பெண்கள் பலர் மிக சுதந்திரமாக நிம்மதியாக ஆற அமர உட்கார்ந்து
தங்கள் மனநிம்மதியை பெற நினைக்கும் இரண்டே இடம் ஒன்று கோவில், இன்னொன்று அழகுநிலையமாகத்தான்
இருக்கும் என்று சமீபத்திய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு அநேகம் பெண்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டும்
இருக்கிறது.
அப்படிப்பட்ட அழகுநிலையத்தில் தான் நேற்று ஒரு பெண்ணின் இங்கீத,சங்கீத,சாகித்திய
பேச்சுக்களை கேட்க நேர்ந்தது.
அப்பெண் அழகுநிலையம் உள்ளே நுழைந்ததும் மிக இயல்பாக பியூட்டிபார்லர்,
வைத்து இருக்கும் பெண்ணிடம் பேச ஆரம்பித்தார்.குழந்தையை 2 பேரையும் அம்மா வீட்டில்
விட்டுட்டு வந்து இருப்பதாகவும்,அவளது கணவர் அடிக்கடி வெளியூர்க்கு வேலையாகச்சென்றுவிடுவதாகவும்,அதனால்
பாதிநாட்கள் தன் அம்மாவின் வீட்டிலேயே தங்கிவிடுவதாகவும் சொல்லிக்கொண்டு இருந்தார்.
அப்பெண் பர்தா போட்டு வந்து இருந்தார்.அவரது காலுக்கு பெடிக்குயூர்
செய்து கொண்டு இருந்தார்கள்.சிறிது நேரத்தில் எனக்கு அப்பெண் யாரோட மெதுவாக பேசிக்கொண்டு
இருந்தது கேட்டது.மிகவும் சன்னமான குரலில் பேசியபடியே இருந்தார்.
எனக்குத்தான் இம்மாதிரி விசயங்களில் எல்லாம் மூக்கை நுழைப்பது
ஆர்வமாச்சே,உடனே காதையும்,கண்ணையும் உன்னிப்பாக்கினேன்.
அப்போது தான் தெரிந்தது,அப்பெண் தன் பர்தாவுக்குள் செல்போனை
விட்டுக்கொண்டு ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தார்.நிச்சயமாக அவளது கணவன் இல்லை.ஏதோ
ஒரு ஆண் நண்பர் தான் உரையாடுகிறார்.
"ம்ம்ம் சொல்லு,ஆமாம்….அவர் வருவதற்கு இரண்டுநாட்கள் ஆகும்.நான்
பியூட்டிபார்லர்,மார்க்கெட்டுக்கு வந்தா தான் ஃப்ரியா பேசமுடியும்,வீட்டில் அம்மா,அப்பா
எல்லாரும் கூடவே இருக்காங்க என்பது போன்ற சமிஞை மொழிகளால் பேசிக்கொண்டே போனார்."
அதனால்
என்னால் அவள் கணவனிடம் பேசவில்லை என்பதை உறுதியாக கணிக்க முடிந்தது.
ஒரு அரைமணி நேரம் நான் அங்கு இருந்து இருப்பேன்.அதுவரை அப்பெண்
போனை கட் பண்ணாமல் பேசிக்கொண்டு இருந்தார்.ஆனால் சந்தோஷமாக உரையாடிக்கொண்டு இருந்தார்.
அவளது கணவருக்கு தெரியாமல் உரையாடிக்கொண்டு இருக்கிறார்.அல்லது
ஏதோ தவறு புரிந்து கொண்டு இருக்கிறார்.தவறான வழியில் சென்று கொண்டு இருக்கிறார் என்று
என் மனம் சொன்னது.
அப்பெண்ணுக்கு அந்த X மனிதனுடன் பேசிக்கொண்டு இருப்பதில்
ஒருவித சந்தோஷக்குள் தான் இருப்பதாக உணர்ந்து தான் இப்படி தனியாக தான் செல்லும் இடங்களில்
அந்த ஆணுடன் பேச எத்தனிக்கிறார்.
இது இன்று சகஜமாக ஆகிவிட்டது என்றாலும்,அப்பெண்ணுக்கு இன்னொரு
ஆணிடம் தன் வாழ்க்கையையும்,தன்னுடைய மனதையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் அங்கே
ஏன் அவசியமாக நிற்கிறது ?.
தன் குடும்பத்தாரிடமும்,தன் கணவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டிய
விசயங்களை இன்னொரு நபரிடம் பகிர்ந்து கொள்ள அவள் ஏன் முயல்கிறாள்.?
