Friday 14 June 2013

இச்சைக்கு அடிமையாகி பேப்பரில் தலைப்பு செய்தி ஆகிவிடாதீர்கள்.....!



கேள்விகள் சாதாரணமாக அமைந்துவிடலாம்….ஆனால் அதற்கான பதில்கள் இருக்கிறதே மிகவும் கடினம்..சென்ற வார வெள்ளிக்கிழமை ப்யூட்டிபார்லரில் ஒருபெண் போனில் பேசிய அதுவும் மறைமுக நபரிடம் பேசியதை பகிர்ந்துகொண்டேன்.

அதுபற்றி நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.அப்பெண் அப்படி என்ன தவறு செய்துவிட்டாள்,இன்றைய காலகட்டம் அப்படித்தானே செல்கிறது.அதுமட்டுமல்லாது நீங்கள் ஒரு இஸ்லாமியபெண்ணை குற்றம் சொல்கிறீர்கள்….அவர்கள் அப்படி எல்லாம் செல்லக்கூடியவர்கள் அல்ல….என்பது போன்ற எதிர்ப்பான விசயங்கள் என்னை தாக்கின.

ஆனால் உண்மை சம்பவத்தை சொல்வதற்கு மதமும்,பிரச்னைகளும்,சமூகச்சூழல்களும் எனக்கு ஒன்றாகத்தான் தெரிந்தன.இதில் மூடுமந்திரம் போட்டுக்கொண்டோ….மறைத்து வைத்துக்கொண்டோ  விசயங்களை வெளியிடுவதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. அதுபோல குறிப்பிட்ட யாரையும் குற்றம் சுமத்துவதும் எனது நோக்கமல்ல.

என்ன நடந்ததோ…அதைச்சொல்வதிலும்,அந்தப் பிரச்னைக்கான மையப்புள்ளியை கண்டறிந்து,தீர்வை தேடுவதிலும் தான் நான் என் இக்கட்டுரைக்கான பயணத்தை மேற்க்கொள்ள நினைக்கிறேன்.

அப்பெண் செய்ததில் என்ன தவறு?அவள் தன் கணவன் சரிவர கவனித்துக்கொண்டு இருக்கமாட்டான்.ஊர் ஊராக சுற்றி அவனுக்கு சம்பாதிக்கவே நேரம் சரியாக இருந்து இருக்கும்.அதனால் அவள் தன் இன்பங்களையும்,தேவைகளையும் இன்னொரு நபரிடம் அனுபவிக்க,அல்லது அதற்கு அச்சாரம் இட முயல்கிறாள்.இதுதான் அந்தப்பெண்ணின் செல்போன் உரையாடலின் மையமாக இருக்கும்.


அப்பெண்ணின் குடும்பம் மிகவும் கலாச்சார,கட்டுக்கோப்பான குடும்பமாக அமைந்து இருப்பின்,அவளின் நடவடிக்கை என்றாவது ஒருநாள் அவள் குடும்பத்திற்கு தெரியவரும் நேரத்தில் கண்டிப்பாக பூகம்பம் வெடிக்கத்தான் செய்யும்.அவளது குடும்பத்தினர் அவளை கொலை செய்யும் அளவுக்குக்கூட போகலாம்…(அனுமானம் தான்… உண்மை அல்ல)
எதற்காக அப்பெண் இப்படி ஒரு சிற்றின்பத்திற்கு ஆளாகிறாள்.

என்னைப்பொறுத்தவரை அவள் கணவனின்,குழந்தைகளின் எதிர்காலம் கருதி தன் இன்பங்களுக்கு ஒரு முழுக்குப்போடலாம்.
தன் பெற்றோர்களின் மானத்தையும்,மரியாதையும் நினைத்துக்கொண்டு கொஞ்சம் அடக்கிவாசிக்கலாம்.

இல்லை தன்னால் அடக்கா முடியாமையும்,ஆசையும் இருக்கும்  பட்சத்தில் அதைப் பற்றி தன் கணவரிடமே பேசி ஒரு முடிவு கட்டலாம்.என்னால் உங்களைவிட்டு இருக்கமுடியவில்லை.என் விருப்பங்களுக்கு நீங்கள் மறுப்பு சொல்லக்கூடாது என்று சொல்லிப்பார்க்கலாம்.

