பெண்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்த சமீபத்திய செய்திகள்
மற்றும் ஊடகங்கள் வாயிலாக பார்க்கும் போது மிக கஷ்ட மனநிலை ஏற்படுகிறது.பெண்கள் ஒரு
கேலிப்பொருளாகவும்,கேலிச்சித்திரமாகவும் சித்தரிக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம்
என யோசிச்சுப்பார்க்கும் போது பெண்களில் அநேகம் பேர் ஆண்களைப்போல துணிவு அற்றவர்களாகவே
வாழ்வதும்.அவர்களது வாழ்க்கையைத்தான் இடர்பாடுகளாகவும் தங்களுக்குத்தாங்களே நினைத்து
ஒரு கூட்டிற்குள் சுருங்கி விடுகின்றனர் பெண்கள்.
அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பதை நான்கு வகைகளாகப்பிரித்து
பார்க்க வேண்டும்.அதாவது,விரக்தியுணர்வு,கவலை,பதற்றம்,மன அழுத்தம்.இந்த நான்கு வகையானவற்றில்
தான் பெண்கள் தங்களை முன்னேற்றப்பாதையிலிருந்தும்,குறிக்கோள்களிலிருந்தும் சற்றே பின்னோக்கி
இழுத்துச்சென்று விடுகின்றன.
முதலாவதாக விரக்தியுணர்வு:
ஒரு குறிக்கோளை நினைத்தப்படி செய்து முடிப்பதற்குள்,சற்றேனும்
தடங்கள் ஏற்படின் உடனே விரக்தியுணர்வு ஏற்பட்டு விடுகிறது..தொய்வு ஏற்பட்டு விடுகிறது.அதை
அப்படியே விட்ட இடத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்குவது போல் தொங்க விட்டுவிடுகின்றனர்.அந்தபோக்கை
மாற்ற வேண்டும்…இது முதல் படி.
இரண்டாவது கவலை:
எதெற்கெடுத்தாலும் கவலை..எனக்கு மட்டும் ஏன்,எல்லாரும் நல்லாத்தானே
இருக்கிறார்கள்.நான் மட்டும் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் இது போன்ற கேள்விகள்
பெண்களை இன்னும் கவலை என்ற அதலபாதாளத்தில் தள்ளிவிட்டுவிடும்…இதெல்லாம் ஒரு விசயமா..?இதையும்
தாண்டி நாம் சாதிக்க வேண்டியது அநேகம் இருக்கு…என்ற
போக்கு கொள்ள நினைத்தால் பாதி கவலை தீர்ந்தமாதிரி ஆகிவிடும்..இது தான் இரண்டாம் படி..
மூன்றாவது பதற்றம்:
அய்யயோ இப்படியா..?அய்யோ…அம்மா…என அலறி அடிக்காமல் நிதானமாக,அதே
நேரத்தில் எடுத்த காரியத்தில் வேகத்துடன் செய்ய ஆரம்பிக்க வேண்டும்…பதட்டம் நம் உடலை
மட்டுமல்ல மனதையும் தொய்வாக்கி விடும்..எனர்ஜி லெவலை இறக்கிவிடும்,இதையும் கொஞ்சம்
தாண்ட வேண்டும்..
நான்காவது மன அழுத்தம்:
இது தான் இருப்பதிலேயே கொடுரமானது.நான் மட்டும் அல்ல அடுத்தவர்
மனதையும் சேர்த்து அழுத்ததொடங்கிவிடுவோம்.இந்த அழுத்தம் நம்முடைய ஹார்ட்டை பாதித்து
விடும்.அந்த அளவிற்கு மோசமான ஒரு கொள்கை மன அழுத்தம் அடைவது…இதை கண்டிப்பாகத்தூற எரிந்தே
ஆக வேண்டும்…
இந்த நான்கு படிகளையும் கடக்க வேண்டும்.கோவில்களில் நூற்றி
எட்டு படி நடந்து சாமியை தரிசித்து விமோசனம் பெற்றேன் என்பதை விட…இந்த நான்கு படிகளையும்
கடந்து நற்புத்தி பெற்றேன் என்று சொல்வதே ஒரு பெண்ணுக்கு அழகு.இந்த நான்கு நிலைகளையும்
நானும் கடந்து வந்து தான் இதை எழுதுகிறேன்…இன்னும் அடுத்தடுத்து இது பற்றிய முழு வாழ்க்கை
வரிகளோடு பகிர்கிறேன்….
அருமையான பதிவு.
ReplyDeleteநிறைய எழுதுங்கள்.
வாழ்த்துகள்.
Please avoid Word Verification.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உங்களது பார்வையில் சிறப்பாக அலசி இருக்கிறீர்கள்..
ReplyDeleteஅழகான ஆழமான பதிவு....
இன்னும் சிறப்பாக எழுத மனம் நிறைந்த வாழ்த்துகள்....
வாழ்த்துகள். இன்னும் 3 இடுகைகள் எழுதிய பிறகு தமிழ்மணம் மற்றும் யுடான்ஸ் திரட்டிகளில் உங்கள் வலைப்பூவை இணைத்துவிடுங்கள்.
ReplyDelete