Wednesday, 8 May 2013

சொல்கிறவன் சாவான்....கலைஞர் வாழ்வார்....!


திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் திமுகவின்  தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி பற்றி எல்லோருக்கும் தெரியும்..அவர் சிறந்த பண்முக ஆற்றலாளர் என்பதும் எல்லோரும் அறிந்ததே..

கலைஞர் அவர்கள் தன் 75 ஆண்டுகால பொதுவாழ்வில் கடந்து வந்த பாதையில் சரிபாதி வயது கூட அல்லாதவர்கள்தான் இன்று அவரைப்பற்றி புறம் பேசித் தங்கள் மனதின் தாகம் தீர்த்துக்கொள்கிறார்கள்.
எங்களைப்போல பலருக்குத்தான் அவர் இன்னும் என்னென்ன சாதனைகள் செய்து கொண்டு இருக்கிறார்.எந்ததெந்த வியாக்யாணங்களை எல்லாம் முறியடிக்கிறார், நாட்டுநடப்புகளை நொடிக்கொருதரம் உற்று நோக்கி அதனை எழுத்துப்பணி மூலம் எப்படி வெளிப்படுத்துகிறார், அதற்காக எவ்வளவு படிக்கிறார் என்பது புரியும்.

இதெல்லாம் புரியாத சில பேர் அவரை இந்த வயதில் ஏன் இந்த தேவையில்லாத வேலை,வயதான காலத்தில் வீட்டில் முடங்கிகிடக்காமல்,அறிக்கைவிட்டுட்டு அலையுறாரு என்பது போன்று கேலி நடவடிக்கைகளையும்  மனவக்கிரத்தையும் அவ்வப்போது எழுதியும்  பேசியும் அவர்களுக்குள்ளாக நகைத்துக்கொள்கிறார்கள். அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் மேலே போய் அவரை இந்த வயதிலும் இன்னொருவருடன் தொடர்பு படுத்திப் பேசி தங்கள் தரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி அதை பத்திரிக்கைவாயிலாக வியாபாரித்து, அதில் சோறு தின்றுக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கெல்லாம் சவுக்கடிபோல பதில் தரும் வகையில், கலைஞரின் வாரிசுகளும் ஒரு நிலையில் இல்லை. தளபதி மட்டும் அரசியலில் தீவிரமாக கால் எடுத்து வைத்திருந்தாலும், முழுமையாக அதிகாரம் செலுத்தினால் எங்கே தலைவர் கோபிச்சுக்குவாரோ என்ற எண்ணத்தில் இன்னும் அதிகார கட்டளை ஏதும் இடாமல் தலைவரின் பின்னால் நிற்கும் பிள்ளையாக இருக்கவே விரும்புகிறார்.

மற்ற பிள்ளைகள் தற்போது வாயடக்கம் மட்டுமே கொண்டு எந்தவிதப்பிரச்னைகளிலும் தலையிடாமல் அடங்கி கொண்டு இருக்கிறார்கள். அதுவே நல்லதும்கூட.
பேரன்,பேத்திகள் தங்களுக்குறிய வயதினால்,தாங்கள் புகழ் அடைந்தவர்களின் பிள்ளைகள் என்பதால் அவர்கள் நட்புக்கு ஈடு இணையாக தங்கள் தரத்தையும் மேம்படுத்திக்காட்டிக்கொண்டு,ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து அரசியலுக்கு அப்பாற்பபட்டு அவர்கள் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஆக, தளபதியைத் தவிர வேறு யாரும் தி.மு.கவுக்கு பலமோ பலனோ சேர்க்கும் நிலையில் இல்லை.
இதன் மூலமாக கலைஞர், குடும்ப அரசியல் நடத்துகிறார் என்று கேவலமாக பேசியவர்கள் வாயெல்லாம் அடைத்துக்காட்டி ஆயிற்று.

இருந்தும், இன்னும் குடும்ப அரசியல் தன் குடும்பத்திற்காக கொள்ளை அடித்து சேர்த்து வைக்கிறார் என்று அரசியலில் எதையும் செய்யமுடியாத ஈனமக்கள் கலைஞரை இன்னும் கல்லெறிந்து கொண்டு தான் தங்கள் மீது தாங்களே எச்சிலை துப்பிப் படுத்துக்கொள்கிறார்கள்.
ஈழத்தில் 400000 ஆயிரம் பேரைக்கொன்றார் என்ற அவதூறை இன்னும் தூற்றிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் தன் தாத்தாக்களை தரக்குறைவாக பேசக்கூடிய உத்தமர்கள்..ஆவார்கள் என்றே கருதுகிறேன்.

இன்னும் இயக்கக்கொள்கையோடு,இன்னும் தன் இன மக்களுக்காக,இன்னும் பத்திரிக்கை சுதந்திரத்திற்காக,இன்னும் பல தரப்பட்ட மக்களின் பயன்களுக்காக சிந்தித்துக்கொண்டே இருக்கிறார் கலைஞர்,ஆனால் இந்த முதுமை நேரத்தில் அவரைத்திரும்பிப்பார்க்க குடும்பத்தில் ஆள் இல்லை என்பது தான் தற்போதைய நிலைமை.
இருவீட்டு அம்மாக்களுக்கும் உடல்நிலை சரியில்லை.மருமகள்கள் யாரும் உடன் இல்லை. பேரன்-பேத்திகளுக்கு தாத்தாவின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு எதிலும் ஈடுபாடு இல்லை.கட்சிப்பணியே கழகப்பணியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் தன் உடல்நிலை மேற்பார்வை பணிகளுக்கிடையே மக்கள் பணியையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை.

