திடிரென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினேலே என்ற பாடல் வரிகள்
போல் திரு லஷ்மி குபேரர் அய்யா அவர்கள் சென்னை வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்களம் என்ற
கிராமத்தில் புதிதாக உதயமாகி உள்ளார்.
குபேரன் என்பவர் வெங்கடாசலபதிக்கு கடன் கொடுத்தவர்.வெங்கடாசலபதி
பெத்த பணக்காரராக இருந்தும் குபேரனிடம் கடன் வாங்கிக்கொண்டு மாதமாதம் கடனைக்கொடுக்காமல் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு இருக்கிறார்.
பாவம் நம்ம மக்கள் எல்லாம் தனக்குக்கிடைக்கும் பணத்தில்,அல்லது
லாபத்தில் அல்லது அடுத்தவரிடம் அடிச்சுப்புடுங்கியதில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு
கமிஷனை கொண்டுபோய் கொடுப்பார்கள்…சாரி கொட்டுவார்கள் அங்கே இருக்கும் பெருத்த உண்டியலில்.
ஆனால் வருடந்தோறும்,மாதந்தோறும் எண்ணும் உண்டியல் பணத்தில்
வரும் வருமானம் குபேரனுக்கு வட்டி செலுத்தத்தான் போதுமானதாக இருப்பதாக உளவுத்தகவல்
துறை தெரிவிக்கிறது.
குபேரன் பாவம் என்ன பண்ணுவது என்று தெரியாமல் இந்தக்கால கந்துவட்டிக்காரர்கள்
போல் அல்லாமல் வட்டியை மட்டும் வாங்கிக்கொண்டு,முழுப்பணத்தை அப்புறமா கொடுங்க என்று
சொல்லிவிட்டார்.(காரணம் பின்வருமாறு)
சென்னையிலும் சின்ன திருப்பதி கிளை ஆரம்பித்தார்கள்.ஆனால்
அங்கேயும் வருமானம் பற்றவில்லை..வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு இருந்த சூழலலில்…,தான்
ஒரு திருப்புமுனையாக..படத்தில் வரும் திடிர் செகண்ட் ஹீரோயின் எண்ட்ரிபோல்……..
திருப்பதி வெங்கடாசலபதியின் மனைவி லஷ்மி ஆவார்.ஆனால் அவர்
இப்போது குபேரனுடன் இணைந்து லஷ்மிகுபேரர் என்ற
பெயரில் ரத்தினமங்களம் என்ற ஊரில் வீற்றுயிருக்கிறார் சாமியாக……அதுவும் குபேரன் மடியில்
உட்கார்ந்து இருப்பார்.கோவிலுக்குச் சென்றால் பார்க்கலாம் அந்த அரிய காட்சியை….
திருப்பதி வெங்கடாசலபதியின் மனைவி ஏன் குபேரனுடன் இணைந்தார்.அல்லது
தன் கடனை அடைப்பதற்காக தன் மனைவியை குபேரனுடன் இணைந்து தொழில் பார்க்கச்சொல்லியிருக்கிறாரா
என்பது குறித்து கேள்விகளுக்கு சாட்சாத்…..அந்த வெங்கடாசலபதியே வந்து பதில் சொன்னால்
தான் தெரியும்…நான் எதுவும் சொல்லமாட்டேன்.ஏனெனில் சாமி குத்தம் ஆயிடுச்சுன்னா நான்
என்ன பண்ணுவேன்…?
அதனால நம்ம திருப்பதி வெங்கடாசலபதி தன் கடனை அடைப்பதற்காக
அனுப்பிய தன் மனைவி லஷ்மியை வைத்துக்கொண்டு இந்த குபேரர் நல்ல வியாபாரம் பார்க்கிறார்.
அதாவது வீட்டுக்குவீடு டோர் டெலிவரி கூட உண்டு.ரத்தினமங்களம்
கோவிலில் பணம் கட்டிவிட்டால் போதும்,உடனே லஷ்மிகுபேரர் சாமி பக்தி முழங்க வேனில் பட்டுவேட்டு
சட்டை,லஷ்மி அம்மா பட்டுப்புடவை,கூட வெள்ளிகளால் ஆன பொருட்கள் பணம் மற்றும் பழங்கள்
இவற்றுடன் நம் வீடு தேடி வந்து பூஜை செய்து கொடுக்கிறார்கள்.சுவாமியை சுமந்து வரும்
சுவாமி ஜீ க்கள்..
