Friday, 31 May 2013

கலைஞரும்,நானும் குறுகிய காலத்து தோழமைகள்….!


அவரது அறிவின் பயணம் ஆரம்பிக்கபட்ட வயதில் கால்வாசி வயது தான் எனக்கு..ஆனால் அவரது எழுத்துக்களும் தமிழ் உணர்வும்,அரசியல் நாகரீகமும்,அடக்கமுறும் வார்த்தைகளும்,எளிதான நகைச்சுவையும்,அதிரடியான பதில்களும்,குடும்ப உறவுகளின் மீது உள்ள பாசமும்.


எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது கலைஞர் எனக்கும்,ஆண்களுக்குமான எல்லா உறவுகளையும் அவர் உருவாக்கியிருக்கிறார் என்றே உணர்கிறேன்.தாத்தா,மாமா,அப்பா,அண்ணன்.தோழன்,முக்கியமாக என்னையும் படிக்கத்தூண்டிய பத்திரிக்கையாளர்,படைப்பாளி,உண்மையான உழைப்பாளி,


இப்படியான ஒவ்வொரு பரிமாணங்களிலும் அவர் என்னைக்கவர்ந்தவர்.என் அப்பாவின் பேச்சிலும்,என் கணவரின் ரசிப்பிலும் கலைஞரை மேலும் சுவாசிக்கத்தொடங்கிவிட்டேன்.
கடந்த பத்து ஆண்டுகளாக அரசியல் அனுபவம் நிறைய என்னை ஆட்கொண்டு இருந்து இருக்கிறது.

அதன் மீது நான் நடக்க ஆரம்பித்தபோது என்னைக் கையை பிடித்து அழைத்துச் சென்று,அரசியலில் எல்லாம் பார்க்கலாம் என்று காண்பித்தவர் கலைஞர் அவர்கள் தான்.


கலைஞருக்கு பகுத்தறிவு பார்வை இருந்தாலும்,என்னை பகுத்தறிவு பாதைக்கு அழைத்துச்சென்ற பெரியாரைப்போல,அவரது புத்தகங்களைப்போல…,வாழ்க்கையில் தாம் எடுத்த ஒரு முடிவை எப்படிக் கையாள்வது என்று நான் கலைஞரிடம் தான் கற்றுக்கொண்டேன்.


இன்றும் பிர பல பத்திரிக்கைகளைப்பற்றி விமர்சனம் செய்கிறாய்,மேலிடத்தை பகைத்துக்கொள்கிறாய்,எதற்கும் சமாதானமாகப்போ எல்லோரும் ஒருநாள் உனக்கு பயன்படுவார்,நாளைக்கு அந்த சேனல்களில்,பத்திரிக்கைகளில் கூட உன் பெயர் இடம் பெறும் என்றெல்லாம் எச்சரிக்கை மணி அடித்தனர் தோழமைகள்.


ஆனால் எனக்கு என்று ஒருமனம் உள்ளது,மானமும் உள்ளது.அதனால் நான் என்றும் திமுக தலைவர் கலைஞர் பக்கம் தான் சாய்வேன்.அதற்கு அடுத்து அமரும் திமுகவின் தலைமையை பற்றி விமர்சனம் ஆயிரம் இருந்தாலும் என்னைப்போன்றோர்,இன்று படித்து,எழுத,நல்லவேளைக்குச்செல்ல,எதிர்த்து கேள்வி கேட்க,பத்திரிக்கை சுதந்திரம் பற்றிப்பேச,என எல்லா உரிமைகளையும் பெற்றுத்தந்த பெரியார்,அண்ணா,கலைஞர் போன்றவர்களும்,திராவிட இயக்க கொள்கைகளும், தான் காரணம்.


அவர்கள் கஷ்டப்பட்டு பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று கோவில்களில் உள்ள பூசாரிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு,மூட நம்பிக்கையுடன் பணம்,காசு,பதவி வந்து விழுமா என்ற காக்கா கூட்டம் வட்டமடிக்கும் கரண்ட் இல்லா கம்பிகளை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருக்கிறோம்.


இயல்பையும் மீறி என்னுள் இருக்கும் கோபத்திற்கு காரணம் ஜெ அரசு நடத்தும் அரசியல்.அதிலும் கலைஞர் எதிர்ப்புக்காக எழுதவில்லை.எனக்கு தனிப்பட்ட ஜெ வின் மீதான விமர்சனம் அவ்வளவே.



கலைஞரின் பிறந்தநாள் அன்று கூட அவரை கேவலமாக விமர்சிப்பவர்களைக்கூட எள்ளி நகையாடிவிடுவார் தன் புன் சிரிப்பால் கலைஞர்.அந்த நகைச்சுவை உணர்வு நாயகனின் உதட்டோர பூக்கும் புன்னகைதான்..இன்று என் போன்றோர் கவனிக்க வேண்டிய விசயம்.எத்துணை கோபம் வந்தாலும் பொறுமையான உன் மவுன சிரிப்பைக்காட்டு,அடுத்தவன் உன்னிடம் தோற்றுப்போவான்.என்ற நகையாடலின் உரையாடலைத் தான் கலைஞர் சொல்லாமல் சொல்வது.


அவருக்கு 90 வயது நம்பமுடியவில்லை.எனக்கு 32 அதையும் நம்பமுடியவில்லை.அவரின் உழைப்பின் ஆலமரத்தில் இப்போது தான் விழுதாக விழத்தொடங்கினேன்.இன்னும் உறுதியான வேராக ஆக்கிக்கொண்டு ஆலமரத்தின் கிளைகளில் கையை கொடுத்து உறுதியாக்கிக்கொள்ள இன்னும் ஆண்டுகள் பல வேண்டும்.
அதற்கு என் ஆசிரியர் தான் தலைமை ஆசிரியராக இருந்து என்னை தன் மாணவியாக பாவித்து நல்ல மதிப்பெண் மற்றும் அல்லாமல் நற்சான்றிதழ் வாங்கவும் வழிநடத்த வேண்டும்.