அவரை வீட்டில் ரெஸ்ட் எடு,அல்லது தயவு செய்து செத்துப்போ என்று கூச்சலிடும் கூலிக்காரர்கள்..தான் தன் வாழ்க்கையில் ரெஸ்ட் எடுக்க வேண்டியவர்கள்.அவர்களையும் எதுவும் கூறாமல்,அதிமுக ஆட்சியின் பொய் பித்தாலாட்டங்களை அம்பலப்படுத்திக்கொண்டும். ஜெயலலிதாவின் புளுகுகளுக்கு பதில் அளித்துக்கொண்டும் ஜெயலலிதாவின் பொய் முகத்தை ஆதாரத்தோடு கிழித்துக் காண்பித்துக்கொண்டு இந்த வயோதிகத்திலும் தன் மூளையை கான்கீரிட்- கிரில் போல் உறுதியாக ஆக்கிக்கொண்டு வளரும் 89 வயது இளைஞருக்கு யாரும் துணையும் தேவையில்லைதான்.

தன் வழியையும்,பார்த்துக்கொண்டு,தன் வழி நடக்கும்  தொண்டர்களின் மூச்சாக விளங்கும் கழகத்தின் பணியையும் பார்த்துக்கொண்டு இன்னும் பல ஆண்டுகள் நமக்காக வாழ்வார் கலைஞர்.
அந்த தன்னம்பிக்கையோடு அவரும் இருக்க நாங்களும் பின்பற்றி இருக்கிறோம். அவரின் மேல் அச்சம் கொண்டவர்கள் மட்டும் இன்னும் பிதற்றிக்கொண்டு வாழ்வதைக் கைவிட்டு,அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்…

Sunday, 28 April 2013

அந்தரங்கம்....


முக்கியமாக கணவனுக்கும்,மனைவிக்கும் என்ன மாதிரி பிரச்னைகள் தலை தூக்குகின்றன என பார்த்தால்..ஒன்று அவர்களது பெற்றோர்,உற்றோர் பிரச்னைகளாக இருக்கும்,

இன்னொன்று பணப்பிரச்னையாக இருக்கும்.இதெல்லாம் தவிர்த்து மிகப்பெரிய பிரச்னையாகத் தோன்றுவது கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் காமத்துக்கான பிரச்னைதான்.

காமம் என்று வரும் போது பெண்ணோ அல்லது ஆணோ ஒருவருக்கொருவர் தங்கள் உடலளவில் ஒன்று சேர விருப்பம் இல்லாமல் இருக்கலாம்..அல்லது இருந்தும் அதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கலாம்.

அல்லது கள்ளக்காதல் பிரச்னையாக இருக்கலாம்.இன்னொன்று குழந்தைகள் வளர்ந்துவிட்டனர்.இனி நமக்கு இது தேவைதானா என்பது போன்ற பிரச்னைகளாக இருக்கலாம்.

இதில் எல்லாம் முக்கியமாக ஆண்களை விட பெண்களே தங்களது ஆசைகளை கட்டிப்போட்டுக்கொண்டு,அந்த எதிர்பார்ப்பை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்,அந்தக் கோபத்தை எப்படிக்காட்டுவது என்று புரியாமல் தங்கள் கணவர்களிடமோ.,அல்லது குழந்தைகளிடமோ காட்டத்தொடங்கி விடுகின்றனர்.

இதனால் வீட்டில் பிரச்னைகள் தான் அதிகமாகுமே தவிர,தன்னுடைய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது.
தன்னுடைய ஏக்கங்களை வெளிப்படுத்தினால் எங்கே தான் தவறானவள்,அல்லது திமிர் எடுத்தவள் என்று தன் கணவர் நினைத்துவிடுவார் என்ற பயம் காரணமாக வெளிப்படுத்த தயங்குவாள்.

இல்லையெனில் கூட்டுக் குடும்பமாக இருந்தால் எல்லா வேலையும் முடித்து படுக்கச்செல்வதற்குள் அசதியாக உணர்ந்து,இந்த நேரத்தில் இது தேவையா என்பது போல் தோன்றி அயர்ந்து தூங்கிவிடுவாள்.

உடலில் உள்ள இச்சைகளை தீர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை டாக்டர்களே வலியுறுத்துகின்றனர்.தங்களுக்கு கிடைக்கும் சிறிது நேர சந்தோஷம் உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுப்பதாக உணர்த்துகிறார்கள்.

ஆண்கள் சிலர் தங்களுக்கு ஏற்படும் தாபத்தை மனைவியிடம் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களிடமோ,அல்லது சுயமாகவோ சந்தோஷம் அடைந்துவிடுவார்கள்.

ஆனால் பெண்களுக்கு அதற்கான வாய்ப்புக் குறைவு.எனவே தங்களது ஏக்கங்களை ஏக்கப்படுத்திக்கொள்ளாமல்.தன் கணவரிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்.இது மனநிம்மதியை கொடுக்கும்.

அதற்கு மாறாக அடுத்தவரிடம் தவறாக உறவு கொள்வதன் மூலம் தன் பிள்ளைகளுக்கும் இனி வரும் சந்ததியினருக்கு ஒரு வரலாற்று கேள்விக்குறியாக ஆக்கப்படுவீர்கள்.

கணவனால் சுகம் கொடுக்கமுடியவில்லை உடல் ரீதியாக பிரச்னையெனில்,டாக்டரிடம் காண்பித்து அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.இல்லை டைவர்ஸ் செய்துகொண்டு மறு திருமணம் பண்ணிக்கொள்ளலாம்.

