Monday 20 May 2013

சீதாப்பாட்டி.......நச் பதில்....!


விளம்பர இடைவேளையின் போது சீதாப்பாட்டி என்னிடம் வந்து யம்மா..பொண்ணு நான் நல்லாத்தானே பேசுறேன் என்றார்கள்.சூப்பரா பேசுறீங்க பாட்டி…..அப்படியே தொடருங்க….என்றதும்,விளம்பரம் முடிந்து

ஸ்டார்ட் கேமரா என்றது யூனிட்…..

வெல்கம் பேக்… … நம்ம நாட்டுப் பெண்களின் கற்புக்கு உதாரணமாகக் காட்டப்படும் சீதை, கண்ணகி இவர்கள் போன்றோர், தங்களை அடிமையாக்கி வைத்த தங்களின் குடும்பச்சூழல் பற்றி விரிவாகப்பேச அழைக்கப்பட்டார்கள்.ஆனால் கண்ணகி கொஞ்சம் காலதாமதம் ஆகும் என்பதால் சீதை இப்போது நமது அரங்கிற்கு வந்து நம்முடன் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.தொடர்ந்து அவரிடம் கேள்விகளை கேட்கலாம்.

ப்ரதி ;பாட்டி ,சொல்லுங்க….இராவணன் உங்களை கடத்திட்டுப்போய் என்ன செய்தார்.அதற்கிடையில் சூர்ப்பனகை என்ற இராவணனின் தங்கையை ஏன் உங்கள் கணவர் மூக்கை வெட்டி அனுப்பினார்.அதுபற்றிய உங்கள் கருத்து என்ன…?

சீதைப்பாட்டி :லட்சுமணன் எங்கேயும் போகாதீங்க அண்ணி என்று கட்டளை இட்டுச்சென்ற பிறகு இராவணன் வயோதிக சாமியார் வடிவில் வந்து என்னிடம் உணவு கேட்டார்.நானும் கோட்டைத்தாண்டி வந்து உணவிட்டேன்.அப்போது அவரின் கைவிரல் கூட என் மேல் படாமல் என்னை அன்னவாகனத்தில் கடத்திச் சென்றார்.

அங்கு சென்ற பிறகு தான் எனக்குத்தெரிந்தது.தன் தங்கையின் மூக்கை அறுத்து அவமானப்படுத்தியதற்குத்தான் என்னை பழி வாங்குவதற்காக கடத்திச்சென்றார் இராவணன் என்பது, இராவணனுக்கு இருந்த கோபத்திற்கு என்னையும் அதுபோல் ஒச்சம் ஆக்கியிருக்கலாம், அல்லது பழிக்குப்பழி ஏதாவது செய்து இருக்கலாம்.ஆனால் அவர் அப்படி ஏதும் செய்யாமல் இராமனை தன் பக்கம் நியாயம் சொல்லும்படி தான் அழைத்தார்.அதற்குக்கூட என் கணவர் தன் மெய்க்காப்பாளன் அனுமாரை அனுப்பித்தான் என்னை நோட்டம் விட்டு வரச்சொன்னார். என் கணையாழியை கொடுத்து நான் நன்றாக இருப்பதாகக்கூறி அனுப்பினேன்.
பின் எப்படியோ போர் மூண்டு நான் மீட்கப்பட்டு,என் கணவனை ஆசையோடு பார்க்க வந்தேன்..


வந்ததும் என்னை நோக்கிய இராமன் நீ சுத்தமாக வந்து இருப்பாய் என்பது எனக்குத்தெரியும்,ஆனால் ஊரார் முன்னிலையில் நீ உன் சுத்தத்தனத்தை எல்லோருக்கும் அறியும் படி நிரூபி என்றார்.
எனக்குச் செத்துவிடுவது போல் ஆகிவிட்டது.கொடூரன் என்று எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இராவணன்,என் மீது சுட்டுவிரல் கூட படாமல் என்னை அண்ணன்,அப்பா மாதிரி ஒரு அக்கறையோடு அவர்கள் குடும்பத்து பெண்களை வைத்து என்னை கவனித்துக்கொண்டார்.

