Friday 19 July 2013

கணவனின் நண்பன் காதலன்.... கணவனுக்கு......!

ஒரு பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும் அப்போது நான் மாசமாக இருந்தேன்.மாதமாதம் லேடி டாக்டரை மீட் பண்ணுவதற்காக செல்வேன்.நிறைய லேடிஸ் வருவாங்க..அப்போ ஒரு திருமணம் ஆன பெண் என்னுடன் பழக்கம் ஆனாங்க.

மிகுந்த சோர்வுடனே எப்போதும் தெரிவாங்க.இரண்டு தடவை அவங்க பார்த்த போதும் அப்படியே தெரிந்ததால் ,என்ன ஆச்சு ஏன் எப்போதும் டல்லாக இருக்கீங்க.திருமணம் ஆன புதிது தானே ஜாலியாக இருக்ககூடாதா ?என்பேன்.

கணவர்கள் எல்லாம் டோக்கன் நம்பர் வரும் வரை வெளியில் நின்று கொண்டு இருப்பார்கள்.அதனால் நாங்கள் ஃப்ரியாக பேசும் வாய்ப்பு கிடைத்தது.முதல் தடவை நான் கேட்டதும்”இல்ல,எனக்கு திருமணம் ஆகி எட்டுமாதம் ஆகிவிட்டது,அதற்குள் இருமுறை அபார்ஷன் ஆயிடுச்சு.அதான் யோசனையா இருக்கு..என்ன ப்ராப்ளம் என்று தெரியல.டாக்டரை பார்த்து மாத்திரையும் சாப்பிடுகிறேன்.ஆனாலும் இன்னும் குழந்தை நிற்கவில்லை” என்று சமாளித்தாள் அப்பெண்.

நானும் ”எட்டுமாதம் தானே ஆகிறது.அதனால் என்ன கவலை விடுங்க கொஞ்சநாள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.நான் எல்லாம் ஒன் இயர் கழிச்சு இப்போதான் குழந்தை பெற்றுக்கொள்ளப்போகிறேன்” என்றேன்.

சிரித்துவிட்டு நகர்ந்தாள்.அன்றைய சந்திப்புடன் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.

ஆனால் அடுத்த முறை நான் செக்கப் போயிருந்தபோது,எனக்கு முன்னே டாக்டரை பார்த்துவிட்டு அப்பெண் வெயிட் பண்ணிட்டு இருந்தாள்.அவள் கணவன் உடன் இல்லை.

என்ன ஆச்சு டாக்டரை பார்த்தாச்சா..? ஏன் வெயிட் பண்றீங்க? என்றேன்.
அவள் என்னுடன் இருந்த என் கணவனை ஃப்ரியா பேசனும் ஆனால் இவர் இருக்கிறாரா என்பது போல் பார்த்தாள்.நான் அவரை உள்ளே சென்று டோக்கன் போடச்சொல்லிவிட்டு,இப்போ சொல்லுங்க என்னாச்சு…?என்றேன்.

இல்லை சென்னை வந்ததிலிருந்து எனக்கு யாருமே ப்ரண்ட் இல்ல.என் அம்மா,மாமியார் எல்லாம் எங்களை தனிக்குடித்தனம் வச்சுட்டு போய்ட்டாங்க.எனக்கு எந்த பிரச்னையும் இல்லாம தான் என் கணவருடன் வாழ்ந்துட்டு இருந்தேன்.என் கணவரின் நண்பர் மட்டும் வாரத்திற்கு இரண்டுநாட்கள் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்.
எப்போ பார்த்தாலும் என் கணவரிடம் பேசிட்டே இருப்பார்.நான் சமைக்கும் போது கூட என் கணவரும்,அவரும் பெட்ரூமில் பேசிட்டு இருப்பாங்க.ஆரம்பத்தில் நான் தப்பா நினைக்கல..நட்புனா இப்படி இருக்கனும் என்று நினைப்பேன்.