நான் நேரடியாக கலைஞர் அவர்களுடன் தொடர்பில்லாமல் இருக்கலாம்.ஆனால் அவரது வாசகங்கள்,பேச்சுக்கள் இவற்றைப்பார்த்து வளர்ந்துகொண்டு வருகிறேன்.மேலும் அவரை கண்கொட்டாமல் பார்த்துப் பார்த்து வளர வேண்டும் என்பது தான் என் ஆசை…


அந்த ஆசையை கலைஞரும் நிறைவேற்றுவார்.அந்த ஆசையை மேலும் பேராசையாக்கி,உழைப்பு என்னும் உன்னதமான உயிரை பயிராக விளைத்து,அதற்குத்தினமும் தண்ணீர்,உரம்,பாசனம் எல்லாம் போட்டு அதில் கிடைக்கும் பயிரை என் பாசத்தலைவனுக்கும்,இந்த மக்களுக்கும் பரிசாகத்தருவேன்…

வாழ்க பெண்ணை…..பொன்னாக விளைத்த பெரியார்,அண்ணா,கலைஞர்,திராவிட இயக்க கொள்கைகள்……….
கலைஞரின் பிறந்தநாளுக்கு என்னுடைய பரிசு இந்த எழுத்து..காணிக்கை செலுத்தவில்லை.காணற்கரிய எழுத்தின் படைப்பாளிக்கு……சின்னப்பிள்ளையின் மிட்டாய் (எழுத்து) அவரின் பிறந்தநாள்….பரிசு…..! 

தன் மனைவியின் செக்ஸ் தேவைக்கு மதிப்புக்கொடுத்த கணவன்...!


கணவனிடம் எப்படி இயல்பாக இருக்க வேண்டும் அல்லது நடந்துகொள்ள வேண்டும்..தன் கணவனிடம் தனக்குத்தேவையான வடிகாலை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அப்பெண் புரிந்துகொள்ளவில்லை,அல்லது அவளது வளர்ந்தவிதம் அப்படி இருக்கலாம் என்று சாதாரணமாக விட்டுவிடமுடியாது என்பதால் அவளைக்கூட்டிக்கொண்டு அவளது அம்மா வீட்டிற்குச் சென்றேன்.

அங்கே அமைதியான சூழலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.அவளது இன்னோஸண்டான விசயங்களை எடுத்துக்கூறினேன்.ஆரம்பத்தில் புரிந்துகொள்ள மறுத்த அவள்,பின்னர் கொஞ்சமாக புரிந்துகொண்டாள்.
அவளது கணவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும்,அவருக்கு உன்னுடைய பீலிங்ஸையும் எப்படி புரிய வைக்க முயற்சிக்க வேண்டும் என்பதையும் சொன்னேன்.

என்ன பண்றது..?நான் எப்படி ஒரு ஆணிடம் சென்று எனக்கு இந்த மாதிரி செக்ஸ் தேவைப்படுது என்பதை அவரிடம் சொல்லமுடியும், என்னைப்பற்றி என்ன நினைப்பார்.நான் உடல்தேவைக்காக அலைகிறேன் என்று நினைத்துக்கொள்ள மாட்டாரா…?என்று பல கேள்விகளை என்னிடம் அடுக்கினாள்.

முதலில் தெரிந்துகொள், அவர் வேறு ஒரு ஆண்மகன் அல்ல..உன்னுடைய கணவன்.உன்னுள் சகலமும் அவர் அடக்கம்.என்று உன்னை மணமுடித்தாரோ..என்று உன்னோடு உடலுறவு வைத்துக்கொண்டாரோ,அன்றே நீயும்,அவரும் ஒன்னுள் ஒன்றில் அடக்கம்.
எனவே உன்னுடைய எதிர்பார்ப்புகளை அவரிடம் சொல்லிப்புரிய வைப்பதில் தவறில்லை.எனக்குத் தெரிந்து என்னைப்போன்றோரிடம் உன் மன அழுத்தங்களை சொல்லிக்கொண்டு இருப்பதை விட உன்னுடைய கணவரிடம் சென்று சொல்லிப்புரிய வை.

அவர் ஏதாவது தப்பாக நினைப்பவர் என்றால்,உடனே ஒரு செக்ஸாலஜி டாக்டரிடம் கூட்டிச்செல்,அவர் உன்னையும்,அவரையும் ஒன்றாக அமர்த்தி உங்களுக்குள் ஏற்படும் செக்ஸ் பிரச்னைக்கு இருவரிடம் பேசி புரியவைக்க முயற்சிப்பார் என்றேன்.

இதற்கு எல்லாம் அவசியம் ஏற்படாது.உன் கணவரிடம் நீ முதலில் தைரியமாகப்பேசிப்புரிய வை. பின்னர் பார் உன் எதிர்பார்ப்பு எப்படி நிவர்த்தி ஆகிறது என்றேன்.

கொஞ்சம் சஞ்சலங்கள்,மற்றும் எதிர்பார்ப்புகளோடு அவள் வீட்டிற்குச்சென்றாள்.

இரண்டுநாள் கழித்து தொடர்பு கொண்ட அவள்
ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..நீங்க சொன்னமாதிரியே ஒர்க் அவுட் ஆயிடுச்சு.சொல்லத்தயங்கிய விசயங்களை நான் தயங்கித்தயங்கி பேசுவதைப் பார்த்து புரிந்துகொண்டு என் கணவரே…உனக்கு என்ன பிரச்னை ?என்று கேட்டார்.

