Thursday 16 May 2013

ஈராண்டு சாதனை.. உங்களுக்கு….. வேதனை.. எங்களுக்கு…. !


நீங்க சொன்னதை எதை முழுதாக நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்..தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓட்டு வாங்குவதற்காக அள்ளிவிட்டீர்கள்.எழுதிக்கொடுத்ததை படித்து எப்படியோ பாஸ் பண்ணிட்டீங்க..

நாங்களும் சரி நாட்டுக்கு நல்லது நடக்கட்டும் என்று ஓட்டுப்போட்ட மக்களின் உள்ளம் கருதி உங்களை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தோம்.ஆனால் நீங்களோ அதை ப்யூட்டிபார்லராக நினைத்து வெறும் அழகு படுத்தும் பேச்சுக்களை மட்டுமே சட்டமன்றத்திலே கூறிக்கொண்டு இருக்கிறீர்கள்.

சரி எப்படியோ கொஞ்சமாவது ஏதாவது நல்லது செய்வீங்க என்று உங்கள் மேல் நம்பிக்கையில்லாதவர்கள் கூட கூறிக்கொண்டு இருந்தார்கள்.ஆனால் அவர்களுக்கு நீங்கள் இட்லி கடை(அம்மா உணவகம்)வைத்துக்கொடுத்து நல்ல ஆப்பு…வைத்துவிட்டீர்கள்..
இலவசங்களை வாங்கத்தயாராக (ஓட்டுப்போட்டு) ஏமாந்த மக்கள் இருந்ததும்,அவர்களை பிச்சைக்காரர்களாகவும் ஆக்கமுட்பட்டுவிட்டீர்கள் என்பது உங்கள் ஆயாக்கடையின் மூலம் தெளிவாகத்தெரிந்துவிட்டது.

இனி நீங்கள் சொன்னது….எது..செய்தது ..எது என்பதைப்பார்ப்போம்…!

1.காவேரியில் தமிழ்நாட்டின் உரிமை மீட்டெடுப்பு (தமிழ்நாட்டின் உரிமையை நீங்கள் முதலில் எங்களுக்குத்தாருங்கள்)

2.இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் (ஆமாம் மூப்பினால் இறந்தவர்களுக்கு என்று சொல்லி வறட்சி நிவாரணம் கொடுத்த உங்களை வாழ்த்த வயதில்லை)

3.உணவு பாதுகாப்பை உறுதி செய்ய 20 கிலோ விலையில்லா அரிசி (இதற்குப்பெயர் உணவுப்பாதுக்காப்பு அல்ல ஓட்டுபோட்ட மக்களுக்கு நீங்கள் பையில் போட்ட பிச்சை)

4.வெளிச்சந்தை விலையைக்கட்டுப்படுத்த ரூ 20 விலையில் ஒரு கிலோ அரிசி.(வெளிச்சந்தை வியாபாரிகளிடம் உங்கள் அமைச்சர்களும் நீங்களும் பயன்பெற்றுவிட்டு ஏழைகளுக்காக நீங்கள் போடும் நாடகத்தின் உச்சகட்டம்)

5.ஏழை மக்கள் வயிறார உண்ண அம்மா உணவகங்கள் (ஏழை மக்கள் அவசரகால சிகிச்சைக்கு செல்வதற்காக திமுக ஆட்சியில் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் திட்டத்தை கலைஞரின் போட்டோ ஏன் போட்டார்கள் என்று கூவிக்கூவிக் கேட்ட நீங்கள் உணவகத்தில் ஏன் உங்கள் போட்டோவையும்,அம்மா என்று உங்கள் அடையாளத்தையும் போட அனுமதித்தீர்கள்,,எந்த மரத்தடி சோசியர் சொன்னார்…பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுங்கள் உங்கள் ஆயுசு கெட்டி என்று?)

6.விலையில்லா மிக்ஸி,கிரைண்டர்,மற்றும் மின் விசிறி (முதல்கட்டம் தேர்தல் முடிந்து பதவி ஏறிய போது கொடுத்தீர்கள்,அடுத்த கட்டம் கொடுக்க இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகுமோ..?ஏனென்றால் அப்போது தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும்)

7.மாணவ,மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி…(எங்கே எப்போது யாரால் எத்தனை பேருக்குக் கொடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும்,ஏனென்றால் 12 முடித்த மாணவ,மாணவியர்கள் ஒருசிலரைத்தவிர மற்றவர்களுக்கு இன்னும் வரை மணினி கிடைக்கவே இல்லை)

8.ஏழை பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் மற்றும் ரூ 50,000 வரை திருமண உதவி (இதெல்லாம் நடக்குறமாதிரியே தெரியலையே…இதையெல்லாம் சாதனைப் பட்டியலில் போட்டு, ஏழைப்பெண்களின் வாழ்க்கையை வேதனை ஆக்காதீர்கள் ப்ளீஸ்)

9.விலையில்லா கறவைமாடுகள்,ஆடுகள் (ஓசோன்ல ஓட்டை விழுந்தாக்கூட பரவாயில்லை.கொஞ்சபேருக்காவது கொடுத்து ஏழை வயிற்றில் பாலை வாருங்கள்)

10.சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் (2020 யில் முடிந்துவிடுமா…கட்டிட வேலை ?)

11.65 லட்சம் மரக்கன்றுகள் (அதென்னா செய்வதெல்லாம் 65……. ஓ உங்க வயதோ….?)

12.முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டம் (வருமானத்திற்கு குறைவானவர்கள் இலவச ஆப்ரேஷன் பண்ணுவதற்கான திட்டம் நடந்துட்டு இருந்ததை மூடுவிழா பண்ணிட்டீங்க…அப்புறம் எதுக்கு புதுசா ஒரு திட்டம்..?)

13.அனைத்து நலத்திட்டங்களும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு விரிவாக்கம்.(இப்படி போடுற பிட்டுல தான் இன்னும் நீங்க நிக்கிறீங்க…)
இப்படி எந்த திட்டமாவது நீங்க முழுசா செயல்படுத்தி இருக்குறீர்களா என்று பாருங்கள்..பின்னர் இன்னும் இன்னும் அறிவிப்பு மட்டுமே வழங்கிக்கொண்டு இருக்கும் உங்கள் விளையாட்டுத்தனத்தையும் நிறுத்துங்கள்.,

மக்கள் ஓரளவுக்கு செய்தாலே மறந்துவிட்டு அடுத்த கட்சியை தேடி அலைவார்கள் ஓட்டுப்போட….அதனால் இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கு….கவலைப்படாதீங்க..அதுக்குள்ள அவசரப்பட்டு சாதனை என்று அறிக்கை கொடுத்து அசிங்கப்பட்டுக்காதீங்க.. ஏதாவது மக்களுக்கு பயன்படக்கூடிய சாதனைகளை செய்து உங்கள் பதவியையும்,உங்களையும் மக்கள் மறக்காமல் இருக்கும்படி ஏதாவது செய்ங்க…

ஈராண்டில் செய்யாததை மூவாண்டில் செய்ய வாழ்த்துக்கள்………

1 comment:

  1. கலைஞர் கொடுத்த வீட்டை விட இப்பொழுது கொடுத்த வீடு அதிகம் .அதுவும் தொகை 21000000 ..கொஞ்சம் வெளியில் விசாரிச்சுட்டு பேசுங்க .

    ReplyDelete