றிக்கொண்டு வாழ்வதைக் கைவிட்டு,அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்…

7 comments:

  1. நல்ல பதிவு....
    வாழ்வார்...வெல்வார்..!

    ReplyDelete
  2. நன்றி சகோதரி அருமையான பதிவு.





    ReplyDelete
  3. மிக்க நன்றி அனைவருக்கும்.

    ReplyDelete
  4. மிக அருமையான கருத்து. உண்மையானது... நேர்மையானது... மறுக்கமுடியாதது...பாராட்டுகள்!

    ReplyDelete