பிரித்தியங்கரா தேவி என்ற பெண்சாமி(?) சேலம் மாவட்டம் ஆத்தூரில்
உள்ள,கைலாசநாதர் கோவிலில் உள்ளது.கொஞ்ச வருடங்களாக கைலாசநாதர் சாமியை விட பிருத்தியங்கரதேவி
தேவிக்குதான் அங்கு மதிப்பு அதிகமாகி வருகிறது.
நினைத்தெல்லாம் நடக்கிறதாம்.குடும்பக் கஷ்டம் தீருகிறதாம்.வேண்டியதெல்லாம்
பலிக்கிறதாம்.வீட்டில் அதிக நாள் யாருக்காவது திருமணம் ஆகாமல் இருந்தால் அங்கு சென்று
வேண்டிக்கொண்டு வந்தால் உடனே திருமணம்(புரோக்கர்கள் கவனத்திற்கு) ஆகிவிடுகிறதாம்.
அதனால் தான் அச்சாமிக்கு பேமஸ் அதிகமாகிவிட்டது.மக்கள் எல்லாம்
அங்கே சென்று குவிகிறார்கள். மற்ற சாமியார்கள் எல்லாம் பார்த்தார்கள் இப்படி ஒரு வழி
இருக்கோ சம்பாதிக்க என்று மனதிற்குள் கணக்குப்போட்டார்கள்.
அதனால் தங்கள் ஊரிலும் ஆரம்பித்தால் என்ன என்பது போல் அந்த
அந்த ஊர்களில் பிரித்தியங்கரா சாமி கோவிலைக்கட்டி இன்னல்களை தீர்க்கும் சாமி எனக்கிளப்பி
விட்டு அங்கங்கே வசூலை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பிரித்தி சாமி மக்களின் குறைகளை தீர்க்குதோ இல்லையோ,பல பூசாரிகளின்
வயிற்றை வளர்க்கிறது என்பது மட்டும் உறுதி.
திடிரென்று சோழிங்கநல்லூரில்(பிரான்ச்சஸ்) பிரித்தியங்கராதேவி
கோவிலுக்குச் சென்றேன்.அங்கே சென்று வேண்டி வந்தால் பணக்கஷ்டம் எல்லாம் தீருமாம் என்று
என் தோழி ஒருத்தி கூறியதும்,ஆத்தூரில் இருந்து சிப்ட் ஆகி வந்துடுச்சா பிரித்தி என்று
கேட்டேன்.என்னடி சொல்ற என்றாள்.
இல்ல ஆத்தூரிலும்,அய்யாவாடியிலும் தான் அந்த சாமி பேமஸ் இங்க
எப்படி வந்தது என்றதும் ரொம்பநாளா இருக்குடி,நீயூம் போய்ட்டு வா என்றாள்.சரிடி என்று
மனதில் சிரித்துக்கொண்டேன்.
கோவிலை இப்போ புதுப்பித்து வைத்துள்ளார்களாம்.ஆமாம் வருமானம்
வரும் சாமியை ப்ரஸ்ஸா வச்சு இருந்தா தானே மக்கள் கூட்டம் அலை பாயும் ?
பால பிரித்தியங்கரா,பிராம்பி பிரித்தியங்கரா,ருத்ர பிரித்தியங்கரா,விபரீத பிரித்தியங்கரா,ஸ்லம்பிய பிரித்தியங்கரா,அதர்வண பிரித்தியங்கரா,சிம்ம முக காளி பிரித்தியங்கரா, மகா பிரித்தியங்கரா,
என்ற ஒன்பது வகையான பிரித்தியங்கரா பெட் நேமில் உள்ளது.காணிக்கை என்ற பெயரில் வசூல் நடப்பது தெரிந்தே நம் மக்கள்
அங்கே சென்று கொட்டிக்கொடுக்கிறார்கள்.
.
சரி,எவ்வளவு சொன்னாலும் நம்மக்கள் திருந்தப்போவதும் இல்லை.சொல்லி
பிரயோசனும் இல்லை.இருந்தாலும் சொல்லாமல் விடுவது நமக்கு அழகில்லை என்பதால்,சொல்லிவிடுகிறேன்.
கும்பகோணம் அருகில் உள்ள அய்யவாடியில், பிரித்தியங்கரா தேவி
கோவில்(பிரான்ச்சஸ்) உள்ளது அங்கு தான் முதல்வர் ஜெயலலிதாவும்,சசிகலாவும் இணைந்து தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் விலகவும்,ஆட்சியை கைப்பற்றவும்,தன்
எதிரிகளுக்கு விரைவில் முடிவு கட்டவும் மிளகாய் யாகம் நடத்தினார்கள்.
2000 மாவது ஆண்டில் நடந்த இந்த யாகத்துக்குப்பெயர் ”நகும்பலா
யாகம்” ஆகும்.
இங்கு தான் ஹைதராபாத் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஒரு
புலிக்குட்டியை கடத்தி வந்து நகும்பலா யாகம்
முடிந்ததும் அந்த புலியைகுட்டியை பலி கொடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தாலும்,இன்னும் அந்த புலிக்குட்டி
கிடைக்கவில்லை.மர்மமாகவே இருக்கிறது புலிக்குட்டியின் நிலை.
(நல்ல முதல்வர்,இவரே இப்படி மூடநம்பிக்கை கொண்டிருந்தால்
சாதாரண படிப்பறிவில்லா மக்கள் மூடநம்பிக்கை கொண்டு ஏமாறுவது சகஜம் தானே)
அதுமட்டுமல்ல,அத்தூரில் இருக்கும் பிரித்திக்கு பீகார் மாநில
முதல்வராக வேண்டி மிளகாய் யாகம் நடத்தினாராம் காங்கிரஸ் தலைவராக உள்ள அனில்குமார்.
2001 ஆம் ஆண்டு.அந்த ஆண்டு ராஷ்டிரய ஜனதா தளம் லல்லு பிரசாத் யாதவ்வுடன் போட்டியிட்டு
தோற்றுப்போனார் என்பது வேறு விசயம் (தேர்தலில் பிரித்தி அவருக்கு அருள் கொடுக்கவில்லை..பிரித்திக்கு
டைம் இல்லை என்று நினைக்கிறேன்).
இப்படியே கோவில்களும் மூடநம்பிக்கைகளும் பெருகிக்கொண்டு இருக்கும்
காலங்களில் நாம் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது,சிலர் படித்தும் இன்னும் முட்டாள்களாகத்தான்
இருக்கிறார்கள் என்றே நினைக்கத்தோன்றுகிறது.
ஆயிரம் பிரித்தியங்கரா தேவி ஃபிரான்ச்சுகள் தோன்றினாலும்
கல் சிலையின் விலை தான் கூடுமே தவிர மக்களின் இன்னல்கள் குறையாது என்பது எப்போது புரியப்போகுதோ…..?
ஐ டோண்ட் நோ பிரித்தி……..!
No comments:
Post a Comment