பாவம் வருடா வருடம் தான்
இப்படி ஒரு நல்ல வாய்ப்பு....நல்லா பயன்படுத்தினேளா...?
நீர் பாவம்…..உம்மை ரொம்ப வெயிலில் அழைச்சுட்டுப் போய்…அதுவும்
வேகாத வெயில்ல…ஆட்டிட்டே போய் குளிப்பாட்டுறாங்க…
உம்ம தங்கச்சி கல்யாணத்துக்கு சீர் கொண்டு வர்றதுக்குள்ள
கல்யாணம் முடிஞ்சுடுச்சுனு இப்படி கோவிச்சுட்டு போய் ஆத்துல இறங்கலாமா…?ஏன் இப்படி
நடந்துக்குறேள்..உங்களுக்கு என்று எங்கிருந்து தான் ஓய் கோபம் பொத்துக்கிட்டு வந்துடுது..அதுவும்
வருடந்தோறும்..நேக்கு புரியள..
சீர் கொண்டு வந்து வாங்கலைனா நல்லதாக்கும்னு நினைச்சுட்டு
காசும் மிச்சமினுட்டு சாப்பிட்டு கிளம்பி வந்துட வேண்டியது தானே…..உம்ம ஆத்துக்கு…ஏன்
நேரா ஆற்றுக்குப் போய் விழுந்தேள்.நல்ல வேளை ஆற்றுல அப்போ தண்ணி இல்ல…இருந்து இருந்தா
உம்ம நெலமைய நினைச்சுப்பாரும்.. ஓய்…
அது சரி அவர் யாரும் ஓய் வீரராகவப்பெருமாள் வைகை ஆற்றில் மஞ்சள்
நிற தங்கக்குதிரையில் நீங்க இறங்கும்போது. இவாள் தான் உமக்கு முன்னதாக, வெள்ளிக் குதிரையில்
வந்து ஆற்றில் இறங்குவாராமே,
வையாழி நடைபயில்வாராமே.(முன்னும்
பின்னும் ஆடிக்கொண்டு செல்வதையே இப்படி சொல்வர்). "அண்ணா வாரும்' என உம்மை அழைத்தால்
தான் ஆற்றிற்குள் இருந்து நீ வருவீராமே.ஆற்றில் நடுமண்டபத்தில் நீர் எழுந்தருளும்போது,
உம்மை வீரராகவப்பெருமாள் மூன்று முறை சுற்றி வருவாராமே.
அவருக்கு உம்ம சார்பாக தீர்த்தம், பரிவட்டம், மாலை என முதல் மரியாதை
செய்வாங்களாமே.அதன்பின் வீரராகவப்பெருமாள் ஆற்றில் உள்ள நடு மண்டபத்தில் இருந்து எங்களுக்கெல்லாம்
தரிசனம் கொடுப்பாளாமே..,அவர் யார் உஅமக்கு சப்சூட் டா நியமிச்சு இருக்கேளா....?இதெல்லாம் எதுக்கும் ஓய் பண்றேள்.
நீர் பாட்டுக்கும்
ஏதாவது பண்ணிட்டுப் போய்டுறேள்...அதையே நம்மாளுங்க வருடவருடம் ,”நீர் கோவிச்சுட்டு
போறாதா சொல்லி ஒரு செலவு இழுத்து விடுறாங்க ”அரசாங்கத்துக்கு...
அதோட நம்ம மக்கள்
எல்லாம் கூட்டத்துல கிடந்து அள்ளல் படுதும் ஓய்..உமக்கே தெரியாதா...?கூட்டமா இருந்தா
ஆம்பிளப்பிள்ளைங்க என்னனென்னா பண்னுவாங்கன்னு அவனவன் பொம்பளைப்பிள்ளையாண்டம் நெருங்கி
இடிச்சுட்டு போறதும்,அவா மேலக் கையப்போடுறதும்....இதெல்லாம் நன்னாவா இருக்கு...
உமக்குத்தான் சொல்லமுடியாம
ஊமையா கிடக்குற...ஆனா பெத்தவங்களுக்கு கூட புத்தியில்லாம...வயசுப்பொண்ணுங்கள அழைச்சுட்டு
நீர் ஆத்துல இறங்குறத பாக்க வந்துடுதுங்கோ...அப்போ தான் திருமணம் கைகூடுமாம்...
நீரே..தங்கச்சி கல்யாணத்தை
அவசரமா முடிச்சுட்டாங்கன்னு ஆத்துல போய் விழுந்துட்டேள்...ஆனா இந்த முட்டாள் மக்கள்
எல்லாம் இந்த திருவிழாவுல கலந்துட்டா தான் திருமணபாக்கியம் கிட்டும்னு சுத்துங்கோ...என்னத்த
ஓய் சொல்றது..ஒன்னும் விளங்கல..எனக்கு.
சரி அப்புறம் எப்போ
போய் தங்கச்சிய மீட் பண்ணீங்கோ...தங்கச்சி என்ன சொல்லுச்சு....மச்சான் என்ன சொன்னார்...அந்தக்கதை
வரவேயில்லையே....அதையும் சொல்லிடுங்கோ..
புதுசா இந்த ஆண்டு
பச்சை கலர்ல ஆத்துல குதிச்சேளாமே....?(சாயம் போச்சா என்ன..?)வருடா வருடம் யார் உங்களுக்கு
கலர் சூஸ் பண்றாங்க....?
காஸ்டியூம் டிசைனர்
யாருனு சொன்னேள்னா......அவங்க மேலிடத்துக்கு வேண்டியவாளானு விசாரிக்கனும் அதான்....
சரி..சரி உம்ம வேலைய
பாரும் நெய்வேத்தியம் பண்ணி வச்சு இருப்பா நன்னா சாப்பிட்டு..அப்புறமா....இரவு பள்ளியறை
பாடல் பாடுவா...(நம்ம பூசாரி.).கேட்டு சேமமா தூங்கும் ஓய்.......... நான் வரட்டா...?
enakkukooda alagar story fulla ah theriyaathu. ippa therinjikkitten....... thanks
ReplyDeleteமிக்க நன்றிங்க
ReplyDelete