எனக்கு ஒரே கேள்வி தலையை சுத்தியது.இன்றைய காலகட்டம் இதை
தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், யாருக்கும் தெரியாமல் போன் பேச நினைப்பவள் அவனை
இதுவரை சந்திக்காமலா இருந்து இருப்பாள்.?
அவனிடம் இருந்த ஏதோ ஒன்று தனக்கு இதுவரை கிடைக்காத ஒன்று,தான்
எதிர்பார்த்து ஏமாந்த ஒன்று அவனிடம் இருப்பதாக
நினைத்து தான் பழகிவருவாள்.அது கிடைக்கும் என்ற ஆவலாக இருக்கலாம்,இல்லை கிடைத்தும்
இருக்கலாம்,
சாதாரண போன் மேட்டர் இதுக்கு இவ்வளவு சீரியஸ் தேவையா என்று
கேட்கலாம்.ஆனால் இது சாதாரண மேட்டர் அல்ல.ஒரு பக்குவப்பட்ட ,அதுவும் மதரீதியாக பாதுக்காக்கப்பட்ட
ஒரு பெண் இப்படி உரையாடிக்கொண்டு இருந்தது ஏதோ நெருடலை உண்டு பண்ணுகிறது.
இன்றைய பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்.எதற்காக ஒருசில
மணித்துளி சந்தோஷத்திற்கு தன் மனதை அடுத்தவரிடன் தாரைவார்க்க நினைக்கிறார்கள் என்று
யோசித்துப்பார்த்தால்,நாளைய எதிர்காலம் கேள்விகுறியைத்தான் பதிலாக நமக்கு அளிக்கும்.
போனில் பேசுவது சாதாரண விசயம் தான். அதை ஏன் சம்பந்தமில்லாத
ஆட்களிடம்,அல்லது தவறாக பேச நினைக்கும் ஆட்களிடம் பகிர்ந்து கொண்டு தன் குடும்பத்தை
தனக்கு எதிராக திசைதிருப்ப நினைக்க வேண்டும்.?
அப்பெண்ணின் கணவருக்கோ,அல்லது அவளது குடும்பத்திற்கோ இப்படி
நம் மனைவி,மகள் அடுத்தவரிடம் தன் எண்ணங்களை பகிர்ந்துகொள்கிறாள் என்று தெரிய ஆரம்பித்தால்,அவளது
வாழ்க்கை……?
தொடர்வோம்…………
ஆன் பெண் உறவு......பலகட்டங்களை கடந்து இப்போதைய நிலையை அடைந்திருக்கிறது இது குடும்பம் ஒருஅமைப்பை பாதுகாக்க உருவாக்கப்பட்டது ..இதில் ஏற்ப்படுகிற தவறுகள் குடும்ப அமைப்புமுரையையே சிதறுண்டு போகசெய்யும் .........அதன்விளைவுகள் கொடூரமானது .....அன்பற்ற கட்டுப்பாடற்ற தன்னுடைய சுயலாபத்திற்காக சகலத்தையும் பலியிடுகிற மனிதர்களை உருவாக்கும் ......அதைநோக்கி வேகமாய் பயணிக்கிறோமோ என்கிற அச்சம் வருகிறது ....!!தவறு தவறு தவறு யார் செயுனும்
ReplyDeleteஉண்மைதான் சார்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமனிதர்கள் கலாச்சாரம்,பண்பாடு,சமூக கட்டுப்பாடு போன்றவற்றால் நேரிய வழியில் நடைபோட பயிற்றுவிக்கப் பட்டாலும் மனதுக்குள் உறங்கும் உள்மன வக்கிர விலங்கு அவ்வப்போது தலைதூக்குவதும் சாதகமான சூழல் அமைந்தால் கட்டவிழ்ந்து தான்தோன்றித் தனமாக வெறியாட்டம் போடுவதும் நிகழ்கிறது.பரஸ்பர அன்பும் புரிதலும் உடல்,உளத் தேவைகளில் இன்பமான நிறைவும் தம்பதியரிடையே அன்னியோன்னியமான உறவிற்கு அவசியம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட்டால் மட்டுமே ஆரோக்கியமான குடும்பங்கள் அமையும்.
ReplyDeleteகரெக்ட் சார் இதையே தான் நானும் சொல்ல நினைக்கிறேன்//
Deleteஇப்படி நடக்கும் குடும்பத்தில் அந்த கணவனின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் ?
ReplyDeleteபார்ப்போம் சார்
Deleteகணவர்களும் மனைவியின் சராசரி எதிர்பார்ப்பையாவது பூர்த்தி செய்ய வேண்டும்
ReplyDeleteஉண்மைதான் சார்
Deleteஎல்லாம் இருத்தும் வழி மாறி செல்பவர்களை நினைத்து தான் என் கவலை?
ReplyDelete