வீட்டுல இரண்டு பிள்ளைங்க இருக்காங்க..அவங்க படிப்பு மற்றும்
உடல்நிலை குறித்து தான் இப்போதெல்லாம் அக்கறையாக இருக்கிறது.எனது சிந்தனையும் அதை நோக்கி
தான் செல்கிறது.வேற எந்த எண்ணத்திலும் என் மனம் செல்ல மறுக்கிறது.
இரவு படுக்கை விசயத்தில் கூட என் கணவருக்கு ஈடு கொடுக்கமுடியல..எங்கே
என் பையனுங்க இரண்டுபேரும் முழுச்சு வந்துடுவாங்களோ பார்த்துடுவாங்களோ என்ற எண்ணத்தில்
மூடு கூட சரியாக வருவதில்லை.ஆரம்பத்தில் சகஜமாக எடுத்துக்கொண்டார் என் கணவர்.
ஆனால்,மனதிற்குள் இந்த விசயங்களை வைத்துக்கொண்டு,என்னுடன்
சரியாக பேசுவது கூட இல்லை.இரவு லேட்டாக வருவதும்,கோபத்தில் கத்துவதும் என்று ரொம்ப
மோசமாக செயல்படுகிறார்.
படுக்கை என்ன அவ்வளவு பெரிய விசயமா..?ஏன் எனக்கு ஏற்படும்
பிள்ளை பாசம் என் கணவருக்கு வரமாட்டேங்குது.எப்போ பார்த்தாலும் இதே வேலையாக திரிய முடியுமா..?ஒரு
வயதிற்கு மேல் இதெல்லாம் அவசியம் அல்ல.முன்னேற்றம்,பிள்ளைகள் எதிர்காலம் தான் நம் எண்ணத்தில்
வரவேண்டும்.என்று நான் சொல்ல ஆரம்பித்தால்,கோபத்தில் அடிக்கக்கூட வந்துவிடுகிறார்..
சரி,நாமும் விட்டுக்கொடுத்து போகவேண்டும் என்பதாலும்..அவரின்
கோபத்தைக் கருதியும் என் மனதை மாற்றிப்பார்க்கிறேன்.ஆனால் முடியவில்லை. இரவு படுக்கையில்
ஈடுபாடாக இருப்பது போல் நடித்தால் கூட கண்டுபிடித்துவிடுகிறார்.
’
சே என்ன ஜென்மமோ….எருமை மாடு மாதிரி இருக்க” என்று கூறிவிட்டு
இடையில் எழுந்து போய்விடுகிறார்.கோபத்தில் பிள்ளைகள் முன்னால் கூட நீ எதுக்கும் லாயக்கில்லை
என்று திட்ட ஆரம்பித்துவிட்டார்.
நான் என்னடி பண்றது,என்று என் தோழி தன் ஆதங்கத்தை எல்லாம்
என்னிடம் கொட்டி தீர்த்துவிட்டு,அழ ஆரம்பித்தாள்.பின்னர் என்னை நோக்கியவள் நான் சிரித்துக்கொண்டு
இருந்ததை பார்த்து கடுப்பாகிவிட்டாள்.
ஏண்டி நான் இவ்வளவு கஷ்டத்தை சொல்லிட்டு இருக்கேன்.”நீ சிரிக்கிறையா…போடி
நான் போறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினாள்.
நான் அவளை அமர்த்தி அவளது கையைப் பிடித்து “அடி லூஸூ உன்னைப்
போல் ஒரு வளர்ந்த குழந்தையை பார்த்து,சிரிக்கத்தான் தோனுது.தப்பு உன் பேர்ல தான்.உன்
கணவரின் மேல் இல்ல.”என்றதும் மேலும் என்னை கோபமாக பார்த்தாள்.
முதலில் நான் சொல்வதைக்கேள்.”உனக்கு உன் பிள்ளைகள் எவ்வளவு
முக்கியமோ..அதே அளவு தான் உன் கணவருக்கும் முக்கியம்.உங்களுக்கு மட்டுமல்ல எல்லோர்
வீட்டிலும் குழந்தைங்க வளர வளர அவர்கள் மேல் கூடுதல் அன்பும் அரவணைப்பும் வரத்தான்
செய்யும்.
ஆனால்,அதற்கும் கணவருடன் உறவில் ஈடுபடுவதற்கும் என்னடி சம்பந்தம்
இருக்கு.?நீயா போட்டு மனதை குழப்பிக்கிறனு நினைக்கிறேன்.
உன் வீட்டில் இரண்டு படுக்கை அறை இருக்கு தானே? என்றேன்.
ஆமாம் என்றாள்.
நீ எங்க படுப்ப..?
நான் என் பையனுங்க கூடத்தான் இரவில் படுப்பேன்.இவர் கூப்பிட்டால்
மட்டும் அவர் இருக்கும் ரூமுக்குச் செல்வேன்.கதவை தாழ்ப்பாள் போட்டாலும் கூட எனக்கு
என் பையன்கள் கூப்பிடுவது போலவே தோன்றும்.என்றவளை.........
தடுத்து நிறுத்தினேன்.
இனிமே ஒழுங்கா உன் கணவரின் அருகில் படு,பசங்க
இருவரையும் தனியறையில் படுக்க வை.இரவில் முழிப்பு வந்தால் மட்டும் சென்று நல்லா தூங்குறாங்களா
என்று பார்.மற்றபடி பதினைந்து வயதை நெருங்கிய உன் பையன்கள் ப்ரைவஸி தேடுவாங்க..நீ அவர்கள்
அருகில் படுத்து இருந்தால் அவன்களே உன்னை டிஸ்டர்பாக நினைக்க வாய்ப்புள்ளது.
போடி அப்படியெல்லாம் இல்ல.என் பையன்கள் இருவரும் என் மேல்
கால் போட்டு தூங்கியே பழக்கப்படுத்திட்டானுங்க.என்னைய டிஸ்டர்பாக எல்லாம் நினைக்கமாட்டாங்க..
அட இவளை என்ன சொல்லி தெளிவாக்குவது என்று யோசித்துக்கொண்டு
இருந்தேன்…..தொடரும்.
நல்ல விஷயம், எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம், புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், பகிர்ந்துகொள்ள தயக்கபடும் விஷயம்.... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇந்த பிரச்சனைகளுக்காக தான் வெளிநாடுகளில் சிறுவர்களாக இருக்கும்போதே தனி அறை ஒதுக்கிவிடுவார்கள்... உவர்களின் உறவும் பாதிக்காது.. பிள்ளைகளின் சுதந்திரமும் பாதிக்காது...
ReplyDelete