நான் அழ ஆரம்பித்துவிட்டேன். உடனே என்னைக் கட்டித்தழுவிக் கொண்டு,இப்போ சொல்லு உனக்கு என்ன பிரச்னை ..என்றார்.
நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,நீங்க என்னிடம் அன்பாக நடந்துக்குறீங்க.ஆனா எனக்கு உங்களுடனான செக்ஸு சுகமும் தேவைப்படுது.நீங்க என்ன ரசிக்கனும்,அரவணைக்கனும் என்று ஆசைப்படுறேன்.இதையெல்லாம் நான் சொல்வதால் நீங்க என்ன தப்பா நினைச்சாலும் சரி.எனக்கு உங்களைவிட்டா மற்று வேறு யாரிடம் சென்று என் தேவைகளை கேட்கமுடியும்.என படபடவென்று பேசிவிட்டு பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்துக்குடித்தேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக என்னை உற்று நோக்கிய அவர்.நான் எப்படி நடந்துக்கனும் என்று ஆசைப்படுற..?

சரி…நானே சொல்றேன்…..

நான் உன்னை வெறுக்கிறேன்,அல்லது கண்டுகிறது இல்லைனு நினைக்கிற அளவுக்கு என்னுடைய செயல்பாடுகள் இருந்து இருக்கு.என்னை மன்னிச்சுடு.இனிமே உன் தேவைகளை நான் சரி செய்கிறேன்.உன்னிடம் அன்பாகத் தான் இருக்கிறேன்.இருந்தும் அதை இனிமேல் உன்னிடம் வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நான் பார்க்கும் வேலை,சூழ்நிலை இதையெல்லாம் நீ புரிஞ்சுக்கிற வரைக்கும் நான் உனக்குத்தகுந்தபடி நடந்துக்கிறேண்டி என் செல்லம்…என்று என்னைக்கட்டி அணைத்துக்கொண்டார்..

யம்மாடி எனக்கு சந்தோஷமா தாங்கல…உங்க யோசனையை கேட்காம மனசுல வச்சுட்டு இருந்தேன்னா…இந்நேரம் ரொம்ப மன உளைச்சலில் சிக்கி தவித்து இருப்பேன்.இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.என் கணவர் இரண்டு நாட்களா என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுத்துறார் என்றாள்.

அவளது கணவர் மிகுந்த புத்திசாலியாக இருந்து இருக்கிறார்.தன் மனைவியின் சந்தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.அவளது தேவையை அவர் உணர்ந்து இருக்கிறார் என்றதால் தான் அவர் உடனே தன் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு இருக்கிறார் தன் மனைவியிடம் ஈகோ பார்க்காமல்…

புரிந்து கொண்ட கணவனோ,மனைவியோ அமைந்துவிட்டால் வாழ்க்கை முழுதும் சந்தோஷம் நம்முடையதாகத்தான் இருக்கும்..
இவைதான்.. …இதுதான்…...இவ்வளவே தான்….. புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வார்கள்…

மற்றவர்கள் …….?அடுத்ததாகப்பார்ப்போம்…….

Thursday, 30 May 2013

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்..!தீர்வுகள்..!


இப்போது உள்ள சூழ்நிலைகளில் 100 சதவீதம் பெண்களில் 60 சதவீதத்திற்கு மேல் பாலிசிஸ்டிக் (polycystic ovary) அதாவது,பெண்கள் கருப்பைக்கு கொண்டு செல்லக்கூடிய விந்தணுக்களை கருப்பையின் இருபுறங்களிலும் தொடர்புடைய பெண்களின் குறிகளுக்கு உள்ளே அமைக்கப்பட்டு (இடது,வலது புறத்தில் கர்ப்பபையின் முனையில்) இருப்பது தான் இந்த ஓவரி.

இதன் வேலை தான்  கருமுட்டைகளின் செயல்பாடுகளை கவனித்து வழி அனுப்புதல்,ஆரோக்கியப்படுத்துதல்,ஆண்களின் விந்தனுக்களோடு பெண்களின் கருமுட்டைகளை இணைத்து கர்ப்பப்பைக்குள் அனுப்பும் வேலை இவற்றை செய்து கொண்டு இருக்கிறது.அந்த ஓவரி என்று சொல்லப்படும் டியூபில் வேர்க்குரு போன்ற சிறு சிறு கட்டிகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

ஆனால், இப்போ உள்ள உணவு முறை பெண்கள் எடுத்துக்கொள்ளும் ஜங்புட்,கலோரியஸ் அதிகம்,அல்லது குறைவாக இருக்கும் உணவுகள்,மற்றும் அதிகமாக உட்கொள்ளப்படும் மருத்துகள் இதனால் ஓவரியில் தோன்றும் வேர்க்குரு போன்ற கட்டிகள் வளர ஆரம்பிக்கின்றன.

இதனால் பெண்களுக்கு ஏற்படும் மாதந்தோறும் சுழற்சியாக வரும் மாதவிடாய் டைமுக்கு வேலை செய்யாமல் காலதாமதமாக செய்யத்தொடங்குகிறது.இதனால் 27 நாட்களில் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி சிலருக்கு 40 நாள்,சிலருக்கு 60,90 நாட்கள் கூட தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

இந்த கட்டிகளை உடனடியாக கவனித்து,அதற்கு ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் உடனடியாக குணப்படுத்தலாம்.சிலர் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.இதனால் கர்ப்பம் ஆகுவதில் கூட காலதாமதம் ஆகிவிடும் என்பது தான் அதிர்ச்சியான உண்மை.

திருமணம் பந்தம் ஆரம்பிக்கும் போது அங்கே தடங்களாக இந்த பாலிசிஸ்டிக் ஓவரியின் தொல்லை அங்கே நமக்கு இடையூறாக இருக்கும்.

அதனால் நமக்கு மாதவிடாய் நாள் தவறி வர ஆரம்பிக்கிறது என்கிர போதே,உடனடியாக கைனகாலஜி மருத்துவரை அணுகி,அவர்களின் ஆலோசனையின்படி டெஸ்ட் செய்து பாலிசிஸ்டிக் ஓவரி பிராப்ளமாக இருந்தால் உடனடியாக கவனித்துவிடுங்கள்.

அதுதான் கர்ப்பகாலங்களில் பிரச்னைகள் தோன்றாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.இதை கவனித்துவிட்டால்.பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பம் ஏற்படுவதில் பிரச்னை தடுக்கப்பட்டுவிடும்.