இதைச் சொல்வதால் எல்லோருக்கும் தவறாகத்தோன்றலாம்.ஆனால் உடல் தேவை முக்கியமில்லையெனினும்,அது ஒரு ஏக்கமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கமுடியாது.ஒரு வயது வரைதான் இந்த இன்பங்கள் கிடைக்கும்.50 வயதுக்குமேல் இந்த இன்பங்கள் தேவையற்றதாகி விடும்.

வாழ்வில் எல்லாமே காலப்போக்கில் சரியாக்கிவிட வேண்டுமே தவிர அதை தவறானதாக ஆக்கிவிடக்கூடாது.

இது அக்காலத்திலிருந்து சித்தர்களும் அறிஞர்களும் சொல்லக்கூடியதே,திருக்குறளில் காமத்துப்பால் எனும் அதிகாரமும் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன..

போகும் போக்கில் சந்தோஷத்தை அனுபவிப்பதை விட தன் இணையரிடம் சந்தோஷமான காமத்தை அனுபவிக்க வேண்டும்.அதற்குத் தக்கவாறு நம்மை ஆக்கிக்கொள்ளவேண்டும்.

இதற்கென்றே அலையாமல்….ஆனால் இதற்காக அமைத்துக்கொள்ளுதல் ஒரு குடும்பத்தை நல்லமுறையில் வழிநடத்த ஏதுவாக இருக்கும்.
எது ஒன்றும் காமமாகவே மட்டும் நோக்காமல் காதலுடன் காமமாகப் பார்க்க வேண்டும் ஒவ்வொரு தம்பதியினரும்…..

தொடரும் அந்தரங்கம்..

Friday, 26 April 2013

கள்ளழகரே ஆத்துல நேத்து நல்லா குளிச்சேளா....?




பாவம் வருடா வருடம் தான் இப்படி ஒரு நல்ல வாய்ப்பு....நல்லா பயன்படுத்தினேளா...?

நீர் பாவம்…..உம்மை ரொம்ப வெயிலில் அழைச்சுட்டுப் போய்…அதுவும் வேகாத வெயில்ல…ஆட்டிட்டே போய் குளிப்பாட்டுறாங்க…

உம்ம தங்கச்சி கல்யாணத்துக்கு சீர் கொண்டு வர்றதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சுடுச்சுனு இப்படி கோவிச்சுட்டு போய் ஆத்துல இறங்கலாமா…?ஏன் இப்படி நடந்துக்குறேள்..உங்களுக்கு என்று எங்கிருந்து தான் ஓய் கோபம் பொத்துக்கிட்டு வந்துடுது..அதுவும் வருடந்தோறும்..நேக்கு புரியள..

சீர் கொண்டு வந்து வாங்கலைனா நல்லதாக்கும்னு நினைச்சுட்டு காசும் மிச்சமினுட்டு சாப்பிட்டு கிளம்பி வந்துட வேண்டியது தானே…..உம்ம ஆத்துக்கு…ஏன் நேரா ஆற்றுக்குப் போய் விழுந்தேள்.நல்ல வேளை ஆற்றுல அப்போ தண்ணி இல்ல…இருந்து இருந்தா உம்ம நெலமைய நினைச்சுப்பாரும்.. ஓய்…

அது சரி அவர் யாரும் ஓய் வீரராகவப்பெருமாள் வைகை ஆற்றில் மஞ்சள் நிற தங்கக்குதிரையில் நீங்க இறங்கும்போது. இவாள் தான் உமக்கு முன்னதாக, வெள்ளிக் குதிரையில் வந்து ஆற்றில் இறங்குவாராமே,

வையாழி நடைபயில்வாராமே.(முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு செல்வதையே இப்படி சொல்வர்). "அண்ணா வாரும்' என உம்மை அழைத்தால் தான் ஆற்றிற்குள் இருந்து நீ வருவீராமே.ஆற்றில் நடுமண்டபத்தில் நீர் எழுந்தருளும்போது, உம்மை வீரராகவப்பெருமாள் மூன்று முறை சுற்றி வருவாராமே.

அவருக்கு உம்ம  சார்பாக தீர்த்தம், பரிவட்டம், மாலை என முதல் மரியாதை செய்வாங்களாமே.அதன்பின் வீரராகவப்பெருமாள் ஆற்றில் உள்ள நடு மண்டபத்தில் இருந்து எங்களுக்கெல்லாம் தரிசனம் கொடுப்பாளாமே..,அவர் யார் உஅமக்கு சப்சூட் டா நியமிச்சு இருக்கேளா....?இதெல்லாம் எதுக்கும் ஓய் பண்றேள்.

நீர் பாட்டுக்கும் ஏதாவது பண்ணிட்டுப் போய்டுறேள்...அதையே நம்மாளுங்க வருடவருடம் ,”நீர் கோவிச்சுட்டு போறாதா சொல்லி ஒரு செலவு இழுத்து விடுறாங்க ”அரசாங்கத்துக்கு...

அதோட நம்ம மக்கள் எல்லாம் கூட்டத்துல கிடந்து அள்ளல் படுதும் ஓய்..உமக்கே தெரியாதா...?கூட்டமா இருந்தா ஆம்பிளப்பிள்ளைங்க என்னனென்னா பண்னுவாங்கன்னு அவனவன் பொம்பளைப்பிள்ளையாண்டம் நெருங்கி இடிச்சுட்டு போறதும்,அவா மேலக் கையப்போடுறதும்....இதெல்லாம் நன்னாவா இருக்கு...

