Wednesday 9 October 2013

இன்றைய டிரண்ட் என்ன தெரியுமா…?



பழங்காலத்தில் இருந்த பெண்கள் எல்லாம் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.ஒரு போருக்கே தலைமை ஏற்கும் பொறுப்புகளை பல பெண்கள்(அரசிகள்) ஏற்றார்கள்.

இடைப்பட்ட காலத்தில் பெண் அடிமையானாள்..,கீழ்த்தரமாக நடத்தப்பட்டாள்.கணவன் இறந்துவிட்டால்.அவளையும் கணவனின் சிதையில் தூக்கிப்போட்டு கொன்றுவிடும் அளவிற்கு பெண்களின் நிலை மோசமடைந்தது.

பின்னர் பெரியார், அண்ணா,இன்னும் பல தலைவர்கள் போராடி மீட்டு வந்தனர் மீண்டும் பெண் சுதந்திரத்தை..
காலங்கள் ஓட ஓட…..பெண்கள் அதிக அளவில் வளர்ச்சியடைத்தனர்.ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்ற அளவிற்கு பேசி ஜெயித்தும் காட்டினர்.

சமீபகாலமாக பெண்கள் பற்றி கேள்விப்படும்….உண்மை (?) பற்றி அறிந்தபோது வேதனையாகிவிட்டது.இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பெண்குலமே…என்ற ரீதியில் பெண்கள் மற்றவர்களுக்கு தவறாகவும்,தனக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும் தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட அந்தப்பெண் யாரைப்பிடித்தால் நாம் உடனடியாக முன்னேறலாம் என்று சமீபகாலமாக சினிமாத்துறை சார்ந்த நண்பர்களிடம் நல்ல பழக்கம் வைத்துக்கொண்டு,தன் விருப்பத்தை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டே  இருந்தாள்.

யாரும் செட் ஆகவில்லை.எல்லாம் பழகிவிட்டு சிபாரிசு என்று வந்தவுடன் இடத்தை காலிபண்ணிக்கொண்டு போய்விட்டனர்.ஏமாற்றம் அடைந்த அப்பெண் தனக்கு சினிமாத்துறை சார்ந்து என்ன என்ன விசயங்கள் தெரியுமோ அதில் மூக்கை நுழைத்து,அதன்மூலம் பல பிரபல நண்பர்களின் அறிமுகத்தை பிடிக்க ஆரம்பித்தாள்.

அப்போது தான் அந்த நபரை சந்தித்தாள் அப்பெண். நல்ல அழகு,பதவி,பணம் எல்லாம் நிறைந்த அவரைப் பார்க்கும்போது தனக்குள் கணக்குப்போட ஆரம்பித்தாள்.

இவரை எப்படியாவது பிடித்து வளைத்துப்போட வேண்டும்.இவர் மூலம் பல புரடியூஸர்ஸ் மற்றும் டைரக்டர்ஸ் இவர்களை மீட் பண்ணலாம் என்ற நம்பிக்கையில் அந்த நபருடன் நன்கு பழக ஆரம்பித்தாள்.

ஜொள்ளுப்பார்ட்டியான அந்த நபரும் இப்பெண்ணுடன் பழக ஆரம்பித்தார்.பழக்கம் வேகமாக வளர்ந்து நாளடைவில் காதலாகவும் மாறிவிட்டது.

நீ இல்லையெனில் நான் இல்லை..என்ற ரீதியில் ஒருவருக்கொருவர் இணை பிரியாமல் வாழ்ந்தனர்.அந்த சமயத்தில் தான் அப்பெண்ணுக்குத் தெரிந்தது, தன் நண்பருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது.

முதலில் கோபப்பட்ட அப்பெண் நாளடைவில் சரி போகட்டும் அவளை மனைவியாக வைத்துக்கொள்…என்னை மனைவியாகவும்,காதலியாகவும் வைத்துக்கொள் என்றபடி சமாதானம் ஆனாள்.  கல்யாணம் ஆகாத இப்பெண், ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கும் ஒரு தகப்பனுக்குத் தன் வாழ்க்கையை ஏன் பரிசாக தரவேண்டும் என்ற கேள்வி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தியது.