அடுத்ததாக தைராய்டு பிரச்னை காரணமாக கூட பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் பிரச்னைகள் ஏற்படும்.தைராய்டு இரத்தநாளத்திலும்,தொண்டைப்பகுதிகளிலும் தோன்றும் ஒரு சுரப்பி.அந்த சுரப்பு கூடுதலாகவோ,அல்லது குறைவாக சுரக்க ஆரம்பித்தால் பிரச்னை தான்.

தைராய்டு பிரச்னை ஆண்களுக்குக் கூட வரும்,இதனால் அவர்களுக்கும் உடல் பருமன்,அல்லது உடல்குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது.இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது உடலில் உள்ள அயோடின் குறைபாடுதான் என்பதாகும்.

அயோடின் நாம் உபயோகப்படுத்தும் அன்றாட சமையல்களில் சேர்த்துக்கொண்டாலே போதுமானது என்கிறார்கள்.கல் உப்புகளில் அயோடின் அதிகம் இருப்பதால்,சமைக்கும் போது தூள் உப்பை பயன்படுத்துவதை விட கல் உப்பு அதிகம் பயன்படுத்துங்கள்.

தைராய்டு பெண்களுக்கு கர்ப்பகாலங்களில் பிரச்னை ஏற்படுத்தும். கர்ப்பகாலங்களில் உள்ளே வளரும் குழந்தைக்கு உடல் குறைபாடும் ஏற்படும்.போஷாக்கு அற்ற குழந்தையாகவும் வளர வாய்ப்புள்ளது.எனவே தாமதம் ஏற்படுத்தாமல் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான முறையான டிரீட்மெண்டில் ஈடுபட வேண்டும்.

அப்போது தான் ஆரோக்கியமான குழந்தையை பெண்கள் பெற்று எடுக்கலாம்.

அடுத்தாக இன்னும் மருத்துவத்தை ஆராயலாம்……

Wednesday, 29 May 2013

அட கிருஷ்ணா நீ பண்ணின சேட்டைகள் கொஞ்சமா,நஞ்சமா…?


கிருஷ்ணலீலைகள்…கேள்விப்பட்டு இருக்கேன்…ஆனால் நீ பண்ணினதோ காமலீலைகள் ஆக அல்லவா இருக்கின்றன.எத்துணை அநியாயங்கள் படைத்திருக்கிறாய்…?

உன்னை கடவுளாக சித்தரித்துக்கொண்டாடும் மக்களை நினைத்து சிரிப்பதா..அழுவதா என்று கூடத்தோணவில்லை.கிருஷ்ண ஜெயந்தி என்ற உன்ற பிறந்தநாளை விழாக்கோலமாக அல்லவா கொண்டாடி மகிழ்கின்றனர் என் குலமகள்கள்.

அவர்களுக்குத்தெரியுமா…?அடுத்தவன் மனைவியைக்கூட நீ விட்டு வைத்தது இல்லை என்பது.அவர்களுக்கு நான் சென்று என்னவென்று புரியவைப்பேன்.

என்னை பகுத்தறிவு முட்டாள் என்று கூறிவிட்டு,அவர்கள் ”அ’நாகரீக கோமாளிகள் ஆகிவிடுகின்றனர்.அவர்களைக் கண்டால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

புதிது புதிதாக விரதங்கள்,அதும் பார்ப்பன சமுதாய விரதங்களை கடைப்பிடித்தால் நாமும் பார்ப்பனர்கள் போல் அறிவாளிகள் ஆகிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு விழா எடுக்கிறார்கள்.கிருஷ்ணஜெயந்தி விழாவைவெல்லாம் தற்போது தான் பேமஷாக்கிக்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் எல்லாம் கிருஷ்ணலீலைகளும்,கிருஷ்ணனின் வாழ்க்கையையும் படித்துப்பார்த்து இருப்பார்களா…?படித்துப்பார்த்தும் அப்படி இருக்கலாம் தம் பிள்ளைகளும் என்று நினைக்கிறார்களா…?

எப்படி ஒரு தாயால் தன் ஆண்பிள்ளை மற்ற பெண்களுடன் கூத்தாடி மகிழ்வதை ஏற்றுக்கொள்ளமுடியும்…?அல்லது பொய்,திருட்டு என்று வாழ்ந்த கிருஷ்ணனை தங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடிகிறது.
தன் ஆண்மகனும் அந்த கிருஷ்ணனைப்போல் திருடி,பிராடுத்தனம் பண்ணியும்,பெண்கள் பலருடன் கூடிக் களவியில் ஈடுபடுவதையும் சகித்துக்கொள்ள முடியும்?

கர்ப்பிணிப்பெண்கள் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கிருஷ்ணனை வழிப்பட்டு வருகிறார்கள்.எனக்கு கிருஷ்ணன் போல் அழகான ஆண்மகன் பிறக்க வேண்டும் என்றும்,பிறந்தால் கிருஷ்ணஜெயந்தி விழா எடுத்து சீரும் சிறப்புமாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறேன் என்று வேண்டுதலையும் வைத்துக்கொள்கிறார்கள்.
ஒன்று ஆண் குழந்தை இல்லையெனில் பெண் குழந்தை பிறந்து தான் ஆகவேண்டும்.

தப்பித்தவறி வேண்டியபடியே (இயற்கையாக)ஆண் குழந்தை பிறந்துவிட்டால் போதும்..கிருஷ்ணன் பிறந்துவிட்டான் என்று அந்தகுழந்தைக்கு கிருஷ்ண கொண்டையும்,கிருஷ்ணன் அணிவது போன்ற உடையும் அணியவைத்து அழகு படுத்தி கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடி மகிழ்கின்றனர்.