ஆனா நாளடைவில் அந்த நண்பர் என்னை அதட்டவும்,என் சமையலை குறைசொல்லவும் ஆரம்பித்தார்.என் கணவர் ஆபிஸ் சென்ற பிறகுகூட வீட்டிலேயே அமர்ந்துகொண்டு பொம்பளை மாதிரி எனக்கு சமையல் சொல்லித்தரவும்,அடுத்தவர்கள் குடும்பத்தைப் பற்றி கதை பேசவும் என்று இருப்பார்.

எனக்கு அவரின் செய்கை நாளடைவில் எரிச்சலைத்தந்தது.ஆனால் திருமணம் ஆன புதிது என்பதால் என் கணவரிடம் நண்பரைப்பற்றி குறை சொல்ல மிகுந்த பயம்.

ஒருநாள் நானும் என் கணவரும் ஞாயிறு மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தோம்.அப்போது வந்த அந்த நண்பர்.என் கணவரிடம்.என்னடா இது மட்டமதியானத்துல பொண்டாட்டியோட படுக்குற.இதெல்லாம் நல்லாவா இருக்கு.சே  அசிங்கமா இல்ல.என்பது போல் கேட்டதும்,என் கணவர் அப்படித்தான் படுப்பேன்.உன் வேலையைப்பார் என்று திட்டி அனுப்பிட்டார்.அந்த நண்பரும் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

அப்பாடா தொல்லைவிட்டது என்று நினைத்தால் இரண்டாம் நாளே கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தால் அந்த நண்பர் நின்று கொண்டு இருந்தார்.
சரி அவரே கோபித்துக்கொள்ளாமல் வந்துவிட்டாரே என்று எண்ணிய நானும் என் கணவரும் இரவு அன்பாக பேசிக்கொண்டு இருந்து விட்டு,படுக்கச்சென்றோம்.

அந்த நண்பரும் தூங்கிவிட்டு இருந்தார்.

ஒரு ஐந்து மணி இருக்கும்.எனக்கு பாத்ரூம் வந்ததால் எழுந்தேன்.என் கணவரை அருகில் காணோம்.

கதவைத்திறந்துகொண்டு வந்து வெளியில் வந்து பார்த்தால் என் கணவர் அந்த நண்பரின் பக்கத்தில் படுத்துக்கொண்டு இருந்தார்.
என்றவள் கொஞ்சநேரம் மவுனம் காத்தாள்.அவளது கண்களில் கண்ணீர் மீறிக்கொண்டு வந்து கன்னத்தில் வழிந்தது.


எனக்கு என்ன சொல்வது என்றே புரியாமல் திகைத்து நின்றேன்.தொடரும்….

Friday 12 July 2013

தன் கணவரிடம் கிடைக்காத எதிர்பார்ப்பு..தப்பான வழிக்குச் செல்லும் மனைவி..!

நான் அதிர்ச்சியுடன் ”பேச்சு போன் அளவில் தானே இருக்கிறது”? என்றேன்….

ஆமாம்..ஆனால் அடிக்கடி நாங்கள் சந்தித்துக்கொள்வோம்,மனம் விட்டுப்பேசுவோம்.மார்க்கெட் செல்லும் போது,பீச்சுக்கு வாக்கிங் போகும் போது அவரையும் வரச்சொல்லி மனவிட்டு பேசுவேன்.அவரும் தன் மனைவியிடம் கிடைக்காத இவரின் எதிர்ப்பார்ப்புகளை என்னிடம் பகிர்ந்து கொள்வார்.வாழ்க்கையில் இப்போது தான் எனக்கு மறு இன்பம் கிடைத்து இருக்கிறது என்றார் அந்தப்பெண்மணி.

இந்த விசயத்தை உங்கள் கணவருக்கு தெரியபடுத்தினீர்களா? தெரியவந்தால் உங்கள் கணவருக்கு இப்படி ஒரு உறவு இருப்பது அவருக்கு சந்தோஷம் தருமா..?என்றேன்.

