Sunday 21 April 2013

திமுக தலைமையின் கவனத்திற்கு.........!


சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரசுடனான கூட்டணியை எதிர்த்து தொண்டர்கள் இருந்தாலும் கட்சி தலைமை முடிவெடுத்துவிட்டதற்காக அந்த நிலையை ஆதரித்தார்கள். கட்சி தலைமை சொல்வதை செய்யும் தொண்டர்கள் பாவப்பட்டவர்கள். அவர்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் தலைமையை- அரசைத்தான், கட்சியில் உண்மையான எதையும் எதிர்பார்க்காத ஒரு உண்மைத்தொண்டன் விரும்புவான்.
ஆனால் நேற்று (தினத்தந்தி சிவந்தி ஆதித்தன் மறைவின்போது) நடந்த எதிர்பாராத சந்திப்பின் மூலம் தேமுதிகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் வகையில் தான் அந்த வணக்கம் அமைந்தது. அந்த வணக்கத்திற்கு அர்த்தம் ஒரு கடைநிலைத்தொண்டன் கூட அறிந்ததே…!
உண்மையில் சொல்லப்போனால்.போன சட்டசபைத்தேர்தலில் தேமுதிக கூட்டணி தங்களை ஆதரித்து இருந்தால் ஒருவேளை ஆட்சியை பிடித்து இருக்கலாம்.நாம் செய்யவில்லை.காங்கிரஸுடனேயே கூட்டணி என்று ஒரு தேவையில்லாத முடிவை எடுக்க எது காரணமாக இருந்தது?.ஏன் இருந்தது?இந்தக் கேள்விக்கான பதிலை உங்களிடமே விடுகிறேன்.
தேமுதிக தலைவர் நல்லவர் தான் .ஆனால் அவர் குடிபோதையில் உளறுவதும்,அடிப்பதும் என சினிமா காட்சி போலவே அரசியலையும் நடத்திப்பார்க்கிறார்.அது நமது கழகத்திற்கு ஒத்துவருமா…?அல்லது அடிவாங்க நம்முடைய அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்களா? என்பது பற்றி தலைமை முடிவு செய்து…. முடிவை எடுக்கவும்.
அடுத்ததாக, இந்த அ.தி.மு.க ஆட்சியில் பணம் சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற கணக்குடன் பதவி வாங்கியவர்களைப்போலவே,அடுத்த ஆட்சிமாற்றம் வரும் போது (திமுக விலும்) அதேமாதிரி பதவி ஆசையும் பணத்தாசையும் பிடித்தவர்களும் உடன் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களின் அடையாளங்களை கண்டறிய தலைமையின் சாதுர்யம் ஒன்றே போதுமானது. அதன் மூலம் ஒருத்தரின் அடையாளங்களை கண்டறிந்து கொண்டு உண்மையாகக் கட்சிக்கு உழைப்பவராக இருந்தால் மட்டுட்ம உடன் வைத்துக்கொண்டு மற்ற ஜால்ராக்களை புறம் தள்ள வேண்டும் என்பதும்,இல்லையெனில் கட்சி காசுக்காக அலைகிறது என்ற அவப்பெயர் வந்துவிடும் என்பதும் தலைமை அறிந்ததே….
எனக்குத்தெரிந்து தி.மு.க.வின் இன்றையத் தலைமையைப்போல் எதிர்காலத்தில்,  ஒரு திறமைசாலி வருவார் என்பதை யோசிக்கக்ககூடமுடியவில்லை.அப்படி வரவேண்டும் எனில் இன்னும் பயிற்சி அதிகம் தேவைப்படுகிறது பதவியை ஏற்கத்துணிபவர்களுக்கு.
கட்சியின் எல்லா மட்டங்களிலும் குடும்ப அரசியல் நுழைந்துவிட்டது.அதை தடுக்கும் நிலையில் தலைமை இல்லை.ஆனால் இறுதி முடிவெடுக்கும் நிலை என்பது தலைமையை விட்டு எங்கேயும் சென்று விட வில்லை.உறுதியான இறுதியான முடிவு கண்டிப்பாகத் தேவை தலைமை அடையாளம் காட்டும் கட்சியின் அடுத்த அரசியல் தலைவரை ஏற்பதற்குத் தொண்டர்களும் எங்களைப் போன்ற ஆதரவாளர்களும் தயாராக இருக்கிறோம்.ஆனால் உங்களைப்போல பக்குவம் நிறைந்த அரசியலை அவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். அவரை ஏற்கிறோம் என்பதற்காகவே அவருடைய குடும்பமும் அரசியல் நிகழ்வுகளில் தலையிடுவதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை.ஏற்கவும் மாட்டோம்.
புதிய தலைமையை ஏற்பவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் ஜால்ராக்களை ஒதுக்கிவிட்டு, நல்ல ஆலோசகர்களை உருவாக்கிக்கொண்டு, சொந்த முடிவை எடுப்பவராக இருக்கவேண்டும். அப்படி இருந்தால், அடுத்த ஆட்சி கழக ஆட்சிதான். அதற்கு எங்களைப்போன்ற எதையும் எதிர்பார்க்காத தொண்டர்களும் ஆதரவாளர்களும் பக்கபலமாக இருப்பார்கள். எனவே, இன்றைய கழகத் தலைமை இனி எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கட்சியை காப்பாற்றுவதிலும்,தொண்டர்களின் நம்பிக்கை காப்பாற்றுவதிலுமே  செயல்பாடு அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்.
யார் என்ன குறை சொன்னாலும் நாங்கள் எப்போதும் தி.மு.கவையே ஆதரிப்போம். அதற்கே வாக்களிப்போம். அந்த அன்பிலும்,உங்கள் மேல் உள்ள பாசத்திலும் கழகத்தின் எதிர்காலம் மீதான நம்பிக்கையிலும் எழுதப்பட்ட ஒரு எளியவளின் வேண்டுகோள் கடிதம் இது……
பலரும் சொல்லத் தயங்குவதை நான் சொல்லிவிட்டதாக ஒரு மனநிறைவு. அவ்வளவுதான்.