பிறந்ததில் இருந்து சேட்டையும்,பொய்யும்,புரட்டும்.அடுத்த குடும்பங்களில் சென்று கலகங்களை ஏற்படுத்தி அதில் மனமகிழ்வது எல்லாம் கிருஷ்ணனின் மனபாவமாக இருந்து இருக்கிறது.தெரிந்து மூன்று கல்யாணம்,தெரியாமல் பதினோராயிரம் பெண்களுடன் வாழ்ந்த கிருஷ்ணன் எப்படி ஒரு கடவுளாகவோ….அல்லது பண்பிற்குரியவராகவோ…ஏன் மனிதனாகவோ கூட இருக்க முடியும் என்று ஒரு சாதாரண மனிதர்களால் உணரமுடியாமல் போகுமா…?

அல்லது எதையுமே தெரிந்து கொள்ள முற்படாமல் யாராவது சொல்றாங்களா அதையே கண்முன் தெரியாமல் நாமளும் பாலோ பண்ணுவோம் என்று பண்ணிக்கொண்டு இருக்கிறார்களா……மக்கள்…..!
அந்த மக்களுக்கு எப்படி புரிய வைப்பது ..?இதையெல்லாம் யார் எடுத்துச்சொல்வது..?

சொன்னால் புரியும் மனநிலையில் இருப்பார்களா…?அல்லது படித்துத்தெரிந்து கொள்வார்களா….?

எனக்கு என்னவோ சந்தேகம் தான்.மக்கள் பகுத்தறிவு பாதையை விட மூடநம்பிக்கை பாதைக்குத்தான் அதிகமாக இழுத்துச்செல்லப்படுகிறார்கள்.அவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

கிருஷ்ணனின் லீலைகளுக்கு அவனின் அயோக்கியத்தனத்து இரண்டு உதாரணம் சொல்கிறேன்.

கிருஷ்ணன் மன்னன் ஒருவனைச் சந்திக்கச்செல்கிறான்.அவனுக்கு நல்ல ஆடை வேண்டும்,அப்போது அரண்மனைக்குச் சலவை செய்து கொடுப்பவனைக்கண்டு டிரெஸ் கேட்கிறான்.அரசன் உடையது எனவே நான் கொடுக்கமாட்டேன் என்றவனை தலையில் தட்டி அவனை சாகடித்து டிரெஸ்ஸை திருடிச்செல்கிறான் கிருஷ்ணன். அடாவடித்தனம் பண்ணி ஜெயிக்கும் இவன் எப்படி கடவுளாக முடியும்,

பின்னர் வழியில் பூ விற்கும் பாட்டியைக் காண்கிறான்.அவள் கூனு விழுந்த கிழவியாக இருக்கிறாள்.தனக்கு சந்தனம் பூசிவிடும் படி கேட்கிறான்.அவள் பூசிவிட்டதும்,அந்தப்பாட்டியின் கூன் விழுந்த முதுகை சரிசெய்ய இடுப்பு எலும்பில் கை வைக்கிறான்.(அந்தக்காலத்து ஆர்த்தோ டாக்டர் போல) உடனே கூன் சரியாகி பாட்டி இளமை வடிவம் எடுத்து கிருஷ்ணனின் கை பட்டதால் உணர்ச்சி கொள்கிறாள்.கிருஷ்ணன் இது கண்டு மகிழ்ந்து அந்தப்பாட்டியுடன் களவிகொள்கிறான்.என்ன ஒரு முட்டாள் தனமான செயல்.இதை வரலாறும் சொல்கிறது.

அந்த வரலாறைப்படித்தும் புத்தி இல்லாமல் கிருஷ்ணன் அவதாரமாக தன் பிள்ளைகளை நினைத்துக்கொண்டு அப்படியே கிருஷ்ணனைப்போல் வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

கிருஷ்ணா தயவு செய்து நீ கடவுள் அவதாரமாக இருந்தால் உடனே கிளம்பி வந்து  உன் நடத்தையை எல்லோருக்கும் புரிய வை.இல்லையெனில் பகுத்தறிவு பார்வை பார்க்கும் எங்களுக்கு நீ நல்லவனாகவாவது ஆகிக்காட்டு…….

இரண்டில் எது நடந்தாலும் சந்தோஷம் தான்……இல்லையெனில் இந்த மூடநம்பிக்கையில் தினந்தோறும் ஊறிப்போய் இருக்கும் மக்கள் இன்னும் மூடநம்பிக்கை வியாதிக்காரர்கள் ஆகி,அதற்கான மருந்தும் கிடைக்கப்பெறாமல் கஷ்டப்படப்போகிறார்கள்….. 

Tuesday, 28 May 2013

மே 29 “வெறும் திறக்க” மட்டுமே செய்கிறார் ஜெயலலிதா......!


அடுத்தவர்களின் நற்செயலை தன் செயலாகக்காட்டிக்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திறமையைக் கண்டு எல்லோரும் வியப்படைகிறார்கள்.

எப்படி நம்மால் மட்டும் இப்படி பொய்மாறியை மும்மாறியாக பொழிய வைக்க முடிகிறது என்று தன் கீழ் இருக்கும் அமைச்சர்களே வியக்கும் அளவிற்கு ஜெயலலிதா தலைமையில் அரசாட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பொதுமக்களாகிய நாமும் நடப்பதெற்கெல்லாம் ஜிங்..ஜாக் போட்டுக்கொண்டு அமைதி காக்கிறோம்.எங்கே எதிர்த்து கேள்வி கேட்டால் கேஸூம்,போலீஸூம் தேடி வருமோ என்ற பயத்தில் வாயைக்கூட திறப்பற்கு கூட யோசிக்கிறோம்.

பேப்பரிலும்,செய்திகளிலும் ஜெயலலிதா ஆட்சியில் சாதனை ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் வெற்றி…போராடி ஜெயித்துள்ளார் முதல்வர் என்று போஸ்டர் அடிக்காதகுறையாக விளம்பரப்படுத்துகிறார்கள்.