உமக்குத்தான் சொல்லமுடியாம ஊமையா கிடக்குற...ஆனா பெத்தவங்களுக்கு கூட புத்தியில்லாம...வயசுப்பொண்ணுங்கள அழைச்சுட்டு நீர் ஆத்துல இறங்குறத பாக்க வந்துடுதுங்கோ...அப்போ தான் திருமணம் கைகூடுமாம்...

நீரே..தங்கச்சி கல்யாணத்தை அவசரமா முடிச்சுட்டாங்கன்னு ஆத்துல போய் விழுந்துட்டேள்...ஆனா இந்த முட்டாள் மக்கள் எல்லாம் இந்த திருவிழாவுல கலந்துட்டா தான் திருமணபாக்கியம் கிட்டும்னு சுத்துங்கோ...என்னத்த ஓய் சொல்றது..ஒன்னும் விளங்கல..எனக்கு.

சரி அப்புறம் எப்போ போய் தங்கச்சிய மீட் பண்ணீங்கோ...தங்கச்சி என்ன சொல்லுச்சு....மச்சான் என்ன சொன்னார்...அந்தக்கதை வரவேயில்லையே....அதையும் சொல்லிடுங்கோ..

புதுசா இந்த ஆண்டு பச்சை கலர்ல ஆத்துல குதிச்சேளாமே....?(சாயம் போச்சா என்ன..?)வருடா வருடம் யார் உங்களுக்கு கலர் சூஸ் பண்றாங்க....?
காஸ்டியூம் டிசைனர் யாருனு சொன்னேள்னா......அவங்க மேலிடத்துக்கு வேண்டியவாளானு விசாரிக்கனும் அதான்....

சரி..சரி உம்ம வேலைய பாரும் நெய்வேத்தியம் பண்ணி வச்சு இருப்பா நன்னா சாப்பிட்டு..அப்புறமா....இரவு பள்ளியறை பாடல் பாடுவா...(நம்ம பூசாரி.).கேட்டு சேமமா தூங்கும் ஓய்.......... நான் வரட்டா...?

Thursday, 25 April 2013

”தற்”கொலை....?


இரவு நேரம் டீக் கடையில் நின்று கொண்டு இருந்த நட்பு வட்டங்கள்.அதில் ஒருவன் தன் வீட்டுக்கு செல்வதற்கே தனக்கு பிடிக்கவில்லை என்று தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.ஏண்டா அப்படியெல்லாம் சொல்ற..?போடா என்று சமாதானப்படுத்தி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் நண்பர்கள்.

மறுநாள் காலையில் அந்த நண்பன் தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிக்கொண்டதாக தகவல் வந்தது..என்ன காரணம்?ஏன் தற்கொலை பண்ணிக்கொண்டான்.என்று யாருக்கும் புரியாமல் விழித்து இருந்தார்கள்.
ஆஸ்பிட்டல் வாசலில்.., அவனது மனைவி மட்டும் அழவும் முடியாமல்,அழாமல் இருக்கவும் முடியாமல் பேந்தப் பேந்த விழித்தபடி உட்கார்ந்து இருந்தாள்.

நண்பர்கள் அவளிடம் ஆறுதல் கூறச் சென்ற போது அழுவது போல் பாசாங்கு செய்தாள்.நண்பர்களுக்கு சந்தேகம்.அன்யோன்யமாக வாழ்ந்த தம்பதிகள் தானே இவர்கள்.ஏன் கணவன் இறந்த துக்கம் இவளை அதிகமாக பாதிக்கவில்லை.ஒரு வேளை அதிர்ச்சியில் இப்படி இருக்கிறாளோ என்று நினைந்து பின் அதை மறந்து.நண்பனின், இறுதிச் சடங்கு முடியும் வரை கூட இருந்து விட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.

மறுநாள் மாலை வந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வாங்குவதற்காக இறந்த நண்பனின் நண்பன் போலீஸ் நிலையம் சென்றான். பேயரைந்தது போல் திரும்ப வந்து தங்கள் நட்பு குழுவிடனரிடம் தெரிவித்த செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

அடுத்த நாள் காலை போலீஸ் சந்தேகத்தின் பேரில் இறந்தவனின் மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டது.

எல்லோருக்கும் அதிர்ச்சி எப்படி இப்படி அன்யோன்யமாக வாழ்ந்த தம்பதிகளில் கணவரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டிய காரணம் எது..? மனைவிக்கு ஏற்பட்ட வெறுப்பு தான் என்ன..?என்று துருவித்துருவி ஆராயப்பட்டது.

மறுநாள் காலை செய்தித்தாளில் ”கணவனைக்கொன்ற மனைவி கைது”என்று இரண்டாவது பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது.
காரணத்தை தெரிந்துகொள்ள ஆவலுடன் பேப்பரை படித்தனர் நண்பர்கள்.கைதான மனைவியின் பேட்டியாக வந்ததை படித்த போது அவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஷாக்..

இதற்காகவா என் நண்பனைக்கொன்றாய் என்று கோபத்தோடு காவல் நிலையம் நோக்கிச் சென்றனர் நண்பர்கள்.
ஆனால் அங்கே அவள் இல்லை.ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தாள்.நல்லவேளையாக அவள் அங்கே இருந்து இருந்தால் நண்பர்கள் பட்டாளம் இணைந்து அவளை கொன்று இருந்தாலும் இருக்கும்..

