சில ஆண்களும்,சில பெண்களும் நாற்பது வயதை கடக்கும் போது தன்னையுமறியாமல்
அடுத்தவரிடம் தன் உள்ளத்தை பறிகொடுக்கிறார்கள்.
தன் மனையிடமும்,கணவர்களிடமும் சில எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு
அது கிடைக்கவில்லை எனில் அதை ஏக்கமாக மனதில் கொண்டு அந்த விசயங்களை பகிர்ந்து கொள்ள
ஆள் தேடுகிறார்கள்.
அச்சமயத்தில் நட்பு யாரேனும் (அடுத்த பாலினம்)அதாவது ஆணுக்கு
பெண்ணோ,அல்லது பெண்ணுக்கு ஆணோ நட்பாக கிடைக்கும் பட்சத்தில் தன் ஏக்கங்களை அவர்களிடம்
பகிர்ந்து கொள்ள முற்படுகிறார்கள்.
பகிர்தல் என்பது நாளடைவில் அந்த பெண்களின்,அல்லது ஆண்களின்
மனதை கொள்ளை கொள்ளும் அளவில் ஆகிவிடுகிறது.அதனால் சில நாட்களில் ஒருவருக்கொருவர் மீது
காதல் வயப்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.
அப்பொழுது தனக்கு என்று ஒரு குடும்பம் இருப்பதைக்கூட மறந்து.அந்த
ஆணிடம் தன் மனதில் உள்ளதையும்,தன் கணவரின் செயல்பாடுகள் குறித்தும் பேசத்தொடங்குகிறார்கள்.
இதே மாதிரி தான் ஆண்களும் தன்னுடன் வேலைப்பார்க்கும் பெண்,அல்லது
தோழமையாக கிடைக்கும் பெண்களிடம் தனக்கு ஆறுதலாக யார் பேசுகிறார்களோ,அவர்களிடம் தன்
மனதை பறிகொடுத்துவிடுகிறார்கள்.
தன் மனைவின் செயல்பாடுகள் தன் பிள்ளைகளின் வளர்ச்சிகள் குறித்து
பேசத்தொடங்குகிறார்கள்.நாளடைவில் அப்பேச்சு அப்பெண்ணின் மீது காதலாக மாறிவிடுகிறது.
இப்படித்தான் எனக்கு தெரிந்த நாற்பது வயதைகடந்த ஒரு பெண்மணி,தன்
கணவர் தன்னை ஒரு வேலைக்காரியாகத்தான் நடத்துகிறார்.எனக்குறிய ஆசைகள்,அதாவது மனைவியை
வெளியில் அழைத்துச்செல்வது,கோவிலுக்கு கூட்டிச்செல்வது,தன்னிடம் பிஸினஸ் குறித்து கலந்து
ஆலோசிப்பது எதுவும் கிடையாது நேரம் தவறாமல் சாப்பாடு ரெடி பண்ணிக்கொடுத்தா போதும் அவருக்கு.
கணவர் நினைத்த நேரத்தில் அவருக்கு விருப்பமான போது தான் படுக்கையை
பகிர்ந்து கொள்ள வேண்டும், சில நேரங்களில் தனக்கு விருப்பம் இருந்து அருகில் போனால்
இன்னைக்கு பயங்கரமான வேலை கொஞ்சம் நிம்மதியா தூங்கவிடு என்று சிடு சிடுத்து விட்டு
தூங்கிவிடுவார்.
எனக்கும் தனிப்பட்ட ஆசைகள் இருக்குமில்லையா அதை புரிஞ்சிக்க
மாட்டேன் என்கிறார் என்று அடிக்கடி என்னிடம் புலம்பிக்கொண்டு இருப்பார்.
சில மாதங்களுக்கு முன் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்ற போது,என்னிடம்
பேசிக்கொண்டே செல்போனில் குறுந்தகவல் அனுப்பிக்கொண்டே இருந்தார்.சரி ஏதாவது முக்கியமான
விசயமாக இருக்கும் என்று நானும் எதும் கண்டு கொள்ளவில்லை.
நான் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் எப்படியும் இருபது குறுந்தகவல்கள்
பறிமாறிக்கொண்டிருப்பார்.நான் கொஞ்சம் சந்தேகமாக பார்க்க ஆரம்பித்ததும், என்னிடம் வந்து
அமர்ந்த அப்பெண்மணி,எனது நண்பர் தான் குறுந்தகவல் அனுப்புகிறார்.மிகவும் நல்லவர் எனக்கு
எல்லா வகையிலும் ஆறுதலாக இருக்கிறார் என்றார்.
எல்லா வகையிலும் என்றால்…….?என்றேன் நான்.
(நான் அப்பெண்மணியின் கணவரை அண்ணன் என்று தான் கூப்பிடுவேன்.)
உன் அண்ணனிடம் கிடைக்காத என் விருப்பங்களை இவரிடம் தான் பகிர்ந்து
கொள்வேன்.ஆறுதலாக பேசுவார்.ஆறுமாத காலத்தில் நன்றாகப்பழகி விட்டோம்.இப்பொழுது அரை மணி
நேரம் என்னுடைய குறுந்தகவல் வரவில்லை என்றால் என்ன ஆச்சு,? உடம்பு ஏதும் முடியவில்லையா..?என்று
போன் பண்ணி விசாரிப்பார்.அந்த அளவிற்கு என் மேல் அன்பு வைத்து இருக்கிறார்.என்றார்
அப்பெண்மணி.
நான் அதிர்ச்சியுடன் ”பேச்சு போன் அளவில் தானே இருக்கிறது”?
என்றேன்….
40 களில் தோன்றும் காதல்...!
ReplyDeleteஅருமையாக எழுதி உள்ளிர்கள்
என் மனைவியிடம் பகிர்துகொள்ள ஆசை பட்டு படிக்க சொன்னேன் என்ன பாதியை காணோம் என்றாள்
அவ்வளவு தான் என்றேன்
ம்ம்ம்ம்!!!!!! என்றாள்
அனைத்து கணவர்களும் மனைவிகளும் இதனை கண்டிப்பாக படித்து ஒருவரை ஒருவர் புரிந்து நடந்தால் நாடு நலம் பெறும்.
ReplyDeleteவாழ்க தமிழகம்!
www.srisairamacademy.blogspot.in
www.ititrichy.blogspot.in
காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு பகிர்வு...! கொடுமை-காதலுக்கு...!
ReplyDeleteசமூக சீரழிவிற்கு ஒரு உதாரணம்...! நன்றி...