கலைஞரும் ”பொய்மையும் வாய்மையிடத்து புறைதீர்த்த” என்ற திருக்குறள் கூற்றுக்கு ஏற்ப உண்மையை மறைத்து பொய் சொன்னால் கூட அது மக்களுக்கு பயன்படகூடியதாக இருப்பின் வரவேற்கிறோம் என்று தங்களால் நடந்ததை அதிகமாக வெளிப்படுத்தாமல் ஒரு சிறிய விசயமாக முடித்துவிடுகிறார்.

என்ன தான் நடக்கிறது இங்கே..ஏன் அடுத்தவர்கள் செய்த எதையும் பொறுத்துக்கொள்ள முடியாத..அல்லது அவர்கள் பெயரைக்கண்டாலே எரிச்சல் அடைகிற ஜெயலலிதா ஒகேனக்கல் திட்டத்தில் தன் பெயரை பிரபகண்டா படுத்திக்கொண்டு ஏன் திரிகிறார்.

ஓட்டு அரசியல் செய்கிறார்.ஆலோசனை சொல்ல இப்போது நல்ல ஆட்களை உடன் வைத்து இருக்கிறார்.அதனால் ஒவ்வொரு செயலையும் செக் வைப்பது போல காய் நகர்த்திச் செய்ய முற்படுகிறார்.நல்லவிசயம் தான் இவரது செயலால் மக்கள் நலன் பெற்றால் போதும்..

அதற்காக யாரால் எப்படி ஏற்பாடு செய்யப்பட்டு இந்தத்திட்டம் தொடங்கப்படப்போகிறது என்று வரலாறு தெரியாமல் சில பொய்யிலீகள் பொய்யாக விமர்சனம் பண்ணிக்கொள்கிறார்கள்.அந்த பொய்யீலீகளுக்கு இந்த ஆதாரம் தேவை.

தருமபுரி,கிருஷ்ணகிரி,ஓசூர் ஆகிய மூன்று நகராட்சிப்பகுதிகளில் உள்ள 18 ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறாயிரத்து எழநூத்து ஐம்பத்து ஐந்து குடியிருப்புகள், மொத்தம் 30 லட்சம் மக்கள்.

அவர்களில் பெரும்பாலனவர்கள், பற்களை மஞ்சள் ஆக்கக்கூடிய,,மூட்டுத்தேய்மானம்,முதுகெலும்பு,கை,கால் வளைதல்,முடக்குவாதம் போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்தனர்.
மோசமான தண்ணியினால் மிகவும் உச்சகட்ட நோயின் தீவிரம்  மக்களை பாதிப்படையச்செய்கிறது என்பதை புரிந்து கொண்ட திமுக தலைமை முப்பது லட்சம் மக்கள் இந்நோயின் தீவிரத்தில் காக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 2007-2008 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை 23.3.2007 அன்று தமிழகச்சட்டப்பேரவையில் அளித்தனர்.

அங்குள்ள பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய பாதுக்காக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரை வழங்கவேண்டும்.அதற்கு ஒரே தீர்வான ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் திட்டம்,ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் நிதியுதவிக்காக மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது.
அதன்படி,ஆரம்பகட்ட ஆய்வுகளை அந்த மாவட்டங்களில் மேற்க்கொண்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.அதை ஏற்ற மத்திய அரசு அதற்கான செயல்பாடுகளை அரசு மேற்க்கொள்ளும் என்று கூறியது.

இந்த செயல்பாடுகளை அப்படியே விட்டுவிடாமல் அப்போதைய திமுக கழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு க ஸ்டாலின் அதிகாரிகள் குழுவுடன் ஜப்பான் நகர் டோக்கியோ சென்று அங்குள்ள பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் இயக்குனர் திரு.டிசியோகுசி அவர்களை 6.2.2008 அன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்விளைவாக 9 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கும் சேர்த்து நிதி ஒதுக்கித்தருவதாக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி உறுதி அளித்தது.

அதன் அடிப்படையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களால் அடிக்கல்லும் நாட்டப்பட்டது.1334 கோடி ரூபாய் செயல்படுத்திட  25.2.2008 அன்று திமுக தலைமையில் தான் ஆணைகளும் வெளியிடப்பட்டன.
இது ஐந்து கட்டங்களாக நடைமுறைபடுத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் தருவாயில்,இன்றைய அதிமுக அரசு அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைக்காமல் பெரிய மனது பண்ணி ஒகேனக்கல் திட்டத்தை மே 29 அன்று இங்கிருந்தே கான்பிரன்ஸ் மூலம் ஜெயலலிதா தலைமையில் திறந்து வைக்க ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா செய்த ஒரே ஒரு காரியம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை  ஒரு பட்டனை அமுக்கி திறந்து வைக்க உள்ளார் என்பது மட்டுமே….ஆனால் ஏதோ அவரே எல்லா ஏற்பாடுகளையும் செய்து முப்பது லட்சம் மக்களின் வாழ்வாதரத்திற்காக பன்னாட்டு வங்கியின் காலிலும் மத்திய அரசின் காலிலும் விழுந்து கெஞ்சி கூத்தாடி வாங்கி அதைத்தன் கையால் திறந்து வைக்கிறார் என்பது போல் சீன் போடப்படுகிறது.
அதுக்கு ஜெயலலிதாவும்  வாயை மூடிக்கொண்டு அடுத்தவன் பிள்ளைக்கு தன் பெயரை வைப்பதை உணர்ந்து மனமகிழ்வடைகிறார்.

எப்படியோ 30 லட்ச மக்கள் பயன் அடைந்தால் சரி….ஆனால் அவர்களின் நினைவில் திமுக செய்த செயல்பாடுகள் மறந்து இன்று வெறும்  திறக்க மட்டுமே இருக்கும் ஜெயலலிதாவை பாராட்டி புகழாரம் செய்தால்…என்ன செய்வது.

காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது...அந்தப்பொன்னான நினைவுகள்.....

Friday, 24 May 2013

பெண்களின் தேவைகள்...!


