எனக்கும் என் மனசாட்சிக்கும் இடைய பயங்கர சத்தம் எழுந்தது.எல்லாம்
கூடங்குள அணு உலை சம்பந்தமாகத்தான் என் மனசாட்சி சொன்னது.இப்போது மத்திய அரசு இந்த
திட்டத்தினை கைவிடுவது தான் நல்லது.இல்லையெனில் மக்கள் போராட்டம் இடிந்தகரையில் பயங்கரமாக
வெடிக்க ஆரம்பிக்கும் என்றது.
அதெல்லாம் சும்மா,நீ வேற மாணவர்கள் போராட்டம் எப்படி கை விடப்பட்டதோ
அதேமாதிரி ஒருநாள் இடிந்தகரை மக்கள் போராட்டமும் கைவிடப்பட்டு விடும்.என்றேன் நான்.
சொன்னது தான் தாமதம் என் மனசாட்சி என்னை கோபமாக நோக்கியது.நீ
அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுகிறாயா..?அணு உலையால் மக்களுக்கு எவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்
என்பது உனக்குத்தெரியாதா..?சிறு குழந்தைகள் முதற்கொண்டு அனைத்து மக்களும் போராட்டம்,உண்ணாவிரதம்
என்று மேற்கொள்கின்றனர்.அந்த போராட்டத்திற்கு நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்
என்றமனசாட்சியை நான் தடுத்தேன்.
இப்போது இவ்வளவு போராடும் மக்கள் அன்றே போராடி இருந்தால்
அணு உலை ஆரம்பிக்கும் முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கும் அல்லவா..?எல்லாம் முடிந்து
செயல்படுத்த ஆரம்பிக்கும் வேலையில் பண்ணக்கூடாது என்றால் மத்திய அரசுக்கு எத்தனை கோடி
இழப்பு ஏற்படும் தெரியுமா என்றேன்.
இப்போது தான் மக்களுக்கு புரிய ஆரம்பித்து இருக்கிறது.அதுவும்
சிங்கப்பூரில் அணு உலை ஏற்படுத்தின பாதிப்பை மக்கள் அறிகிறார்கள்.அதோடு இன்று நிரைய
படித்தவர்கள் அது பற்றி பேசத்தொடங்கியிருக்கிறார்கள்.ஒரு போராட்டத்தை வழிநடத்த ஆட்கள்
கிடைத்து இருக்கிறார்க.அதன் வீரியம் இப்போது தான் இடிந்தகரை மக்களை சென்றடைந்து இருக்கிறது.அதனால்
தன் தலைமுறையோடு அல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து வீதியில்,க்டலில் இறங்கி போராடி
வருகிறார்கள் மக்கள்.
அதோடு,அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படும் என்று சொல்கிறாயே..,
அரசாங்கம் எத்தனையோ விண்வெளி ஆராய்ச்சி,ஏவுகணை ஆராய்ச்சி என்று செலவிடுது அதுவும் சில
நேரங்களில் பயனில்லாமல் போகிறது அதுபோல் இதையும் நினைத்துக்கொண்டு அணு உலையை மூடிவிடலாமே
என்றது என் மனசாட்சி சிறுபிள்ளை போல்..
அதற்கு எத்தனை ஆண்டுகளாக செலவுசெய்து,எத்தனை இஞ்சினியர்களை
பயன்படுத்தி இந்த அணு உலையை ஏற்பாடு பண்ணியிருப்பார்கள் என்று கூடத்தெரியாமல் நீ பேசுவது
வேடிக்கையாக இருக்கிறது.என்றதும்.
நான் வேடிக்கையாகப்பேசவில்லை.மத்திய அரசு தான் மக்களை வேடிக்கைப்பொருளாக
நினைத்துவிட்டது.அவர்களது போராட்டங்களை நாடகமாக்கிவிட்டது.கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்
ஷிப்ட் முறையில் வேலைபார்க்கும் ஐந்து பேரில் ஒருவருக்கு கேன்சர் பாதிக்கப்பட்டு இருப்பதாக
ஆராய்ச்சி கூறுகிறது.வேலை நேரம் குறைவானதாக இருக்கும்.மற்றும் இஞ்சினியர்கள் பாதுக்காப்போடு
பணிபுரிவர். அவர்களுக்கே அந்த பாதிப்பு ஏற்படுமெனில்,சாதாரண மக்கள் அக்கு கெமிக்கல்
கலக்கும் கடல் நீரை பயன்படுத்தும் போதும்.அணு கசிவால் ஏற்படும் நச்சுத்தன்மை பாதிப்பால்
எவ்வளவு பேர் இறப்பார்கள்,பாதிப்படைவார்கள் என்பது கூடவா தெரியாமல் இருக்கும்.நான்
பேசுவது வேடிக்கையா? என்றது கோபக்கனலை என் மேல் வீசியது..
நீ நியாயமாகப் பேசினாலும் எதார்த்தம் என்று ஒன்று உள்ளது.நீயும்
நானும் பேசிக்கோண்டு இருப்பது வீண்..இடிந்தகரையில் அணு உலை ஆரம்பிக்கத்தான் போகிறார்கள்.அதில்
அரசாங்கம் தன்னுடைய செயல்பாட்டில் மாற்றம் கொள்ளாது.
போராடுபவர்கள் போராடிக்கொண்டே இருப்பார்கள்..அரசியல் பண்ணுபவர்கள்
பண்ணிக்கொண்டே இருப்பார்கள்..இதை வைத்து சம்பாதித்துக்கொண்டு இருப்பவர்கள் சம்பாதித்துக்கொண்டே
இருப்பார்கள்..
ஆனால் இடிந்த கரை மக்களின் மனது இடிந்து தான் போய் இருக்குமே
தவிர அணு உலை இடியாது…என்று கூறிவிட்டு மனசாட்சியின் கோபத்தை அடக்கிவிட்டு…நானும் மனசாட்சியும்
வேறு இடம் நோக்கி நடக்கத்தொடங்கினோம்……..
No comments:
Post a Comment