இனி அவளுக்கான கடுமையான தண்டனை கிடைக்க போராட வேண்டும் என்ற நம்பிக்கையோடும் ,வெறியோடும் நண்பர்கள் அனைவரும் தன் இறந்த நண்பனின் நினைவுகளை சுமந்தபடி கண்ணீர் மல்க அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.

இந்தக் கதையில் அவள் எதற்காக தன் கணவனை கொலை செய்தாள்..?கணவன் ஏன் தனக்கு வீட்டிற்குச் செல்வதற்கே பிடிக்கவில்லை என்று தான் கொலை ஆகும் முன் தன் நண்பர்களிடம் சொல்கிறான்..?என்பதை நீங்களே கண்டுபிடித்து எழுதுங்கள்..

Wednesday, 24 April 2013

பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளுக்கு


நம் நாட்டின் கலாச்சாரத்தை சீர்கேடாக நினைக்கும் சிலர் தாங்கள் யாருக்கும், எதற்கும் அடங்கமறுக்கிறோம் என்ற உறுதி மொழியை ஏற்று அதன்படி பெண்ணியவாதிகளாக ஆகிறார்கள்.
நல்ல விசயம் ஆணுக்கு இணையாக நாங்களும் வாழ்வோம் என்ற போக்கை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அறிவான செயல்தான்.அதற்காக முற்றிலும் ஆண்களைப் புறக்கணித்து புறம் தள்ளிவிட்டு தான் தோன்றித்தனமாக பேசுவது,நடப்பது எந்த வகையில் நியாயம்..?
ஒரு பெண்ணுக்கு வேண்டிய அனைத்தும் அவளால் செய்து கொள்ள முடியும்.அதே மாதிரி ஆண்களுக்கு வேண்டிய அனைத்தும் அவர்களால் செய்து கொள்ளமுடியும்.அப்படி இருக்க….ஏன் இரு(ஆண்,பெண்) இனத்தையும் இணைத்து திருமணம் நடத்திக்கொள்கிறார்கள்?அங்கே என்ன முக்கிய அம்சமாக கருதப்படுகிறது…?
பெண்ணியவாதியாக இருப்பவர்..காதல் வயப்படாமல் இருக்கிறார்களா..?அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்களா..?இல்லை உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா..?எதுவோ என்ன காரணமோ அவர்களை மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டு காண்பிக்கிறது.
எனக்குத்தெரிந்த ஒரு கவிதாயினி பெண்.,ஆண்கள் மட்டும் இரு பெண்களோடு வாழ்கிறார்கள்.நாம் ஏன் அப்படி செய்யக்கூடாது என்று இரு ஆண்களை மணக்காமல் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தார்.நாளடைவில் சக்களத்தி சண்டைபோல் சக்களத்தன் சண்டை வந்து மூவரும் பிரிந்துவிட்டனர்.ஏன் இந்த அவசர முடிவு.
அதேமாதிரி ஒரு பெண் போராளி ட்தான் காதலித்த நபருக்காக மாசமாக இருந்து பின் கருக்கலைப்பு நடத்தி,இன்னொரு ஆணுடன் தொடர்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.இவர்களுக்கு என்ன தான் வேண்டும்.பெண்ணியம் என்பது இதைத்தான் கற்றுக்கொடுத்தா..?
அதற்காக ஆண் வர்க்கத்திற்கு ஆதரவாக நினைக்க வேண்டாம்.ஒழுக்கம் என்பது இருபேருக்கும் உரித்தானது தான்.ஆண்களை தண்டிக்கிறோம்,அல்லது பழி வாங்குகிறோம் என்ற பெயரில் பெண்கள் தங்களை இழிவு படுத்திக்கொள்ள வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.
பெண்ணியவாதியாக கடைசி வரை இருந்து காலம் சாதித்தவர்கள் எத்தனை பேர் வெற்றியாளராக வளம் வருகிறார்கள்.கூறுங்கள்.ஆண்களின் ஆணாதிக்கத்தை எதிர்க்க வேண்டும்.நாம் சுதந்திரமாக வாழ வேண்டும்.என்பது மட்டுமே (ஒருசிலரை தவிர) மற்றவர்களுக்கு லட்சியமாகத் தெரியவில்லை.
அதிலும் சில பெண்ணியவாதிகள் பல பேரோடு தொடர்பு படுத்தி,தங்களது அந்தரங்க படங்களை வெளிப்படுத்தி,தங்களது நட்புக்களுடன் அசிங்கப்படுத்தி (ஆதாரங்களுடன்) பேசப்படுகிறார்கள்.தேவையா இந்த அநாகரிகமான செயல்பாடுகள்.ஒவ்வொரு பெண்ணுக்கும்,ஆணுக்கும் தனிமனித ஒழுக்கம் தேவை.அது இல்லாவிட்டால்.,நம் நாட்டின் பல பேர் பல பேரோடு கூடிவாழ்வதன் மூலம் பிற்கால சந்ததியினருக்கு உதாரண சீர்கேட்டாளர்களாகத்தான் ஆக்கப்படுவோம்.
தனிமனித சுதந்திரம் வேறு,தனி மனித ஒழுக்கம் வேறு,தனி மனித பண்பாடு வேறு இதை தவறாக புரிந்து கொள்ளாமல்.,படுபாதகமாக பயன்படுத்தாமல் இருக்கும் வரை எல்லாப்பெண்களும் பெண்ணியவாதிகள் தான்.அடக்குமுறைக்கு அடங்காமல் தானும் அடுத்தவர்களை அடக்காமல் வாழ்தல் ஒரு பெண்ணுக்கான அழகு.
பெண்ணாதிக்க வழிக்கு பெண்களை தூண்டுவதே ஆண்கள் தான்.அந்தப்போக்கை ஆண்கள் மாற்றிக்கொண்டால்…பெண்கள் தங்களின் “யாருக்கும் செவி சாய்க்காத” முடிவை மாற்றிக்கொள்வர்.
ஆதிக்கம் என்ற வார்த்தையே ஒருவரை அடக்குதல்.அவர் மீது ஆதிக்க செலுத்துதல் என்றே பொருள்படும்.என்பது பொதுவான கருத்து.ஒருவர் மீது ஆதிக்கம் செய்யும் போக்கை கைவிட்டு,நல்ல நடவடிக்கையின் மூலம் பிறரது அன்பையும்,சுய சிந்தனை மூலம் நல் எண்ணங்களையும்,சுய ஒழுக்கத்தின் மூலம் நற் பேரையும் எடுக்க ஒவ்வொரு ஆண் ஆதிக்கவாதியும் பெண்ணாதிக்கவாதியும் எடுக்க வேண்டிய முக்கியமான பணியாகும்.
சொல்லும் பொருளை புரிந்து கொள்ளுதல்..,எடுத்துக்கொள்ளுதல்..,நடத்திக்கொடுத்தல் இது தான் பொருள்பட புரிதல்…..இதை எல்லாம் தங்களைப் பெண்ணியவாதிகளாக வெளிக்காட்டிக்கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்…….நாளைய எதிர்காலம் ....நோக்கி…………