தேவையான செக்ஸ் தேவைப்படும் நேரத்தில்,சூழ்நிலை கருதியும்,தவிர்க்க முடியாத காரணத்தாலும் தள்ளிப்போடலாம் என்று நினைக்கலாம்..அது தான் நம் இயல்பு வாழ்க்கைக்கும்,கலாச்சாரத்திற்கும் ஏற்றதாக இருக்கக்கூடும்.

இருந்தும் நமக்கு தேவைப்படும் இச்சையுணர்வு கொஞ்சம் தாமதமாக கிடைக்க நேர்ந்தால் நமக்குள் ஒரு சோர்வும்,மனப்பிளவும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆண்கள் பொதுவாக தங்களது காமத்துக்கு முழுமையான திருப்தி கிடைக்கவில்லையெனினும்,ஒரு வடிகாலினை தங்களுக்குள்ளாகவே தேடிக்கொள்கின்றனர்.இது எல்லா ஆண்களிடமுமே இருக்கக்கூடியது தான்.சிலர் மறுக்கலாம்.ஆனால் உண்மை தாங்களுக்கான செக்ஸை அவர்கள் சுயமாக அடைய முடியும்.

இதை ஒரு பெண் சொல்வதால் தவறாக ஆக்கப்படலாம்.ஆனால் பிரபல டாக்டர் பலரின் ஆலோசனையை கேட்டு தான் இந்தமுடிவு உறுதியானது என்பதை அறிந்துகொள்ளமுடிந்தது.

பெண்கள் ஆண்களைப்போல் சுய இன்பம் அடைந்தல் பெரும்பாலும் இல்லை.ஏனெனில் குடும்ப சூழல்,இயற்கை,அவர்களுக்கான மனநிலை எதிர்காலம் எல்லாவற்றையும் கருதி பெண்கள் தங்களை குறுக்கிக்கொள்கிறார்கள்.

ஒருசிலரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் பெரும்பாலும் தன் கணவர்களிடம் மட்டுமே இன்பத்தை அடைந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதுதான் சரியான வழிமுறை என்பது குடும்பத்தின் பால் ஊட்டப்படும் நம்பிக்கையும் ஆகும்.அப்படித்தான் ஒரு பெண் தன்னுடைய தேவைகளை தன் கணவரிடம் மட்டுமே அடைந்து கொள்ள எண்ணுகிறாள்.அவளது எண்ணத்தை புரிந்து கொள்ளமுடியாமல் சில கணவன்மார்கள் பரிதவிக்கவிடுகிறார்கள்..என்பதே தற்போதைய பெண்கள் சிலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பெண் தன் வாழ்க்கையே சரியாக அமையல,நான் என்ன பாவம் செய்தேன்னு தெரியல,கடவுள் எனக்கு எந்த சந்தோஷத்தையும் தரல..என்பது ரீதியில் பேசிக்கொண்டே போனாள்.

நான் இடைமறித்து உனக்கு என்ன அவ்வளவு பிரச்னை ,ஏன் இப்படி புலம்புற என்று கேட்டபோது அவள் சொன்ன காரணம் ரொம்ப வேடிக்கையாக இருந்தது.

இல்ல..நான் அவரையே நம்பிட்டு இருக்கேன்.ஆனா அவர் என்னைக்கண்டுக்கிறதே இல்ல..எப்போ பார்த்தாலும் பேப்பர் படிக்கிறது,டிவி பார்க்கிறது என்று கவனம் முழுவதும் வேறு பக்கமே வைத்து இருக்கிறார்.

நான் ஆசையாக என்ன டிபன்,லஞ்ச் செய்யட்டும் என்று கேட்டால் கூட உன் இஷ்டம்மா…என்று சொல்லி தப்பிச்சுடுறார்.

இதே அவருடைய நண்பர்கள் யாராவது வந்தா மணிக்கணக்கா பேசிட்டு இருக்கார்.அந்த நேரம் நான் அழகா டிரெஸ் பண்ணி அவர் பார்வை படும்படி நின்னாக்கூட கண்டுக்காம நண்பர்களிடம் பேச்சில் சுவாரஸ்யமாயிடுறார்.

எனக்கு என் மேல கோபம் வருது.நான் யாருக்கிட்ட போய் என் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வது என்று அழுது கொட்டித்தீர்த்துவிட்டாள்.

அந்தப்பெண்ணைப் பார்க்க பாவமாக இருந்தது.அவளது எண்ணங்கள் எல்லாம் தன் கணவனைச்சுற்றியே அமைந்து இருப்பதைக்கண்டு வியப்படைந்தேன்.இத்தனைக்கும் டிகிரி முடித்த பெண்..இந்தக்காலத்து பெண் பிள்ளைகள் போல் இல்லையே என்பது வியப்பாக அமைந்தது.

அவளின் முக்கிய பிரச்னை அங்கே தான் தன் கணவரால் கவனிக்கப் படமாட்டேன் என்கிறோம் என்ற ஆதங்கமும்,செக்ஸுவல் தேவை அவளுக்கு கணவனிடத்தில் (அவள்) எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைப்பதில்லை என்பதும் தெளிவாகத்தெரிந்தது.

அப்பெண்ணின் ஆசை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்.அவளது கணவனுக்கு இவளது எண்ணத்தை எப்படி புரிய வைப்பது என்பது பற்றி அடுத்ததாகப்பார்ப்போம்…

Monday, 20 May 2013

சீதாப்பாட்டி.......நச் பதில்....!


விளம்பர இடைவேளையின் போது சீதாப்பாட்டி என்னிடம் வந்து யம்மா..பொண்ணு நான் நல்லாத்தானே பேசுறேன் என்றார்கள்.சூப்பரா பேசுறீங்க பாட்டி…..அப்படியே தொடருங்க….என்றதும்,விளம்பரம் முடிந்து

ஸ்டார்ட் கேமரா என்றது யூனிட்…..