5 comments:

  1. திமுகவில் அடுத்த தலைமுறை அதாவது தலைவர் கலைஞர்ருக்கு பிறகு என்றால் தளபதி ஸ்டாலின் அவர்கள் மட்டுமே இதில் எந்த ஒரு தொண்டணுக்கும் மாற்று கருத்து கிடையாது .

    மேலும் நேற்று எதிர்பாராத விளைவாக நடைபெற்ற தலைவர் கலைஞர் மற்றும் விஜயகாந்த் சந்திப்பில் எந்தவித உள்நோக்கமும் இல்லை .

    வருகின்றன .நாடாளமன்ற தேர்தலில் தலைவர் கலைஞர் தலமையில் அமைகின்ற திமுக கூட்டணி 40 தொகுதியில் மகத்தான வெற்றி பெறுவது உறுதி .

    ReplyDelete
  2. Intha karuththukku Enakkum maattru karuththu illai....

    ReplyDelete
  3. ஆழமாகவும் அழுத்தமாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் உங்கள் கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்..
    தலைவருக்கு அடுத்து தளபதி தான் தலைமைக்கு வரக்கூடிய தகுதிகள் அத்தனையும் அமையப்பெற்றவர் என்பதில் எந்த தொண்டனுக்கும் மாற்று கருத்து கிடையாது..

    தலைவருக்கு அடுத்து தளபதி தலைமையில் கட்சி சீரோடும் சிறப்போடும் செயல்படும் என்பதில் சந்தேகம் இல்லை...

    ReplyDelete
  4. தனித்து நின்றால் நாற்பதையும் வெல்லலாம்

    ReplyDelete
  5. இது என்னங்க தலைவருக்கு அடுத்து தளபதி...? ராஜா-வுக்கு அடுத்து இளவரசர்-னு; சொல்லுங்க... அப்புறம் இந்த மக்களாட்சி-னு சொல்லுறது தூக்கி குப்பையில் போட்டுங்க... நல்லா வருவீங்க பாசு....!

    ReplyDelete