Tuesday, 23 April 2013

குடும்ப உறவுகள்



ஒரு ஊரில் ஒரு வயதானவர் இருந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள்,இரண்டு மகள்கள்.மனைவி சமீபத்தில் தான் இறந்தார்.சொந்த வீடு இல்லை.எல்லோரையும் கட்டிக்கொடுத்ததில் எல்லா சொத்தையும் விற்றாகிவிட்டது.இன்று வெறும் ஆள் அந்த மனிதர்<P>.
அவரது வாழ்க்கையில் செய்த ஒரே ஒரு தப்பு தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல்,எல்லாம் பிள்ளைகளுக்கு,பிள்ளைகளுக்கு என செய்தது தான்.<P>
மனைவியிடமிருந்த கொஞ்சநஞ்ச நகையும் விற்று மனைவியின் டிரீட்மெண்டுக்கு செலவளித்தாகிவிட்டது.இன்று மனைவியும் இல்லை.கையில் காசும் இல்லை.<P>
முதல் பையன் என்ஜினியர்.அவரது மனைவி டீச்சர்.இரண்டு பெண் குழந்தைகள்.அங்கே சென்று தங்கினார்.ஒருவாரம் தான் இருக்கும்.மருமகள் பெட்ரூமில் பேசுவது ஹாலில் படுத்து இருக்கும் இவருக்கு நன்றாகக் கேட்டது.<p>
நமக்கு என்ன சொத்து எழுதி வச்சார் உங்க அப்பா.இப்போ வந்து உட்கார்ந்து சோறு சாப்பிடுகிறாரே வெட்கமாயில்லை.இதெல்லாம் ஒரு பொழப்பு.நானும் தான் இந்த வீட்டில் சம்பாதிக்கிறேன்.எனக்கு எல்லா உரிமையும் உண்டு.உங்கப்பா இந்த வீட்டில் தங்கினா,எல்லா வேலையும் செய்து சாப்பிடட்டும்.இல்லைனா இவருக்கு எல்லாம் நான் வடிச்சு கொட்டிட்டு இருக்க முடியாது.நான் வேலைக்குப்போறதா..?இல்ல உங்க அப்பாவுக்கு பணிவிடை செய்துட்டு இருக்கிறதா?இம்பாஸிபில்..என்னால முடியாது.<P>
தன் மூத்த பையனின் சத்தமே கேட்கவில்லை.என்ன பண்ணுவது அவனுக்கு அவன் அப்பாவால் ஒன்றும் ஆகப்போவது இல்லை.சொத்து இருந்தாலாவது மனைவியின் காலில் விழுந்து கெஞ்சியாவது கேட்டு இருப்பான்.சொத்தும் இல்லை..அதனால் சொந்தமும் இல்லை என கிளம்பிவிட்டார் தன் இரண்டாவது மகன் வீட்டிற்கு.<P>
இரண்டாவது மகன் வீட்டிற்கு செல்லும் போதே சின்ன யோசனை.இவனும் தன் அண்ணனை போல நடந்து கொள்வானோ என்று, வேறு வழி இல்லாததால், போக இடமுமில்லாததால் சின்ன மகன் வீட்டிற்குச் சென்றார்.<P>
அவனும் உள்ளூர் தான்.அங்கே சென்று வீட்டுக்கதவைத் தட்டியதும்.சின்ன மருமகள் தான் கதவைத்திறந்தாள்.”வாங்க மாமா”என்ற மகிழ்ச்சியான வரவேற்பை பார்த்து மனம் மகிழ்ந்தார்.<P>
இரண்டாவது மகன் அவ்வளவாக படிக்கவில்லை.அவனுக்கு படிப்பும் ஏறவில்லை.அதனால் சுமாரான வேலை.மாதவருமானம் ரொம்பக்குறைவு.அதனால் மிகச்சிறிய வீட்டில் இருந்தார்கள். எல்லோரும் ஒரே ஹாலில் ஒன்றாகத்தான் படுக்க வேண்டும்.<P>
இரண்டு ஆண்குழந்தைகளுக்கு நடுவில் நான் படுத்துக்கொண்டு இருந்தேன்.கொஞ்ச இடம் விட்டு மகனும் மருமகளும் படுத்துக்கொள்வார்கள்.இரண்டு நாட்கள் ஓடியது.மூன்றாம் நாள் மருமகளின் முகம் மாறுபட்டது.கவனித்தார் நான்காம் நாள் சென்றுவிடலாம் என நினைத்தார் எங்கே செல்வது என்ற யோசனையில் ஐந்தாம் நாளும் வந்தது.சாப்பிடும் போது மகன் மெதுவாக ஆரம்பித்தான்”என்னப்பா.அண்ணன் வீட்டுக்கு எப்போ கிளம்புறீங்க” என்று.<P>