ஆனால் என் தூயத்தன்மை பற்றி அறிந்த என் கணவரே இப்படி கேட்டுவிட்டாரா…என்று நானும் தீயை மூட்டி அதில் இறங்கி நான் தூய்மையானவள் என்பதை நிரூபித்துக்காண்பித்தேன்.
ஆனால் இன்றுவரை எனக்கு அதில் கொஞ்சம்கூட உடன்பாடு இல்லை.இராமனின் செய்லகள் எனக்கு வெறுப்பை ஏற்றியது.ஆனாலும் நான் பத்தினி, கண்ணியமானவள் என்று எல்லோரும் போற்றுவதால் அதற்கு ஏற்ப வாழ, மன்னிக்கவும் நடிக்க வேண்டியதாகிப் போனது.

எனக்குள் இருக்கும் பெண் தன்மையை கணவனே சோதித்தபின் அவர் கணவனே அல்ல என்று தூக்கிப்போட்டுச் செல்ல அன்று என்னால் முடியவில்லை.ஆனால் இன்றைய பெண்களை பார்க்கும் போது,நாமும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.
என்ன செய்ய என் வாழ்க்கை முடிந்துவிட்டது.இனிமேலாவது வரும் பெண் சந்ததியினர் என்னைப்போல் முட்டாள்த்தனமாக இல்லாமல் கணவனே கண்கண்ட தெய்வம் என்றில்லாமல்.சகதோழனாக மட்டும் நினைத்து வாழ்க்கையை வாழப்பழகிக்கொள்ளுங்கள். இதை சொல்வதற்காகத்தான் நான் இவ்வளவு தூரம் வந்தேன்.இப்போதும் என் கணவன், எங்கே போய்விட்டாளோ என்று தேடிக்கொண்டு இருப்பார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு இன்னும் எத்தனை தீக்குழி இறங்கச்சொல்லப்போகிறாரோ தெரியல…எனு கண்ணீர் முட்டப் பேசினார்.
எங்கள் தொலைக்காட்சி யூனிட்டே கண்ணீர் மல்க நின்று… நிகழ்ச்சி முடித்து சீதாப்பாட்டியை வழி அனுப்பி வைத்தோம்.

இராமனின் மனைவி சீதையை கற்பனை பாத்திரமாக வைத்து இந்நிகழ்ச்சி இருந்தாலும்,மற்ற சர்ச்சைக்குள் போகாமல்..ஒரு கணவனாக இராமன் சரியானவர் இல்லை என்பதை சீதாவின் பார்வையில் இருந்து நோக்கப்பட்டது..இது தான் உண்மை நிலை கூட……

(இது கற்பனை ஒளிபரப்பு தான் என்றாலும் எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு) 

7 comments:

  1. அருமையான பதிவு ...புரிந்து கொண்டவர்களுக்கு மட்டும் ...

    ReplyDelete
  2. பலர் இதிகாசங்களின் சிறு பகுதியை எடுத்துகொண்டு மீண்டும் தங்கள் கற்பனையில் எழுதி பார்த்திருக்கிறார்கள் அதை போல நீங்களும் உங்கள் கற்பனை குதிரையை பறக்கவிட்டு உங்கள் பார்வையில் எழுதி உள்ளீர்கள் ..

    நல்லது நன்றி

    ReplyDelete
  3. பலர் இதிகாசங்களின் சிறு பகுதியை எடுத்துகொண்டு மீண்டும் தங்கள் கற்பனையில் எழுதி பார்த்திருக்கிறார்கள் அதை போல நீங்களும் உங்கள் கற்பனை குதிரையை பறக்கவிட்டு உங்கள் பார்வையில் எழுதி உள்ளீர்கள் ..

    நல்லது நன்றி

    ReplyDelete
  4. ரொம்ப அருமையா இருந்தது தோழி..

    ReplyDelete
  5. கற்பு என்பதே கற்பனையான விஷயம் தான்.. ஒரு சின்ன தோலின் (ஹைமன்) இருப்பு தான் கற்பு ன்னு சொல்லிடுருக்கு ஒரு கூட்டம். அந்த தோல் உங்களுக்கு இல்லையா? கவலைபடாதீர்கள்.. செயற்கையா அதை பொருத்திடலாம்ன்னு பேசுது இன்னொரு கூட்டம்... கற்புக்கு எடுத்துக்காட்டு ன்னு சொல்லுற இந்த சீதாவோட (உண்மையில் அவள் இருந்திருந்தால்) மனநிலை நீங்க சொன்ன மாதிரி தான் இருந்திருக்கும்... அவளும் ஒரு பெண் தானே..

    ReplyDelete