Friday 10 May 2013

சம்பாத்தியம் மட்டும் போதுமானது இல்லை.....செக்ஸூம் தேவை தான்..!


கணவனும் மனைவியும் இல்லறம் நன்றாக நடத்துகிறார்களா…?நாம் ஒவ்வொருவரின் வீட்டிலும் சென்று பார்ப்பதில்லை..பார்த்தால் வீட்டுக்குள் சென்று அவர்களின் பாத்ரூமை எட்டிப்பார்ப்பது போல் ஆகும் என்கின்றனர் சமூக சிந்தனையாளர்கள்.

நாம் சிந்தனையாளர்கள் பக்கம் யோசிக்க வேண்டியதில்லை. நம் குடும்பப் பிரச்னையாகவே பார்ப்போம்.

ஒவ்வொரு பெண்ணின்,ஆணின் பிரச்னைகளும் நமக்கான பிரச்னையாக பார்க்கவேண்டும்.இன்று படித்து வேலைப்பார்க்கும் சில பெண்கள் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் “எனக்கு அவனோடு வாழப்பிடிக்கல,அவன டைவர்ஸ் பண்ணிடுங்க” என்று முதல்நாள் தந்தையிடம் சொல்லி முடிவெடுத்துவிட்டு மறுநாள் கோர்ட் படி ஏறிவிடுகிறாள்.

அவர்களுக்குள் என்ன பிரச்னை? என்று பெற்றவர்களும் கேள்வி கேட்பதில்லை.மகள் வேண்டாம் என்கிறாளா…சரி வந்துவிடு எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அப்பாவும்,கல்யாணத்தின் போதே அவன் நடவடிக்கை சரியில்லை.எதர்கெடுத்தாலும் அவன் அம்மாவைக்கேட்டு தான் செய்தான்.இப்படி இருப்பவன் உனக்கு சரிப்பட மாட்டான் என்று அம்மாவும் எவ்வளவு அந்த பெண்ணின் மனதில் விஷத்தை ஏற்ற முடியுமோ அவ்வளவு ஏற்றிவிட்டு அதோடு சேர்ந்து கோர்ட் படியும் ஏற்றிவிடுகிறார்கள்.

யாரும் சென்று அந்த மாப்பிள்ளையிடமோ,பெண்ணிடமோ உங்களுக்குள் என்ன தான் பிரச்னை என்று கேட்பதேயில்லை.

திருமணமான புதிதில் மையமாக வரும் பிரச்னை ஈகோ மற்றும் செக்‌ஷூவல் சார்ந்த பிரச்னையாகத்தான் இருக்கமுடியும்.இப்போதெல்லாம் வரதட்சனை பிரச்னை என்பது வெகுவாக குறைந்துவிட்டது.மேக்ஸிமம் மருமகள்,வைக்கும் வாதத்தில் தான் மாமியார்கள் நெருப்பு பற்றியது போல் உணர்கிறார்கள்.

21 வயது அல்லது 23 வயதில் தன் வாழ்க்கைத்துணையை கழட்டிவிட்டு வேறு வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்வதில் தயங்குவது இல்லை.இன்றை கார்பரேட் சொஸைட்டி பெண்கள்.ஆண்கள் 29 வயதில் திருமணம் செய்துகொள்வதால் தாங்கள் ஒரு அளவிற்கு உலகநடை,இயல்பு உள்ளவர்களாக வாழ்கின்றனர்.ஆனால் செக்ஸில் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.

சம்பாத்தியம்,கார்,மால்களில் சினிமா,ஹோட்டல்களில் கேளிக்கை மட்டுமே ஒரு பெண்ணை திருப்திபடுத்திவிடும் என்று எண்ணி வாரத்தில் ஒரு நாள் செக்ஸ் வைத்துக்கொண்டால் போதும் என்ற அளவிற்கு ஆண்கள் தயாராகிவிட்டார்கள்.

என்ன தான் பெண் சுதந்திரமாக வாழப்பழகி விட்டாலும் கணவனிடம் எனக்குத்தேவை இல்லற சுகம் என்று வெளிப்படையாக பேசத்தயங்குவாள்.இந்தத்தயக்கமே நாளடைவில் விரக்தியாக மாறி ஒருவருடத்திற்குள் குழந்தை பிறக்குதோ இல்லையோ…டைவர்ஸ் அப்ளிகேஷன் கிடைத்துவிடுகிறது.

வேதனையான விசயம் இதை பெற்றவர்களிடமோ,அல்லது மற்றவர்களிடமோ பகிர்ந்து கொள்ளமுடிவதில்லை.அதற்காக வேறு காரணங்கள் தான் சொல்லப்படுகிறது ஆண் பெண் இருவரிடமிருந்தும்.
திருமணப் பந்தம் என்பது இல்லறத்தில் ஒரு உறுதியை,ஊக்கத்தை கொடுப்பது மட்டுமல்ல..உணர்வுகளுக்கு வேகத்தையும் அதன்மூலம் திருப்தியையும் கொடுக்கக்கூடிய ஒரு உன்னதமான உறவு தான் கணவன் ,மனைவி உறவு.

இந்த உன்னதத்தை.இவன் வேண்டாம் அல்லது இவள் வேண்டாம் என்று கூறிவிட்டு வேறு யாரிடம் பெற முடியும்,அல்லது அடுத்தவரிடம் சென்று கெஞ்சிக்கூத்தாடி ஒரு சுகம் பெறுவதற்கு உற்றாரிடமே கேட்டு அல்லது பேசி புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்.

முழுவதுமாக செக்ஸில் ஈடுபாடு இல்லாதவர்களைத்தான் மருத்துவரிடம் காண்பித்து சரி செய்ய வேண்டும்.எனவே அவசரமாக முடிவு எடுத்து வாழ்க்கையை வீணாக்குவதை தவிருங்கள்.பெற்றவர்களின் மனபாரத்தை அதிகரிக்காதீர்கள்.

தேவையான விசயங்களை தேவைப்படும் நேரத்தில் தெளிவு படுத்த பழகிக்கொள்ளுங்கள்.

செக்ஸூக்கு முழுமையான தீர்வு அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

7 comments:

  1. தைரியமான, அவசியமான பதிவு. சபாஷ் சிஸ்டர்!

    ReplyDelete
  2. பூங்கதிர் சார் சொன்னதை போல மிக தைரியமான அவசியமான பதிவுங்க அக்கா...

    தொடருங்கள் நன்றி....

    ReplyDelete
  3. but neengalum coat gopinath mathiri corporate na IT mattumthan refer panreengannu ninaikiren.
    Indian railways , LIC kooda ippo corp than..
    Corporate mfg coy niraya irukkirathu aanaal corp enravudan ellorukkum ninaivil varuvathu IT sector mattumthan , avunga kalachara seeralivukku karangal pala undu.

    ReplyDelete