முக்கியமாக கணவனுக்கும்,மனைவிக்கும் என்ன மாதிரி பிரச்னைகள்
தலை தூக்குகின்றன என பார்த்தால்..ஒன்று அவர்களது பெற்றோர்,உற்றோர் பிரச்னைகளாக இருக்கும்,
இன்னொன்று
பணப்பிரச்னையாக இருக்கும்.இதெல்லாம் தவிர்த்து மிகப்பெரிய பிரச்னையாகத் தோன்றுவது கணவன்
மனைவிக்கு இடையே ஏற்படும் காமத்துக்கான பிரச்னைதான்.
காமம் என்று வரும் போது பெண்ணோ அல்லது ஆணோ ஒருவருக்கொருவர்
தங்கள் உடலளவில் ஒன்று சேர விருப்பம் இல்லாமல் இருக்கலாம்..அல்லது இருந்தும் அதற்கான
வாய்ப்பு குறைவாக இருக்கலாம்.
அல்லது கள்ளக்காதல் பிரச்னையாக இருக்கலாம்.இன்னொன்று குழந்தைகள்
வளர்ந்துவிட்டனர்.இனி நமக்கு இது தேவைதானா என்பது போன்ற பிரச்னைகளாக இருக்கலாம்.
இதில் எல்லாம் முக்கியமாக ஆண்களை விட பெண்களே தங்களது ஆசைகளை
கட்டிப்போட்டுக்கொண்டு,அந்த எதிர்பார்ப்பை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்,அந்தக்
கோபத்தை எப்படிக்காட்டுவது என்று புரியாமல் தங்கள் கணவர்களிடமோ.,அல்லது குழந்தைகளிடமோ
காட்டத்தொடங்கி விடுகின்றனர்.
இதனால் வீட்டில் பிரச்னைகள் தான் அதிகமாகுமே தவிர,தன்னுடைய
பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது.
தன்னுடைய ஏக்கங்களை வெளிப்படுத்தினால் எங்கே தான் தவறானவள்,அல்லது
திமிர் எடுத்தவள் என்று தன் கணவர் நினைத்துவிடுவார் என்ற பயம் காரணமாக வெளிப்படுத்த
தயங்குவாள்.
இல்லையெனில் கூட்டுக் குடும்பமாக இருந்தால் எல்லா வேலையும்
முடித்து படுக்கச்செல்வதற்குள் அசதியாக உணர்ந்து,இந்த நேரத்தில் இது தேவையா என்பது
போல் தோன்றி அயர்ந்து தூங்கிவிடுவாள்.
உடலில் உள்ள இச்சைகளை தீர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை
டாக்டர்களே வலியுறுத்துகின்றனர்.தங்களுக்கு கிடைக்கும் சிறிது நேர சந்தோஷம் உடலுக்கும்
மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுப்பதாக உணர்த்துகிறார்கள்.
ஆண்கள் சிலர் தங்களுக்கு ஏற்படும் தாபத்தை மனைவியிடம் கிடைக்காவிட்டாலும்
மற்றவர்களிடமோ,அல்லது சுயமாகவோ சந்தோஷம் அடைந்துவிடுவார்கள்.
ஆனால் பெண்களுக்கு அதற்கான வாய்ப்புக் குறைவு.எனவே தங்களது
ஏக்கங்களை ஏக்கப்படுத்திக்கொள்ளாமல்.தன் கணவரிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்.இது மனநிம்மதியை
கொடுக்கும்.
அதற்கு மாறாக அடுத்தவரிடம் தவறாக உறவு கொள்வதன் மூலம் தன்
பிள்ளைகளுக்கும் இனி வரும் சந்ததியினருக்கு ஒரு வரலாற்று கேள்விக்குறியாக ஆக்கப்படுவீர்கள்.
கணவனால் சுகம் கொடுக்கமுடியவில்லை உடல் ரீதியாக பிரச்னையெனில்,டாக்டரிடம்
காண்பித்து அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.இல்லை டைவர்ஸ் செய்துகொண்டு மறு திருமணம்
பண்ணிக்கொள்ளலாம்.
இதைச் சொல்வதால் எல்லோருக்கும் தவறாகத்தோன்றலாம்.ஆனால் உடல்
தேவை முக்கியமில்லையெனினும்,அது ஒரு ஏக்கமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கமுடியாது.ஒரு வயது
வரைதான் இந்த இன்பங்கள் கிடைக்கும்.50 வயதுக்குமேல் இந்த இன்பங்கள் தேவையற்றதாகி விடும்.
வாழ்வில் எல்லாமே காலப்போக்கில் சரியாக்கிவிட வேண்டுமே தவிர
அதை தவறானதாக ஆக்கிவிடக்கூடாது.
இது அக்காலத்திலிருந்து சித்தர்களும் அறிஞர்களும் சொல்லக்கூடியதே,திருக்குறளில்
காமத்துப்பால் எனும் அதிகாரமும் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன..
போகும் போக்கில் சந்தோஷத்தை அனுபவிப்பதை விட தன் இணையரிடம்
சந்தோஷமான காமத்தை அனுபவிக்க வேண்டும்.அதற்குத் தக்கவாறு நம்மை ஆக்கிக்கொள்ளவேண்டும்.
இதற்கென்றே அலையாமல்….ஆனால் இதற்காக அமைத்துக்கொள்ளுதல் ஒரு
குடும்பத்தை நல்லமுறையில் வழிநடத்த ஏதுவாக இருக்கும்.
எது ஒன்றும் காமமாகவே மட்டும் நோக்காமல் காதலுடன் காமமாகப்
பார்க்க வேண்டும் ஒவ்வொரு தம்பதியினரும்…..
தொடரும் அந்தரங்கம்..