கணவரிடம் கூச்சப்பட்டு அடுத்தவரிடம் தன் ஆசைகளை எதிர்பார்ப்பதை விட கணவரிடமே கேட்டுப்பெற்றுக்கொள்ளலாமே…..?கணவர் இவளது பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை எனில்,அதன் பிறகு டைவர்ஸ் போன்ற முறைகளைப் பின்பற்றி அவரிடமிருந்து விடுதலை வாங்கிவிட்டு புதிய கணவனாக, தன்  விருப்பத்திற்கேற்ற ஒரு ஆடவனை தேர்வு செய்துகொள்ளலாமே….

அதுதான் சிறந்த வழியாக இருக்கமுடியும்.அப்படியுமில்லாமல்,இப்படியுமில்லாமல் தன் விருப்பத்திற்கு மட்டுமே வாழ்வது குடும்பமாக அல்லாமல் வேறு விதமாக அல்லவா ஆகிவிடும்.

இதுவே ஒரு ஆண் பண்ணினால் சரி என்பீர்களா…?கண்டிப்பாக இல்லை…இதில் ஆண் வேறு பெண் வேறு இல்லை.இதையே அப்பெண்ணின் கணவன் பண்ணியிருந்தாலும் அவருக்கும் இந்த பதில் தான் சரியாக அமையும்.

எனக்குத்தெரிந்து அப்பெண், தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி தன்னுடைய இப்போக்கை மாற்றி,அவளது தேவையை அவளது கணவனிடம் பெற்று வாழ்ந்தால் பேப்பரில் அன்றாடம் வரும் செய்திகளுக்கு தலைப்புச்செய்தியாக ஆகாமல் சுமுகமாக வாழ்க்கையை நடத்தலாம்.

இல்லையெனில் இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ச்சியாக இன்று ப்யூட்டிபார்லரில் சந்தித்த பெண், நாளை கோவிலில் சந்திக்கும் பெண்,மார்க்கெட்டில் சந்திக்கும் பெண் என்று பெண்கள் தங்கள் உண்மையான வளர்ச்சியை இழந்து, பேப்பரில் தலைப்புச் செய்தியாகத்தான் வந்துகொண்டிருப்பார்கள்.   

7 comments:

  1. // நீங்கள் ஒரு இஸ்லாமியபெண்ணை குற்றம் சொல்கிறீர்கள்….அவர்கள் அப்படி எல்லாம் செல்லக்கூடியவர்கள் அல்ல….

    //

    :))

    ReplyDelete
    Replies
    1. Appadi eduthu kollatheer nan bare.intha nilai pothuvanathuthan.kadaipidithal nallathuthane,at hu entha mathathu pennayirunthal enn

      Delete
    2. நான் மதத்தை குற்றம் சொல்லவில்லை..நடந்த நிகழ்ச்சியை வைத்து தான் எழுதினேன் .இது உண்மை நிகழ்ச்சி..இதை தேவையில்லாமல் மதரீதியில் பார்க்கத்தேவையில்லை.எல்லாப்பெண்களும் ஒன்று தான் இது மதம் சாதி அடிப்படையில் தீர்மானிப்பது நம்முடைய கடமையோ அல்லது கருத்தோ அமையாது.நான் ஒரு மதத்தை குற்றம் சாட்டி பெயர் எடுக்கவும் விரும்பவில்லை.

      Delete
  2. எனக்கு மிகவும் பிடித்திருந்தது உங்கள் அறிவுரை..

    ReplyDelete
  3. தவறு செய்பவர்களுக்கு மதம் முக்கியம் இல்லைங்க.... தவறான மனோ இச்சைக்கு முன்னால் சாதி மதம் எல்லாம் ஒன்றும் இல்லை.. எனவே இது பொதுவானது தான். எந்த மதமும் மனிதனை தவறு செய்ய சொல்லவில்லை. மாறாக மனிதனின் மனம் தான் தவறுகளை தூண்டுகிறது. கருத்துக்கள் அருமை. வாழ்த்துக்கள் பிரதிபா..!

    ReplyDelete