இல்லை இதுவரை தெரியாது செல்போனில் மெஸேஸ் வருவதைப் பார்த்து,யாரு எப்பப்பார்த்தாலும் உனக்கு எஸ் எம் எஸ் அனுப்பிட்டே இருக்காங்க?என்று கேட்பார்.

நான் என் தோழி தான் அனுப்புறா,எனக்கும் ரிலாக்ஸ் வேணும்ல அதான் நானும் அனுப்புறேன் என்பேன்.

சரி என்று விட்டுவிடுவார்.

உங்களுக்கு மன உளைச்சல் தரலையா..?நம் கணவருக்கு துரோகம் பண்ணுகிறோம் என்பது போல் நீங்க நினைக்கவில்லையா..?என்றேன்.
இல்லை அப்படி ஒரு பீலிங் எனக்கு வரவே இல்லை.எனக்கு என் கணவன் இந்த மாதிரி நடந்துகொள்ளவில்லை.அந்த நண்பர் நடந்துகொள்கிறார்.அதனால் அவர் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது.இதை எப்படி தவறு என்று சொல்லமுடியும். என்றார் அப்பெண்மணி.
நல்லது,இப்படி உங்கள் கணவன் ஒரு பெண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினால் நீங்க ஒப்புக்கொள்வீர்களா என்றேன்.

நான் அவரை மாதிரி இல்லை.அவருக்குத்தேவையான அனைத்து செய்கிறேன்.என்ன குறை வைத்தேன் அவருக்கு,அவர் அடுத்த பெண்ணிடம் தேடுவதற்கு என்றார்.

ஒப்புக்கொள்வீர்களா…?மாட்டீர்களா..?என்றேன்.

இல்லை ஒப்புக்கொள்ளமாட்டேன்,ஏன் என்றால் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்றார்.

அப்போ உங்களுக்கு ஒரு நியாயம் உங்கள் கணவருக்கு ஒரு நியாயமா..எனக்குத்தெரிந்து உங்களிடம் ஏதாவது ஒன்று உங்கள் கணவருக்கு பிடிக்காமல் இருக்கும் கேட்டுபாருங்கள்.அவர் அதை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு இருப்பார்.அவரும் இப்படி இன்னொரு பெண்ணிடம் தன் தேவைகளை பூர்த்தி செய்ய நினைத்தால் உங்களது நிலைமை நினைத்துப்பாருங்கள்.என்றேன்.

சிந்தித்தார்”நான் செய்யுறது தப்பா”? என்றார்.

நீங்கள் செய்தது தவறில்லை.ஆனால் நம் குட்ம்ப விசயங்களை இன்னொரு நபரிடம் பகிர்ந்துகொள்ள நினைப்பது தேவையில்லாதது.அவர் உங்களை நல்ல முறையில் நினைத்து இருந்தால் பரவாயில்லை.உங்களை எப்படியாவது மயக்கி அனுபவிக்கலாம் என்று நினைத்து இருந்தால் உங்கள் நிலை,மற்றும் உங்கள் குடும்ப நிலை.உங்கள் குழந்தைகளின் நிலை.என்ன நினைப்பார்கள் என்றேன்.

சற்றே யோசிக்க ஆரம்பித்தார்.

கிராம சூழலில் வாழ்ந்ததால் அவரால் தப்பு எது சரி என்று கூட புரிந்து கொள்ளமுடியாத நிலை.வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து இருக்கிறார்.தன் கணவர் தன் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை என்ற ஆதங்கத்தில் கோபத்தில் அவர் அந்நியர் ஒருவரிடம் அந்த ரிலாக்‌ஷேசன் கிடைத்தவுடன் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்.பரவாயில்லை அவர் தவறான வழியில் இன்னும் செல்லவில்லை.இல்லையெனில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரினுடைய நிலைமை கூட ஏற்பட்டு இருக்கலாம்.