2 மணிநேரப்பூஜையில் நம் வீட்டில் இருக்கும் தங்கம்,வெள்ளி,பணம்
இவற்றைக்கொண்டு லஷ்மிகுபேரரர் பூஜையில் அபிஷேகம் பண்ணி (அந்தப்பணம், நகை,வெள்ளி )எல்லாம்
இன்னும் அதிகமாகப் பெருக, நமக்கு ஆசிர்வாதம் பண்ணிக்கொடுப்பார்கள்.
லஷ்மி குபேரரர் சாமிக்கு பச்சைக்கலர் தான் ராசியான கலர் சோ
அவருக்கு பச்சைகலரில் தான் திருநீறு,மற்றும் பச்சைக்கலர் லட்டு,மற்றும் பச்சைகலர் கயிறு
இப்படித்தான் அபிஷேகம் பண்ணிக்கொடுக்கிறார்கள்.
பச்சைக்கலரில் வலம் வருவதால் பச்சை சாமி என்றெல்லாம் சொல்லக்கூடாது…சாமிக்குத்தம்
சாமிக்குத்தம்….
அதேமாதிரி லஷ்மிகுபேர கோவில்….,,அரிசி புடைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய
அந்த சுளகில் பச்சைக்கலரில் ஒரு ஜாக்கெட் பிட்,பச்சைக்கலரில் ஒரு லட்டு,பச்சைக்கலரில்
கயிறு மற்றும் ஒரு 5 ரூபாய் நாணயம் மற்றும் தாமரைப்பூ ஒன்று இவற்றை வைத்து 150 ரூபாய்க்கு
விற்கிறார்கள்.
அதை நாம் வாங்கிச்சென்று அபிஷேகம் பண்ணினால் காசுகளில் ஏதோ
அர்ச்சனை பண்ணி அதில் நமக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.அதை நாம் எடுத்துக்கொண்டு வந்து
பீரோவில்,அல்லது பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் பணம் பெருகி நாம் அம்பானியை விட
அம்பார்லாவாக ஆகிவிடுவோம் என்பது ஐதீகம்.
இதை மக்கள் நம்பி கடைபிடிக்க ஆரம்பித்து விட்டனர்.இதனால்
ரத்தினமங்களம் கோவிலில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.வருமானம்
அதிகமாகிக்கொண்டே வருகிறது.லஷ்மி குபேரர் தினம் என்று ஒரு நாள் மட்டும் கோடிக்கணக்கில்
வருமானம் வந்ததாக தெருக்கோடி சாமிகள் சொன்னார்கள்.
இதுவரை பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே குடிகொண்ட குபேரர்..இந்தியத்தொலைக்காட்சி
வரலாற்றில் முதல்முறையாக நடுத்தர குடும்பங்கள் வீட்டிற்கும் சென்று காட்சி அளிக்க இருக்கிறார்.நடுத்தரமக்களையும்
காசு வாங்கி காட்சி தந்து (ஏ)மாற்ற இருக்கிறார்.
இதனால் இன்னும் அநேக மக்கள் முட்டாள் ஆவதற்கு நிறைய சான்ஸ்கள்
இருக்கின்றன.என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
திருப்பதி வெங்கடாசலபதி கடனை அடைக்க முடியாததால் தன் மனைவி
லஷ்மியை குபேரனுடன் நம்பி அனுப்பி தன் கடனை அடைப்பதற்காக பெரும்பாடுபடும் வெங்கடாசலபதிக்கும்,
தன் கணவனின் கடனுக்காக இன்னொரு ஆணுடன் வீடுவீடாகச்சென்றும்,கோவிலில்
வீற்றிருந்தும் எல்லோரிடம் பணம் வாங்கிக் கடனை அடைத்துக்கொண்டு இருக்கும் லஷ்மிக்கும்,
இவர்களை எல்லாம் குபேரராக ஆக்கி நடுத்தர மக்களையும்,பணக்காரர்களையும்..,ஏன்
ஏழைக்களையும் கூட குபேரர் ஆக்க இருக்கும் தொப்பை
குபேரருக்கும் என்ன கைமாறு செய்வது என்று தெரியாமல் முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குபேர குபேர நாமம் வாழ்க………!
இவ்வளவு தகவல்கள் இன்று தான் தெரியும்...! சென்று வந்த அனைவரும் வாழ்க...! நமது பகுதியில் விரைவில் ஆரம்பித்து விட வேண்டியது தான்...
ReplyDelete