Tuesday 28 May 2013

மே 29 “வெறும் திறக்க” மட்டுமே செய்கிறார் ஜெயலலிதா......!


அடுத்தவர்களின் நற்செயலை தன் செயலாகக்காட்டிக்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திறமையைக் கண்டு எல்லோரும் வியப்படைகிறார்கள்.

எப்படி நம்மால் மட்டும் இப்படி பொய்மாறியை மும்மாறியாக பொழிய வைக்க முடிகிறது என்று தன் கீழ் இருக்கும் அமைச்சர்களே வியக்கும் அளவிற்கு ஜெயலலிதா தலைமையில் அரசாட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பொதுமக்களாகிய நாமும் நடப்பதெற்கெல்லாம் ஜிங்..ஜாக் போட்டுக்கொண்டு அமைதி காக்கிறோம்.எங்கே எதிர்த்து கேள்வி கேட்டால் கேஸூம்,போலீஸூம் தேடி வருமோ என்ற பயத்தில் வாயைக்கூட திறப்பற்கு கூட யோசிக்கிறோம்.

பேப்பரிலும்,செய்திகளிலும் ஜெயலலிதா ஆட்சியில் சாதனை ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் வெற்றி…போராடி ஜெயித்துள்ளார் முதல்வர் என்று போஸ்டர் அடிக்காதகுறையாக விளம்பரப்படுத்துகிறார்கள்.

கலைஞரும் ”பொய்மையும் வாய்மையிடத்து புறைதீர்த்த” என்ற திருக்குறள் கூற்றுக்கு ஏற்ப உண்மையை மறைத்து பொய் சொன்னால் கூட அது மக்களுக்கு பயன்படகூடியதாக இருப்பின் வரவேற்கிறோம் என்று தங்களால் நடந்ததை அதிகமாக வெளிப்படுத்தாமல் ஒரு சிறிய விசயமாக முடித்துவிடுகிறார்.

என்ன தான் நடக்கிறது இங்கே..ஏன் அடுத்தவர்கள் செய்த எதையும் பொறுத்துக்கொள்ள முடியாத..அல்லது அவர்கள் பெயரைக்கண்டாலே எரிச்சல் அடைகிற ஜெயலலிதா ஒகேனக்கல் திட்டத்தில் தன் பெயரை பிரபகண்டா படுத்திக்கொண்டு ஏன் திரிகிறார்.

ஓட்டு அரசியல் செய்கிறார்.ஆலோசனை சொல்ல இப்போது நல்ல ஆட்களை உடன் வைத்து இருக்கிறார்.அதனால் ஒவ்வொரு செயலையும் செக் வைப்பது போல காய் நகர்த்திச் செய்ய முற்படுகிறார்.நல்லவிசயம் தான் இவரது செயலால் மக்கள் நலன் பெற்றால் போதும்..

அதற்காக யாரால் எப்படி ஏற்பாடு செய்யப்பட்டு இந்தத்திட்டம் தொடங்கப்படப்போகிறது என்று வரலாறு தெரியாமல் சில பொய்யிலீகள் பொய்யாக விமர்சனம் பண்ணிக்கொள்கிறார்கள்.அந்த பொய்யீலீகளுக்கு இந்த ஆதாரம் தேவை.

தருமபுரி,கிருஷ்ணகிரி,ஓசூர் ஆகிய மூன்று நகராட்சிப்பகுதிகளில் உள்ள 18 ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறாயிரத்து எழநூத்து ஐம்பத்து ஐந்து குடியிருப்புகள், மொத்தம் 30 லட்சம் மக்கள்.

அவர்களில் பெரும்பாலனவர்கள், பற்களை மஞ்சள் ஆக்கக்கூடிய,,மூட்டுத்தேய்மானம்,முதுகெலும்பு,கை,கால் வளைதல்,முடக்குவாதம் போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்தனர்.
மோசமான தண்ணியினால் மிகவும் உச்சகட்ட நோயின் தீவிரம்  மக்களை பாதிப்படையச்செய்கிறது என்பதை புரிந்து கொண்ட திமுக தலைமை முப்பது லட்சம் மக்கள் இந்நோயின் தீவிரத்தில் காக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 2007-2008 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை 23.3.2007 அன்று தமிழகச்சட்டப்பேரவையில் அளித்தனர்.