வெல்கம் பேக்… … நம்ம நாட்டுப் பெண்களின் கற்புக்கு உதாரணமாகக் காட்டப்படும் சீதை, கண்ணகி இவர்கள் போன்றோர், தங்களை அடிமையாக்கி வைத்த தங்களின் குடும்பச்சூழல் பற்றி விரிவாகப்பேச அழைக்கப்பட்டார்கள்.ஆனால் கண்ணகி கொஞ்சம் காலதாமதம் ஆகும் என்பதால் சீதை இப்போது நமது அரங்கிற்கு வந்து நம்முடன் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.தொடர்ந்து அவரிடம் கேள்விகளை கேட்கலாம்.

ப்ரதி ;பாட்டி ,சொல்லுங்க….இராவணன் உங்களை கடத்திட்டுப்போய் என்ன செய்தார்.அதற்கிடையில் சூர்ப்பனகை என்ற இராவணனின் தங்கையை ஏன் உங்கள் கணவர் மூக்கை வெட்டி அனுப்பினார்.அதுபற்றிய உங்கள் கருத்து என்ன…?

சீதைப்பாட்டி :லட்சுமணன் எங்கேயும் போகாதீங்க அண்ணி என்று கட்டளை இட்டுச்சென்ற பிறகு இராவணன் வயோதிக சாமியார் வடிவில் வந்து என்னிடம் உணவு கேட்டார்.நானும் கோட்டைத்தாண்டி வந்து உணவிட்டேன்.அப்போது அவரின் கைவிரல் கூட என் மேல் படாமல் என்னை அன்னவாகனத்தில் கடத்திச் சென்றார்.

அங்கு சென்ற பிறகு தான் எனக்குத்தெரிந்தது.தன் தங்கையின் மூக்கை அறுத்து அவமானப்படுத்தியதற்குத்தான் என்னை பழி வாங்குவதற்காக கடத்திச்சென்றார் இராவணன் என்பது, இராவணனுக்கு இருந்த கோபத்திற்கு என்னையும் அதுபோல் ஒச்சம் ஆக்கியிருக்கலாம், அல்லது பழிக்குப்பழி ஏதாவது செய்து இருக்கலாம்.ஆனால் அவர் அப்படி ஏதும் செய்யாமல் இராமனை தன் பக்கம் நியாயம் சொல்லும்படி தான் அழைத்தார்.அதற்குக்கூட என் கணவர் தன் மெய்க்காப்பாளன் அனுமாரை அனுப்பித்தான் என்னை நோட்டம் விட்டு வரச்சொன்னார். என் கணையாழியை கொடுத்து நான் நன்றாக இருப்பதாகக்கூறி அனுப்பினேன்.
பின் எப்படியோ போர் மூண்டு நான் மீட்கப்பட்டு,என் கணவனை ஆசையோடு பார்க்க வந்தேன்..


வந்ததும் என்னை நோக்கிய இராமன் நீ சுத்தமாக வந்து இருப்பாய் என்பது எனக்குத்தெரியும்,ஆனால் ஊரார் முன்னிலையில் நீ உன் சுத்தத்தனத்தை எல்லோருக்கும் அறியும் படி நிரூபி என்றார்.
எனக்குச் செத்துவிடுவது போல் ஆகிவிட்டது.கொடூரன் என்று எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இராவணன்,என் மீது சுட்டுவிரல் கூட படாமல் என்னை அண்ணன்,அப்பா மாதிரி ஒரு அக்கறையோடு அவர்கள் குடும்பத்து பெண்களை வைத்து என்னை கவனித்துக்கொண்டார்.

ஆனால் என் தூயத்தன்மை பற்றி அறிந்த என் கணவரே இப்படி கேட்டுவிட்டாரா…என்று நானும் தீயை மூட்டி அதில் இறங்கி நான் தூய்மையானவள் என்பதை நிரூபித்துக்காண்பித்தேன்.
ஆனால் இன்றுவரை எனக்கு அதில் கொஞ்சம்கூட உடன்பாடு இல்லை.இராமனின் செய்லகள் எனக்கு வெறுப்பை ஏற்றியது.ஆனாலும் நான் பத்தினி, கண்ணியமானவள் என்று எல்லோரும் போற்றுவதால் அதற்கு ஏற்ப வாழ, மன்னிக்கவும் நடிக்க வேண்டியதாகிப் போனது.

எனக்குள் இருக்கும் பெண் தன்மையை கணவனே சோதித்தபின் அவர் கணவனே அல்ல என்று தூக்கிப்போட்டுச் செல்ல அன்று என்னால் முடியவில்லை.ஆனால் இன்றைய பெண்களை பார்க்கும் போது,நாமும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.
என்ன செய்ய என் வாழ்க்கை முடிந்துவிட்டது.இனிமேலாவது வரும் பெண் சந்ததியினர் என்னைப்போல் முட்டாள்த்தனமாக இல்லாமல் கணவனே கண்கண்ட தெய்வம் என்றில்லாமல்.சகதோழனாக மட்டும் நினைத்து வாழ்க்கையை வாழப்பழகிக்கொள்ளுங்கள். இதை சொல்வதற்காகத்தான் நான் இவ்வளவு தூரம் வந்தேன்.இப்போதும் என் கணவன், எங்கே போய்விட்டாளோ என்று தேடிக்கொண்டு இருப்பார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு இன்னும் எத்தனை தீக்குழி இறங்கச்சொல்லப்போகிறாரோ தெரியல…எனு கண்ணீர் முட்டப் பேசினார்.
எங்கள் தொலைக்காட்சி யூனிட்டே கண்ணீர் மல்க நின்று… நிகழ்ச்சி முடித்து சீதாப்பாட்டியை வழி அனுப்பி வைத்தோம்.

இராமனின் மனைவி சீதையை கற்பனை பாத்திரமாக வைத்து இந்நிகழ்ச்சி இருந்தாலும்,மற்ற சர்ச்சைக்குள் போகாமல்..ஒரு கணவனாக இராமன் சரியானவர் இல்லை என்பதை சீதாவின் பார்வையில் இருந்து நோக்கப்பட்டது..இது தான் உண்மை நிலை கூட……

(இது கற்பனை ஒளிபரப்பு தான் என்றாலும் எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு)