Friday 12 July 2013

தன் கணவரிடம் கிடைக்காத எதிர்பார்ப்பு..தப்பான வழிக்குச் செல்லும் மனைவி..!

நான் அதிர்ச்சியுடன் ”பேச்சு போன் அளவில் தானே இருக்கிறது”? என்றேன்….

ஆமாம்..ஆனால் அடிக்கடி நாங்கள் சந்தித்துக்கொள்வோம்,மனம் விட்டுப்பேசுவோம்.மார்க்கெட் செல்லும் போது,பீச்சுக்கு வாக்கிங் போகும் போது அவரையும் வரச்சொல்லி மனவிட்டு பேசுவேன்.அவரும் தன் மனைவியிடம் கிடைக்காத இவரின் எதிர்ப்பார்ப்புகளை என்னிடம் பகிர்ந்து கொள்வார்.வாழ்க்கையில் இப்போது தான் எனக்கு மறு இன்பம் கிடைத்து இருக்கிறது என்றார் அந்தப்பெண்மணி.

இந்த விசயத்தை உங்கள் கணவருக்கு தெரியபடுத்தினீர்களா? தெரியவந்தால் உங்கள் கணவருக்கு இப்படி ஒரு உறவு இருப்பது அவருக்கு சந்தோஷம் தருமா..?என்றேன்.

இல்லை இதுவரை தெரியாது செல்போனில் மெஸேஸ் வருவதைப் பார்த்து,யாரு எப்பப்பார்த்தாலும் உனக்கு எஸ் எம் எஸ் அனுப்பிட்டே இருக்காங்க?என்று கேட்பார்.

நான் என் தோழி தான் அனுப்புறா,எனக்கும் ரிலாக்ஸ் வேணும்ல அதான் நானும் அனுப்புறேன் என்பேன்.

சரி என்று விட்டுவிடுவார்.

உங்களுக்கு மன உளைச்சல் தரலையா..?நம் கணவருக்கு துரோகம் பண்ணுகிறோம் என்பது போல் நீங்க நினைக்கவில்லையா..?என்றேன்.
இல்லை அப்படி ஒரு பீலிங் எனக்கு வரவே இல்லை.எனக்கு என் கணவன் இந்த மாதிரி நடந்துகொள்ளவில்லை.அந்த நண்பர் நடந்துகொள்கிறார்.அதனால் அவர் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது.இதை எப்படி தவறு என்று சொல்லமுடியும். என்றார் அப்பெண்மணி.
நல்லது,இப்படி உங்கள் கணவன் ஒரு பெண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினால் நீங்க ஒப்புக்கொள்வீர்களா என்றேன்.

நான் அவரை மாதிரி இல்லை.அவருக்குத்தேவையான அனைத்து செய்கிறேன்.என்ன குறை வைத்தேன் அவருக்கு,அவர் அடுத்த பெண்ணிடம் தேடுவதற்கு என்றார்.

ஒப்புக்கொள்வீர்களா…?மாட்டீர்களா..?என்றேன்.

இல்லை ஒப்புக்கொள்ளமாட்டேன்,ஏன் என்றால் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்றார்.

அப்போ உங்களுக்கு ஒரு நியாயம் உங்கள் கணவருக்கு ஒரு நியாயமா..எனக்குத்தெரிந்து உங்களிடம் ஏதாவது ஒன்று உங்கள் கணவருக்கு பிடிக்காமல் இருக்கும் கேட்டுபாருங்கள்.அவர் அதை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு இருப்பார்.அவரும் இப்படி இன்னொரு பெண்ணிடம் தன் தேவைகளை பூர்த்தி செய்ய நினைத்தால் உங்களது நிலைமை நினைத்துப்பாருங்கள்.என்றேன்.

சிந்தித்தார்”நான் செய்யுறது தப்பா”? என்றார்.

நீங்கள் செய்தது தவறில்லை.ஆனால் நம் குட்ம்ப விசயங்களை இன்னொரு நபரிடம் பகிர்ந்துகொள்ள நினைப்பது தேவையில்லாதது.அவர் உங்களை நல்ல முறையில் நினைத்து இருந்தால் பரவாயில்லை.உங்களை எப்படியாவது மயக்கி அனுபவிக்கலாம் என்று நினைத்து இருந்தால் உங்கள் நிலை,மற்றும் உங்கள் குடும்ப நிலை.உங்கள் குழந்தைகளின் நிலை.என்ன நினைப்பார்கள் என்றேன்.

சற்றே யோசிக்க ஆரம்பித்தார்.

கிராம சூழலில் வாழ்ந்ததால் அவரால் தப்பு எது சரி என்று கூட புரிந்து கொள்ளமுடியாத நிலை.வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து இருக்கிறார்.தன் கணவர் தன் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை என்ற ஆதங்கத்தில் கோபத்தில் அவர் அந்நியர் ஒருவரிடம் அந்த ரிலாக்‌ஷேசன் கிடைத்தவுடன் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்.பரவாயில்லை அவர் தவறான வழியில் இன்னும் செல்லவில்லை.இல்லையெனில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரினுடைய நிலைமை கூட ஏற்பட்டு இருக்கலாம்.

இப்படித்தான் பலரும் தன் வீட்டில் நடக்கும் சூழல்களை அடுத்தவரிடம் சொல்வது.தனக்கு நட்பு வேண்டும் என்பதற்காக வேணும் என்றே ஆண்கள் பெண்களிடமே,பெண்கள் ஆண்களிடமோ ஒரு நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு,தங்களது ஆதங்கங்கள்,அல்லது தன் கணவன் மனைவிடம் கிடைக்காத தன் விருப்பங்களை பகிர்ந்துகொள்ள முற்படுகிறார்கள்.அதே தப்பை தங்கள் வாழ்க்கைத்துணையும் செய்ய ஆரம்பித்தால் அதற்கு விருப்பப்படுவது இல்லை.தங்கள் பிள்ளைகளுக்கு தெரிய ஆரம்பிக்கும் போது அவர்களது மனநிலை எப்படி இருக்கும்.?


நாம் மேற்போக்காக வாழ்ந்துவிட முடியாது.நம் பிள்ளைகள் நம்மை முன்னோடியாக எடுத்துக்கொண்டு வாழும் அளவிற்கு நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்..

3 comments:

  1. இன்றைய நவீனம் இதைதான் திட்டமிட்டு திணிக்கிறது ...இதிலிருந்து மீண்டுவருவதர்க்கு பெரும்போராட்ட குணம் அவசியம் ....!

    ReplyDelete
  2. இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்னால் இது சமூகத்தின் எல்லா நிலையில் உள்ள மக்களிடமும் இந்த கலாச்சாரம் பரவலாம் 

    ReplyDelete
  3. புது புது அர்த்தங்கள் பல தடவை பார்த்தாகி விட்டது...! நன்றி...

    ReplyDelete