இப்படித்தான் பலரும் தன் வீட்டில் நடக்கும் சூழல்களை அடுத்தவரிடம் சொல்வது.தனக்கு நட்பு வேண்டும் என்பதற்காக வேணும் என்றே ஆண்கள் பெண்களிடமே,பெண்கள் ஆண்களிடமோ ஒரு நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு,தங்களது ஆதங்கங்கள்,அல்லது தன் கணவன் மனைவிடம் கிடைக்காத தன் விருப்பங்களை பகிர்ந்துகொள்ள முற்படுகிறார்கள்.அதே தப்பை தங்கள் வாழ்க்கைத்துணையும் செய்ய ஆரம்பித்தால் அதற்கு விருப்பப்படுவது இல்லை.தங்கள் பிள்ளைகளுக்கு தெரிய ஆரம்பிக்கும் போது அவர்களது மனநிலை எப்படி இருக்கும்.?


நாம் மேற்போக்காக வாழ்ந்துவிட முடியாது.நம் பிள்ளைகள் நம்மை முன்னோடியாக எடுத்துக்கொண்டு வாழும் அளவிற்கு நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்..

Thursday 11 July 2013

சாமி கும்பிடுவர்களுக்கான சிறப்புக்கட்டுரை...!


சாமியாரின் பிறந்தநாள் அதனால்(?) அன்றே திருமணம் வைத்துக்கொள்ளலாம்.அப்போ தான் தன் பையன் திருமணம் நல்லபடியாக அமையும் என்று ஒரு அம்மா பிடிவாதமாக அதே நாளில் தன் பையனுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்தார்.<P>

திருமணம் நல்லபடியாக முடிந்தது.ஒருவாரம் ஓடி இருக்கும்.தன் பையன் வாழ்க்கை சுவாரஸியம் இல்லாததைக்கண்டு விசாரித்த போது,தனக்கு திருமணம் முடித்த பெண்ணுக்கு அவளின் அக்கா கணவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.அதை அறிந்தவுடன் டைவர்ஸ் பண்ணிவிட்டார்கள் அப்பெண்ணை.<P>

இப்பிரச்னையின் காரணமாக தன் பையன் விரக்தியில் இருந்தான் அதை சரி செய்வதற்காக,தன் நம்பிக்கைக்கு உரியவரான சாமியாரின் காலில் விழுந்தார் அப்பெண்மணி.<P>

அவர் தன் வீட்டில் தன் பாதத்தை பதித்தால் தன் கவலை எல்லாம் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர்(சாமியார்) வருவதற்காக ஏற்பாடுகள் பண்ண ஆரம்பித்து விட்டார்.அவர் பாதம் வீட்டில் பட கட்டணம் (ஏழு வருடங்களுக்கு முன்) பதினைந்தாயிரம் ரூபாய்.அவருக்கு பாத பூஜை பண்ண இருபத்து ஐந்தாயிரம் ரூபாய்.இப்போது ?<P>

சாமியார் வந்தார்,பூக்கள் பரப்பப்பட்டு அதில் தன் பாதத்தை பதித்தபடியே வீட்டிற்குள் வந்தார்..அவருக்கு பாத பூஜையும்  நடந்தேறியது.அந்தம்மா சாமியாரின் பாதத்தில் பால்,சந்தனம்,இளநீர்,என அபிஷேகம் பண்ணினார் தன் கைகளால்.அவரைக்காண அருகில் இருந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.எல்லோருக்கும் சாப்பாடு ரெடி பண்ணி இருந்தார்கள் அப்பெண்மணியின் வீட்டில்.<P>

சாமியார்  ஒரு வார்த்தை கூட பேசவில்லை.குங்குமம் எடுத்து அந்தம்மாவின் கைகளில் கொடுத்தார்.இனி உன் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் எனக்கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அவரின் வேலையாட்கள் பின்னால் வந்து அந்தம்மாவிடம் பணம் வாங்கிச்சென்றுவிட்டார்கள்.<P>

