ரொம்ப கோபமாக இருந்த என் மனசாட்சியை..சற்று ஆசுவாசப்படுத்த
முயன்றேன் எனவே ஒரு நகைச்சுவையான விசயத்தை பகிரலாம் என்று நினைத்து அவ் விசயத்திற்கான
கருவை தேடிக்கொண்டு இருக்கும் போது,அருகே டீ கடை வந்தது.இருவரும் டி,இரண்டு என்று கடைக்காரரிடம்
சொல்லிவிட்டு உட்கார்ந்தோம்.நான் மட்டும் பேப்பர் படிக்கத்தொடங்கினேன் என் மனசாட்சியை
திரும்பிப்பார்த்தேன் இன்னும் சற்று கோபமாகவே அமர்ந்து இருந்தது.
பேப்பர் படித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு அதிர்ச்சி..என்னவென்றால்.ஷீரடியில்,பக்தர்கள்
வசதிக்காக ரூ 110 கோடியில் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.அதை கட்டிக்கொடுத்தவர்
சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர்.அவர் ஷிரடி சாய்பாபாவின் தீவிர பக்தர்.பக்தி பரவசத்தால்
இந்த கட்டிடத்தை கட்டி ஷிரடி சாய்பாபா டிரெஸ்டுக்கு வழங்கினார்.
ஷிரடி சாய்பாபா ரோடு,காடு,மேடு,பள்ளம் எனப்பார்க்காது பயணம்
செய்து பக்தர்களின் கதையை,கஷ்டங்களை கேட்டு அதை நிவர்த்தி செய்ததாகத்தான் அவரது வரலாற்று
நாடகங்கள் மூலமாக நாம் அறியப்பட்டது.ஆனால் அவரது பெயரில் டிரஸ்ட் நடத்தி ஆயிரம் கோடி
ரூபாயில் சம்பாதித்து,அதிலும் இன்று அதிகபட்சமாக ஓய்வு அறைகள் கட்டிக்கொடுக்கும் அளவிற்கு
ஷிரடி சாய்பாபா இறந்து வளர்ந்துள்ளார் என்பது பெருமைக்குரியது (?).
ஆனாலும்,அந்த பெருமைக்குரிய விசயத்தில்.பக்தர்கள் தங்கும்
அறையின் கட்டணம் தான் கொஞ்சம் மனதை நெருடுகிறது.அறைகள் அனைத்தும் டிரஸ்டுக்கு ஓசியாகக்
கிடைத்தது.முதலில் இவ்வளவு காசு உள்ள பார்ட்டியை(கட்டிடம் கட்டிக்கொடுத்தவர்) கண்டுபிடித்து
,இன்கம்டாக்ஸ் ரெய்டு,சிபிஐ ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அவ்வளவு பெரிய கட்டிடத்தை
கட்ட அவருக்கு நேர்மையான முறையில் பணம் கிடைத்து இருக்கப்போவது இல்லை.அப்படி சம்பாதித்து
இருப்பதை இப்படி டிரஸ்டுக்கு கட்டிக்கொடுப்பதில் கண்டிப்பாக அவருக்கு மனசு வராது.
ஒன்று அந்த நபர் வட்டிப்பணத்திலோ,அல்லது வேறு ஏதோ தொழிலில்
போட்டி ஏற்பட்டு அது வேண்டுதல் மூலம் சரியாகி,அதற்கு காணிக்கையாக கட்டடத்தை கட்டிக்கொடுத்து
இருக்கலாம்..என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.
இன்னொரு விசயம்.அந்த நபர் தான் ஓசியில் கட்டிடத்தை கட்டிக்கொடுத்துட்டார்ல…அதை
மக்களுக்கு இலவச தங்கும் விடுதியாக ஆக்கிக்கொடுக்கலாமே ஷிரடி சாய் பாபா டிரஸ்ட்.அதற்கும்
ஒரு கட்டணம்,அதாவது ஏசி அறைக்கு 900 ரூபாயும்,சாதாரண அறைக்கு 500 ரூபாயும் ஒரு நாள்
தங்குவதற்கு கட்டணமாக வசூலிக்கத்திட்டமிட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.இதையெல்லாம்
ஏன் ஷிரடி சாய்பாபா கண்டு கொள்ளாமல் (ஒரு காலை மடக்கி) உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்
என்பது தான் புரியவில்லை.நமக்கு விசித்திரமாக இருக்கிறது.
இதைப்படித்து என் மனசாட்சியிடம் சொன்னபோது லேசாக புன்னகைக்க
ஆரம்பித்தது.ஆனால் அடுத்த நீயூஸை படிக்கும் போது வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தது..மனசாட்சி
மட்டுமல்ல நானும் தான்..
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக,கோவையில் அகில இந்திய தமிழ்
மதம்,கலை மற்றும் இலக்கிய சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது கண்டு அதிர்ச்சியும்
வேதனையும் கலந்த சிரிப்பு தான் தோன்றியது.அதிலும் முன் வரிசையில் எல்லா சாமிகளுக்கும்,சாமி
சிலைகளுக்கும் சேர் போட்டு அமர வைத்து இருந்தார்கள்.சாமி சிலைகளும் உண்ணாவிரதம் மேற்க்கொண்டது.
எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது.அட முட்டாள் பயலுங்களே……முட்டாள்
பக்தைகளே….எல்லாம் காத்து ரட்சிக்கும் இந்த சாமி சிலைகள் ராஜ்பக்ஷே திருப்பதி வரும்
போதே அவனை கொன்று இருக்கலாமே..அசுரர்களை அழிக்கும் சாமி சும்மா இருந்தது ஏன்? உண்டியலில்
அதிக பணம் போட்டான் என்பதற்காகவா..?அல்லது போர் நடக்கும் போது இந்த சாமிகள் எல்லாம்
சென்று சூரசம்காரம் செய்து அந்த கொடியவர்களை அழித்து இருந்து இருக்கலாமே.எதுவும் செய்யாமல்
இன்று உண்ணாவிரதம் இருந்து தானும் சகமனிதனைப்போல் அரசாங்கத்தால் கைது செய்து செய்யப்படலாம்
என்றுகூடத் தெரியாமல் அமர்ந்து இருந்த அந்த சாமிசிலைகளை என்னவென்று சொல்லுவது.
கைது நடவடிக்கையின் போது சாமி சிலைகள் எஸ்கேப் ஆகிவிடுமா…?இல்லை
சிலை இருந்தால் கைது செய்யமாட்டார்கள் என்ற மதவாதிகள் திட்டம் போட்டு நல்லபெயர் எடுக்கலாம்
என்ற யோசனையில் சிலைகளையும் வெயிலில் உட்கார வைத்து இருக்கிறார்களா..? சாமி குத்தம்
ஆகும்படி செய்த இந்த மதவாதிகளை கடவுள் மன்னிப்பாரா…?அல்லது ஷிரடி சாய்பாபா போல்..காசு
சம்பாதிக்க நினைக்க ஆசைப்பட்டு பேமஸ் ஆகலாம் என்று சிலைகள் அனைத்தும் வீதிக்கு வந்தனவா
தெரியவில்லை….
யாம் அறியேன் பராபரமே…… மனசாட்சியோடு… நானும்..மனதை ஒளித்து
வைத்துவிட்டு நடையைக்கட்டினேன்…
inimel intha maathiry eluthaa tha.. thimiru unaku athikam ayeruchu...
ReplyDeletei yo alakana vaththai
ReplyDelete