Monday 1 July 2013

குழந்தையின் உயிரில் கூட காசு பார்க்கும் மருத்துவர்கள்.....!


நீலா விற்கு வயது அப்போது மூன்று வயதிருக்கும்.எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள்.அவளது கேள்விக்கணைகளுக்கு யாரும் பதில் கொடுக்கமுடியாது.அந்த அளவிற்கு அறிவானவள்.

அவளது அம்மா,அப்பா தங்கள் மகள் பேசுதைக் கண்டு பெருமிதம் பட்டுக்கொள்வார்கள்.

அப்படியிருந்த நீலா இரண்டு நாட்களாக வயிற்றுவலி என்று புலம்ப ஆரம்பித்தாள்.

நீலாவின் அம்மா பக்கத்தில் இருந்த மருத்துவரிடம் நீலாவை அழைத்துச்சென்றாள்.

மருத்துவர் சில மாத்திரைகளை எழுதிக்கொடுத்துவிட்டு,சரியாகவில்லையெனில் இரண்டுநாள் கழித்து வாருங்கள் சில டெஸ்டுகள் எடுக்கனும் என்று சொல்லி அனுப்பினார்.

அடுத்த இரண்டுநாட்களாக மாத்திரை சாப்பிட்டும் சரி ஆகாததால்,அதே மருத்துவரிடம் சென்று காண்பித்தபோது,நீலாவிற்கு வயிற்றில் ஏதோ கோளாறு என்று கூறிவிட்டு  ப்ளட் டெஸ்ட்,யூரின் டெஸ்ட், எல்லாம் எடுக்கச்சொன்னார்கள்.

முதல்முறையாக கையில் குத்தி ப்ளட் எடுக்கும் போது நீலாவின் அம்மா அழ ஆரம்பித்தாள்.ஆனால் நீலாவோ ”அம்மா,பயப்படாதே ஒன்னும் இல்ல சின்னதா இரத்தம் எடுக்குறாங்க இதுக்குப்போயா அழற” என்றாள்.

ரிசல்ட் வந்தது.இந்த டெஸ்டில் ஒன்னும் தெரியல இன்னும் சில டெஸ்டுகள் எடுக்கனும் என்று சொன்னதும்,வேற டாக்டரிடம் காண்பிக்கலாம் என முடிவெடுத்து நீலாவை இரண்டு குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்தார்கள் அவளது அம்மாவும்,அப்பாவும்.

ஆனால் அங்கும் அவளுக்கு ஸ்கேன்,பேரியம்மீல்ஸ் டெஸ்ட் என்று ஏகப்பட்ட டெஸ்டுகளை எடுத்து குழந்தையை பாடாய்படுத்தினார்கள்.ஆனால் நீலா எதுக்கும் சளைக்கவில்லை.எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்தாள்.

கடைசியாக எல்லா டெஸ்டும் நெகட்டிவ் என்றே வந்தது.

ஆனால் வயிற்றுவலி மட்டும் குறையவேயில்லை.

பிரபல மருத்துவமனையில்  அட்மிட் பண்ணிவிடலாம் என்று சென்றார்கள் நீலாவின் பெற்றோர்.அங்கே பிரபல குழந்தைநல டாக்டர் இருந்தார்.அவர் அட்மிட் எல்லாம் பண்ணவேண்டாம்.(பற்றாக்குறைக்கு)மோஷன் டெஸ்ட் மட்டும் எடுத்துட்டு வாங்க என்றார்.

மோஷன் டெஸ்டும் எடுத்தாச்சு ஆனால்..அதிலும் நெகட்டிவ் என்று தான் வந்தது.

முப்பாதாயிரம் ரூபாய் வரை செலவாகிவிட்டது.ஆனால் நீலாவிற்கு வயிற்றுவலி குறைந்தபாடில்லை.அதோடு மருத்துவர்கள் அதா இருக்கும்,இதா இருக்கும் என்று பயமுறுத்தியதில் மன உளைச்சல் வேறு நீலாவின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும்….,

டாக்டர் நீலாவை அழைத்தார்.”நீ ஸ்கூல் போறதுக்காக வயிற்றவலினு பொய் சொல்றியா பாப்பா” என்று கேட்டார்.

நீலா சொன்னாள்,”எனக்கு வீட்டில் இருப்பதைவிட ஸ்கூல் போறதுதான் பிடிக்கும்” என்றாள்.

டாக்டர் முகம் மாறிவிட்டது.சரி செலுஸில்(செரிமான மருந்து) கொடுத்துப்பாருங்க.சரி ஆகலைனா,அட்மிட் பண்ணிருங்க என்றார்.
முதல்நாள் செலுஸில் மருந்து கொடுத்ததும்.நீலாவின் வயிற்றுவலி காணாமல் போனது.

ஆக,நீலாவிற்கு இருந்தது செரிமானக் கோளாறு,ஆனால் மருத்துவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு மருந்தைக் கொடுத்தும்,டெஸ்ட் எடுக்கச்சொல்லியும் திரும்ப திரும்ப மருத்துவருக்கு பீஸ் கொடுத்து  பார்க்கும்படியும் செய்தார்கள்.

அவர்கள் முதலிலேயே செரிமானப்பிரச்னைக்கு மருந்துகொடுத்துவிட்டு சரியாக வில்லையெனில் அடுத்தகட்டத்திற்கு சென்று இருக்கலாம் மருத்துவர்கள்.

ஆனால் நீலாவின் விசயத்திலோ..நடந்தே வேறு,சாதாரண வயிற்றுவலிக்கு கேன்சர் வரை எல்லா டெஸ்டுகளையும் எடுக்கச்சொல்லி சம்பாதிக்க நினைத்த மருத்துவர்கள் மாதிரி இல்லாமல்…. நம் உறவினர்களைப்போலவும்,ஒவ்வொரு உயிரும் தேவை என்றும் நினைத்து "மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு மருத்துவதின நாள் வாழ்த்துக்கள்"…

No comments:

Post a Comment