அன்று மட்டும் அப்பெண்மணிக்கு செலவு ஐம்பாதாயிரம் ரூபாய்.ஆனால் அவரது குடும்பத்தில் நிம்மதி மட்டும் இல்லாமல் போனது இன்று வரை.<P>

இன்னொரு பெண்மணி தன் மகளுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால்,சாமியாரின் பாதங்களை தொட்டு வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும் என்று நினைத்து, வாரம் ஒருமுறை அக்கோவிலுக்குச் சென்று அவரை(சாமியாரை) வணங்கி வருவார்.கருவறைப்பணி செய்தால் குழந்தை கிட்டும் என்று மாதத்திற்கு ஒருமுறை அந்தக் கோவிலை சுத்தி கூட்டி பெருக்கி அம்மனுக்கு அலங்காரம் பண்ணி மனமுருகி வேண்டி வந்தார்.<P>

சில சமயங்களில் தனது கணவர்,மகன், மகள்,மகளின் கணவர் என எல்லோருக்கும் சிவப்பு ஆடை அணியவைத்து அழைத்துச்செல்வார் அக்கோவிலுக்கு.அப்பெண்ணின் மருமகன் பில்டிங் காண்ட்ராக்டர் மிகுந்த பணக்காரர்.அவர் அக்கோவிலை சுற்றி அடிப்பிரதட்சனை பண்ண வைத்தார் அவரின் மாமியார்.அப்போது தான் தனக்கு குழந்தை கிடைக்கும் என நம்பி இதை எல்லாம் செய்தார் மருமகன்.

இன்று வரை அவருக்கு குழந்தை இல்லை.இப்போது மருத்துவரை அணுகி கேட்டால்,டெஸ்டீயூப் பேபி  ஏற்பாடு பண்ணலாம். ஆனால் உங்கள் மனைவி நாற்பது வயதை தாண்டி விட்டதால் குழந்தை சுமக்க அவரது கருப்பையில் சக்தி இல்லை எனக்கூறிவிட்டார் டாக்டர்.<P>

இன்னொரு பெண் தன் கணவர் தினமும் குடிக்கிறார்.அவர் திருந்த வேண்டும் என்பதற்காக தினமும் சாப்பிடாமல் வந்து அம்மாவை(சாமியாரை) தரிசித்துவிட்டு அங்கப்பிரதட்சணை பண்ணிட்டு இருக்கிறார் கடந்த ஒன்பது வருடங்களாக.<P>

ஒரு பெண் தனக்கு இருபத்தி ஏழு வயதாகியும் கல்யாணம் ஆகவில்லை என்ற கவலையில் அம்மனுக்கு விளக்கு போட்டு,அம்மாவை தரிசித்துவிட்டு(காலில் விழுந்து அழுது)புலம்பிக்கொண்டு இருக்கிறார் கடந்த இரண்டு வருடங்களாக.<P>

கேன்சர் தன் மனைவிக்கு வந்து விட்டது என அறிந்ததும் கணவர் அதிர்ச்சி அடைந்தார்.அவரது அலுவலகத்தோழி அக்கோவில் பற்றி கூறி அங்கு தீராத நோயெல்லாம்,அந்த அம்மா கைப்பட்ட போய்டும் நம்பிக்கையா அழைச்சுட்டு போங்க எனக்கூறியதும்,அதை நம்பி தன் மனைவியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போவதை விட அதிகமாக இக்கோவிலுக்கு அழைத்து வந்து கொண்டு இருக்கிறார் பாசமிக்க கணவர்.<P>

கடன் தீரவும்,குடும்ப பிரச்னை தீரவும்,கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கவும் அவர்கள் நம்புவது அந்த சாமியையும் சாமியாரையும் தான் என நினைக்கும் போது வேடிக்கையாகவும் சில சமயம் வேதனையாகவும் இருக்கிறது.

அச்சாமியார் வேறு யாரும் அல்ல…அம்மா..அம்மா என்று போற்றுகிறார்களே..அவர்தான் மேல்மருவத்தூரில் இருக்கும் இச்சாமியார்  ஒரு உதாரணம். தான் ஆனால் நிறைய சாமிகளும் சாமியார்களும் ஒவ்வொரு பெயரில் வாழ்ந்து கொண்டும்,சம்பாரித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.<P>

அச்சாமியாரின் சொத்துக்கள் மட்டும் பல நூறு கோடியைத்தாண்டும் என்பது கணக்கில் வராத உண்மைகள்.தன்னை சாமியாகக் காட்டிக்கொள்பவர்கள், யாரிடமும் பணம் வாங்காமல் சேவை செய்ய வேண்டும். தன் பக்தையின் வீட்டிற்குள் நுழைவதற்கே இருபத்தைந்தாயிரம் வாங்கி கல்லூரி,மருத்துவமனை,வீடுகள்,நிலங்கள்,வயல்கள் என சொத்துக்கள் சேர்த்துக்கொண்டு நான் கடவுள் என சொல்லிக்கொண்டு திரிவது ஏன்?நான் சம்பாதிக்க வந்து இருக்கேன் என் பிழைப்பு அடுத்தவரை நம்ப வைத்து கழுத்தறுப்பது எனக்கூறி சொத்து சேர்க்க வேண்டியது தானே,இதில் மறைமுக சல்லாபங்கள் வேறு.<P>

அவர்களைக்குறை கூறி என்ன ஆகப்போகுது.அவர்கள் பிளான் பண்ணி சம்பாதிக்கிறாங்க.ஆனா நம்ம மக்கள் இருக்காங்களே?அவங்க நம்பிக்கை என்ற பெயரில் தனது பணத்தையும் செலவு பண்ணி அவர்கள் காலில் விழுந்து பிச்சை கேட்கிறார்கள்.என்ன கொடுமை..?<P>

தீர விசாரித்து பெண் கட்டி இருந்தால் (முதல்) பெண்மணி மகன் மனம் நொந்து போய் இருக்கத் தேவையில்லை.(இரண்டாம்) பெண்மணி தன் மகளை நல்ல மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச்சென்று இருந்தால் விரைவில் குழந்தை பெற்று இருப்பார்.(மூன்றாவது) பெண்மணி கோவிலிலே அதிக நேரம் செலவழித்தால் அவரின் கணவன் குடிக்காமல் என்ன செய்வார்.(நான்காவது

பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்ற வருத்ததில் தினமும் சாமியாரின் காலில் விழுந்து என்ன பயன் ஆகப்போகுது என அறியாமை இருளால் அப்பெண்ணுக்கு தெரிந்து கொள்ளமுடியவில்லை போலும்.தன் தோழி சொன்னதற்காக மருத்துவமனை அழைத்துப்போகாமல் கோவிலுக்கு அழைத்து வரும் இவர்களை எல்லாம் படித்த முட்டாள்கள் எனக்கூறுவதா?அல்லது தெரிந்தே தவறு செய்கிறார்கள் எனக்கூறுவதா?அல்லது ஏமாந்து போகிறார்கள் எனக்கூறுவதா?

எது எப்படியோ சாமியை கும்பிடப்போய் சாமியார்களைந் நம்பி ஏமாறுபவர்கள் இந்த நாட்டில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது தொலைக்காட்சி,பத்திரிக்கைகளின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது.<P>

இதையெல்லாம் எடுத்துச்சொல்பவர்களை,சாமி கும்பிடாமல் விதண்டவாதம் பிடித்தவர்கள்.மூளை இல்லாதவர்கள் எனக்கூறிவிடுகிறார்கள்.<P>

சரி நமக்கென்ன என பலர் ஒதுங்கிக்கொள்கிறார்கள்.சிலர் சொல்லி வாங்கிக்கட்டிக்கொள்கிறார்கள்….அப்படித்தான் நானுமோ…?<p>