அப்போது தான் தன் தோழி ஒருவள் அப்பெண்ணுக்கு அட்வைஸ் பண்ணினாள். ஏண்டி இப்ப உனக்கு என்ன குறை ஏன் இரண்டாம் தாரமாக போய் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிற..?அவ்வளவு காதலா அவர் மேல்…?என்றவளை..

சிரிப்புடன் நோக்கினாள் அப்பெண்.  நீ வேற போடி காதலாவது கத்திரிக்கையாவது…அந்த ஆளுக்கு நிறைய சினிமாத்துறை சார்ந்த ஆட்களைத்தெரியும்,அதன்மூலம் நான் சினிமா சான்ஸ் தேடிக்கலாம் என்று தான் அவரோடு சுத்திட்டு இருக்கேன்.ஒரு பெரிய சான்ஸ் கிடைக்கட்டும் இந்த ஆளதூக்கி ஓரம் கட்டிட்டு போய்ட்டே இருப்பேன்.என்றாள்.

அதிர்ச்சியானாள் தோழி என்னடி இது முன்னேற்றத்திற்கு விலை உன் வாழ்க்கையா…?என்னடி சொல்றா..அப்போ அவர்மேல் காதல் கொண்டது போல் நடந்துகொள்வது எல்லாம்……

நடிப்பு தாண்டி நாம முன்னேறனும் என்றால் அதுக்கு இணையாக என் ‘கற்பு’ மட்டுமல்ல என் வாழ்க்கையே வைத்து பணயம் ஆடித்தான் ஜெயிக்கப்போறேன்..என்றாள் வெறியோடு…….

இச்சம்பவம் சினிமாத்துறை சார்ந்த இந்தப்பெண்ணுக்கு மட்டுமல்ல,காலேஜ் படிக்கும் பெண் முதல்கொண்டு…அரசியலில் கால்பதிக்க ஆசைபடும் பெண் முதல்கொண்டு எல்லோரும் இன்று இப்படி தான் நினைக்கிறார்கள். பெண்ணின் உடல் அவனுக்குத்தேவைப்படுது, எனக்கு அவன் பணம்,செல்வாக்கு தேவைப்படுது கிவ் அண்ட் டேக் பாலிஸி இதுல என்ன இருக்கு…? எனக்குத்தேவை முன்னேற்றம், பாப்புலாரிட்டி, பணம் இதுமட்டும் தான் என்கிறார்கள் இவ்வகைப் பெண்கள்.

பார்த்தீங்களா இன்றைய டிரண்ட் இதுதான் இப்படித்தான் சில பெண்கள் சில ஆண்களை பயன்படுத்தி வெற்றிகொள்கின்றனர்…


அடுத்து இன்னொரு  டிரண்ட்…..

5 comments:

  1. நீ வேற போடி காதலாவது கத்திரிக்கையாவது…

    ReplyDelete
    Replies
    1. டிசண்டா கமெண்ட் போட்டா நல்லா இருக்கும்

      Delete
  2. இதற்குத்தானா ஆசைப்பட்டாய்

    ReplyDelete
  3. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ......

    ReplyDelete
  4. "சினிமாத்துறை சார்ந்த இந்தப்பெண்ணுக்கு மட்டுமல்ல,காலேஜ் படிக்கும் பெண் முதல்கொண்டு…அரசியலில் கால்பதிக்க ஆசைபடும் பெண் முதல்கொண்டு எல்லோரும் இன்று இப்படி தான் நினைக்கிறார்கள்."
    பிரதிபா எல்லோரும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் சொல்லும் ட்ரென்டில் சில பெண்கள் இருக்கலாம். எப்போதும் இங்கே இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்று, ஒரு ஆண் தன்னுடைய துறையில் உயர்ந்த இடத்த்தை அடைந்தால் அது அவருடைய உழைப்பால், அறிவால் கிடைத்தது என்னும் பார்வை. அடுத்து ஒரு பெண் தன்னுடைய துறையில் உயர்வை அடைந்தால், பெண் என்பதால் காரியம் நடந்தது என்னும் பார்வை. சமூகத்த்தின் ட்ரெண்ட் மாறவேண்டும்.

    ReplyDelete