நாளைக்கு சென்றுவிடுவேன்,பசங்கள பார்க்கனும் என்றுதான் வந்தேன்.இப்போ சாப்பிட்டதும் கிளம்பிடுவேன் என்று கூறிவிட்டு கண்களில் நீர் கோர்த்ததை மறைத்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.<P>
மறுநாள் விடியக்காலை மருமகளிடம் ”மகனிடம் சொல்லிவிடு.. நான் கிளம்புகிறேன் ,பிள்ளைகளை பார்த்துக்கோம்மா..என சொல்லிவிட்டு கிளம்பினார் பெரியவர்.<P>
பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டு இருந்தார்.கையில் இருந்த காசுக்கு தன் இளையமகள் வீடு இருக்கும் ஊருக்கு தான் செல்லமுடியும் பஸ் ஏறினார்.<P>
மகள் ஆசையாக ”அப்பா”என்று ஆசையாக கூப்பிட்டு நன்றாக பேசி,நன்றாக சாப்பாடு கொடுத்து வரவேற்றாள்.மருமகனும் நன்றாகப்பேசினார்.இரண்டுநாட்கள் போனதே தெரியவில்லை.மூன்றாம் நாள் எழும் போதே மாப்பிள்ளையோட அம்மா,அப்பா,தங்கை எல்லாம் வந்துவிட்டனர்.வந்ததற்கான காரணமே நீங்க வந்து பொண்ணு வீட்டுல தங்கி இருக்கீங்க.நாங்க பையனை பெத்தவங்க நாங்க வந்து அனுபவிக்காம இருப்போமா?என சம்பந்தி சொல்லும் போதே வெளியேற்றப்பட்டுவிட்டேன் நான்.<P>
கடைசியாக நம்பிக்கை இல்லாமல் முதல் பொண்ணை சந்திக்கப்போனேன்.போனவுடனே என் மகள் கேட்டது ”என்னப்பா இது, பிள்ளைகளுக்கு கூட ஒன்னும் வாங்காம கையை வீசிட்டு வர்றீங்க.என் கணவர் என்ன நினைப்பார்.அதும் என் மாமியார் வேற கூடவே இருக்கார்”என்றாள்<P>
முகம் வாடியது கண்டு,” சரிப்பா…இரண்டுநாள் தங்கிட்டு தான் போகனும்” என்றாள்.<P>
”இல்லைமா, நான் குழந்தையையும், மாப்பிள்ளை, உன்னை பார்த்துட்டு போகலாம் என்று தான் வந்தேன்.இன்றே கிளம்பனும் என்று சொல்லி ஒருநேர சாப்பாட்டை முடித்துக்கொண்டு கிளம்பினேன்…<P>
போகும் வழியும் தெரியல….போகும் காலமும் வரல…என நினைத்துக்கொண்டே ரோட்டைக்கடந்த போது தான் அது நிகழ்ந்தது.பஸ் வேகமாக வந்தது நகர்வதற்குள்….எல்லாம் முடிந்துவிட்டது.<P>
என்னைச்சுற்றி சொந்தங்களும்,பந்தங்களும்.<P>
என் மருமகள்கள் என் தலைமாட்டில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார்கள்.என் மகள்கள் என் காலைக்கட்டிக்கொண்டு அழுது கொண்டு இருந்தார்கள்.என் மகன்கள் சோகமாக நின்று கொண்டு இருந்தார்கள்.<P>
எல்லோர் கண்களிலும் கண்ணீர்.<P>
என் பேத்தி என் மகனிடம்  “ஏம்பா அழறீங்க”என்றாள்.<P>
”தாத்தா நம்மளை எல்லாம் விட்டுபோய்ட்டாரும்மா…”என்றான் என் மகன்.<P>
”அதான் தாத்தா இரண்டு நாளைக்கு முன்னாடியே நம்மள விட்டுப்போய்ட்டாங்களே..அப்போ அழாம,இப்போ அழறீங்க”என்றாள்.<P>
பெரியவர் பிணம் லேசாக சிரிப்பது போல் பிரமை எல்லோருக்கும்.<P>

Sunday, 21 April 2013

திமுக தலைமையின் கவனத்திற்கு.........!


சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரசுடனான கூட்டணியை எதிர்த்து தொண்டர்கள் இருந்தாலும் கட்சி தலைமை முடிவெடுத்துவிட்டதற்காக அந்த நிலையை ஆதரித்தார்கள். கட்சி தலைமை சொல்வதை செய்யும் தொண்டர்கள் பாவப்பட்டவர்கள். அவர்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் தலைமையை- அரசைத்தான், கட்சியில் உண்மையான எதையும் எதிர்பார்க்காத ஒரு உண்மைத்தொண்டன் விரும்புவான்.
ஆனால் நேற்று (தினத்தந்தி சிவந்தி ஆதித்தன் மறைவின்போது) நடந்த எதிர்பாராத சந்திப்பின் மூலம் தேமுதிகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் வகையில் தான் அந்த வணக்கம் அமைந்தது. அந்த வணக்கத்திற்கு அர்த்தம் ஒரு கடைநிலைத்தொண்டன் கூட அறிந்ததே…!
உண்மையில் சொல்லப்போனால்.போன சட்டசபைத்தேர்தலில் தேமுதிக கூட்டணி தங்களை ஆதரித்து இருந்தால் ஒருவேளை ஆட்சியை பிடித்து இருக்கலாம்.நாம் செய்யவில்லை.காங்கிரஸுடனேயே கூட்டணி என்று ஒரு தேவையில்லாத முடிவை எடுக்க எது காரணமாக இருந்தது?.ஏன் இருந்தது?இந்தக் கேள்விக்கான பதிலை உங்களிடமே விடுகிறேன்.
தேமுதிக தலைவர் நல்லவர் தான் .ஆனால் அவர் குடிபோதையில் உளறுவதும்,அடிப்பதும் என சினிமா காட்சி போலவே அரசியலையும் நடத்திப்பார்க்கிறார்.அது நமது கழகத்திற்கு ஒத்துவருமா…?அல்லது அடிவாங்க நம்முடைய அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்களா? என்பது பற்றி தலைமை முடிவு செய்து…. முடிவை எடுக்கவும்.
அடுத்ததாக, இந்த அ.தி.மு.க ஆட்சியில் பணம் சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற கணக்குடன் பதவி வாங்கியவர்களைப்போலவே,அடுத்த ஆட்சிமாற்றம் வரும் போது (திமுக விலும்) அதேமாதிரி பதவி ஆசையும் பணத்தாசையும் பிடித்தவர்களும் உடன் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களின் அடையாளங்களை கண்டறிய தலைமையின் சாதுர்யம் ஒன்றே போதுமானது. அதன் மூலம் ஒருத்தரின் அடையாளங்களை கண்டறிந்து கொண்டு உண்மையாகக் கட்சிக்கு உழைப்பவராக இருந்தால் மட்டுட்ம உடன் வைத்துக்கொண்டு மற்ற ஜால்ராக்களை புறம் தள்ள வேண்டும் என்பதும்,இல்லையெனில் கட்சி காசுக்காக அலைகிறது என்ற அவப்பெயர் வந்துவிடும் என்பதும் தலைமை அறிந்ததே….
எனக்குத்தெரிந்து தி.மு.க.வின் இன்றையத் தலைமையைப்போல் எதிர்காலத்தில்,  ஒரு திறமைசாலி வருவார் என்பதை யோசிக்கக்ககூடமுடியவில்லை.அப்படி வரவேண்டும் எனில் இன்னும் பயிற்சி அதிகம் தேவைப்படுகிறது பதவியை ஏற்கத்துணிபவர்களுக்கு.
கட்சியின் எல்லா மட்டங்களிலும் குடும்ப அரசியல் நுழைந்துவிட்டது.அதை தடுக்கும் நிலையில் தலைமை இல்லை.ஆனால் இறுதி முடிவெடுக்கும் நிலை என்பது தலைமையை விட்டு எங்கேயும் சென்று விட வில்லை.உறுதியான இறுதியான முடிவு கண்டிப்பாகத் தேவை தலைமை அடையாளம் காட்டும் கட்சியின் அடுத்த அரசியல் தலைவரை ஏற்பதற்குத் தொண்டர்களும் எங்களைப் போன்ற ஆதரவாளர்களும் தயாராக இருக்கிறோம்.ஆனால் உங்களைப்போல பக்குவம் நிறைந்த அரசியலை அவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். அவரை ஏற்கிறோம் என்பதற்காகவே அவருடைய குடும்பமும் அரசியல் நிகழ்வுகளில் தலையிடுவதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை.ஏற்கவும் மாட்டோம்.
புதிய தலைமையை ஏற்பவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் ஜால்ராக்களை ஒதுக்கிவிட்டு, நல்ல ஆலோசகர்களை உருவாக்கிக்கொண்டு, சொந்த முடிவை எடுப்பவராக இருக்கவேண்டும். அப்படி இருந்தால், அடுத்த ஆட்சி கழக ஆட்சிதான். அதற்கு எங்களைப்போன்ற எதையும் எதிர்பார்க்காத தொண்டர்களும் ஆதரவாளர்களும் பக்கபலமாக இருப்பார்கள். எனவே, இன்றைய கழகத் தலைமை இனி எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கட்சியை காப்பாற்றுவதிலும்,தொண்டர்களின் நம்பிக்கை காப்பாற்றுவதிலுமே  செயல்பாடு அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்.
யார் என்ன குறை சொன்னாலும் நாங்கள் எப்போதும் தி.மு.கவையே ஆதரிப்போம். அதற்கே வாக்களிப்போம். அந்த அன்பிலும்,உங்கள் மேல் உள்ள பாசத்திலும் கழகத்தின் எதிர்காலம் மீதான நம்பிக்கையிலும் எழுதப்பட்ட ஒரு எளியவளின் வேண்டுகோள் கடிதம் இது……
பலரும் சொல்லத் தயங்குவதை நான் சொல்லிவிட்டதாக ஒரு மனநிறைவு. அவ்வளவுதான்.