அங்குள்ள பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய பாதுக்காக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரை வழங்கவேண்டும்.அதற்கு ஒரே தீர்வான ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் திட்டம்,ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் நிதியுதவிக்காக மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது.
அதன்படி,ஆரம்பகட்ட ஆய்வுகளை அந்த மாவட்டங்களில் மேற்க்கொண்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.அதை ஏற்ற மத்திய அரசு அதற்கான செயல்பாடுகளை அரசு மேற்க்கொள்ளும் என்று கூறியது.

இந்த செயல்பாடுகளை அப்படியே விட்டுவிடாமல் அப்போதைய திமுக கழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு க ஸ்டாலின் அதிகாரிகள் குழுவுடன் ஜப்பான் நகர் டோக்கியோ சென்று அங்குள்ள பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் இயக்குனர் திரு.டிசியோகுசி அவர்களை 6.2.2008 அன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்விளைவாக 9 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கும் சேர்த்து நிதி ஒதுக்கித்தருவதாக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி உறுதி அளித்தது.

அதன் அடிப்படையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களால் அடிக்கல்லும் நாட்டப்பட்டது.1334 கோடி ரூபாய் செயல்படுத்திட  25.2.2008 அன்று திமுக தலைமையில் தான் ஆணைகளும் வெளியிடப்பட்டன.
இது ஐந்து கட்டங்களாக நடைமுறைபடுத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் தருவாயில்,இன்றைய அதிமுக அரசு அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைக்காமல் பெரிய மனது பண்ணி ஒகேனக்கல் திட்டத்தை மே 29 அன்று இங்கிருந்தே கான்பிரன்ஸ் மூலம் ஜெயலலிதா தலைமையில் திறந்து வைக்க ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா செய்த ஒரே ஒரு காரியம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை  ஒரு பட்டனை அமுக்கி திறந்து வைக்க உள்ளார் என்பது மட்டுமே….ஆனால் ஏதோ அவரே எல்லா ஏற்பாடுகளையும் செய்து முப்பது லட்சம் மக்களின் வாழ்வாதரத்திற்காக பன்னாட்டு வங்கியின் காலிலும் மத்திய அரசின் காலிலும் விழுந்து கெஞ்சி கூத்தாடி வாங்கி அதைத்தன் கையால் திறந்து வைக்கிறார் என்பது போல் சீன் போடப்படுகிறது.
அதுக்கு ஜெயலலிதாவும்  வாயை மூடிக்கொண்டு அடுத்தவன் பிள்ளைக்கு தன் பெயரை வைப்பதை உணர்ந்து மனமகிழ்வடைகிறார்.

எப்படியோ 30 லட்ச மக்கள் பயன் அடைந்தால் சரி….ஆனால் அவர்களின் நினைவில் திமுக செய்த செயல்பாடுகள் மறந்து இன்று வெறும்  திறக்க மட்டுமே இருக்கும் ஜெயலலிதாவை பாராட்டி புகழாரம் செய்தால்…என்ன செய்வது.

காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது...அந்தப்பொன்னான நினைவுகள்.....

3 comments:

  1. akka yepdi edhellam pandringa konjam solli thangale pls

    ReplyDelete
  2. title konjam virasama ayirumonnu payama irukku, yenna naan lam antha kaalathila Radha Ravi madatha vimarsanam seithathai ketrukken

    ReplyDelete
  3. அக்கா இந்த திட்டம் 2007-2008 யில் தான் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு முன் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. பொக்ரான் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து நிதி மறுக்கப்பட்டு பின்பு அம்மையின் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு அடுத்த கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தகவல்களை சரியாக பதிவில் தரவும்

    ReplyDelete