ஒரு பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும் அப்போது நான்
மாசமாக இருந்தேன்.மாதமாதம் லேடி டாக்டரை மீட் பண்ணுவதற்காக செல்வேன்.நிறைய லேடிஸ் வருவாங்க..அப்போ
ஒரு திருமணம் ஆன பெண் என்னுடன் பழக்கம் ஆனாங்க.
மிகுந்த சோர்வுடனே எப்போதும் தெரிவாங்க.இரண்டு தடவை அவங்க
பார்த்த போதும் அப்படியே தெரிந்ததால் ,என்ன ஆச்சு ஏன் எப்போதும் டல்லாக இருக்கீங்க.திருமணம்
ஆன புதிது தானே ஜாலியாக இருக்ககூடாதா ?என்பேன்.
கணவர்கள் எல்லாம் டோக்கன் நம்பர் வரும் வரை வெளியில் நின்று
கொண்டு இருப்பார்கள்.அதனால் நாங்கள் ஃப்ரியாக பேசும் வாய்ப்பு கிடைத்தது.முதல் தடவை
நான் கேட்டதும்”இல்ல,எனக்கு திருமணம் ஆகி எட்டுமாதம் ஆகிவிட்டது,அதற்குள் இருமுறை அபார்ஷன்
ஆயிடுச்சு.அதான் யோசனையா இருக்கு..என்ன ப்ராப்ளம் என்று தெரியல.டாக்டரை பார்த்து மாத்திரையும்
சாப்பிடுகிறேன்.ஆனாலும் இன்னும் குழந்தை நிற்கவில்லை” என்று சமாளித்தாள் அப்பெண்.
நானும் ”எட்டுமாதம் தானே ஆகிறது.அதனால் என்ன கவலை விடுங்க
கொஞ்சநாள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.நான் எல்லாம் ஒன் இயர் கழிச்சு இப்போதான்
குழந்தை பெற்றுக்கொள்ளப்போகிறேன்” என்றேன்.
சிரித்துவிட்டு நகர்ந்தாள்.அன்றைய சந்திப்புடன் முடிந்துவிட்டது
என்று நினைத்தேன்.
ஆனால் அடுத்த முறை நான் செக்கப் போயிருந்தபோது,எனக்கு முன்னே
டாக்டரை பார்த்துவிட்டு அப்பெண் வெயிட் பண்ணிட்டு இருந்தாள்.அவள் கணவன் உடன் இல்லை.
என்ன ஆச்சு டாக்டரை பார்த்தாச்சா..? ஏன் வெயிட் பண்றீங்க?
என்றேன்.
அவள் என்னுடன் இருந்த என் கணவனை ஃப்ரியா பேசனும் ஆனால் இவர்
இருக்கிறாரா என்பது போல் பார்த்தாள்.நான் அவரை உள்ளே சென்று டோக்கன் போடச்சொல்லிவிட்டு,இப்போ
சொல்லுங்க என்னாச்சு…?என்றேன்.
இல்லை சென்னை வந்ததிலிருந்து எனக்கு யாருமே ப்ரண்ட் இல்ல.என் அம்மா,மாமியார் எல்லாம் எங்களை தனிக்குடித்தனம் வச்சுட்டு போய்ட்டாங்க.எனக்கு எந்த
பிரச்னையும் இல்லாம தான் என் கணவருடன் வாழ்ந்துட்டு இருந்தேன்.என் கணவரின் நண்பர் மட்டும்
வாரத்திற்கு இரண்டுநாட்கள் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்.
எப்போ பார்த்தாலும் என் கணவரிடம் பேசிட்டே இருப்பார்.நான்
சமைக்கும் போது கூட என் கணவரும்,அவரும் பெட்ரூமில் பேசிட்டு இருப்பாங்க.ஆரம்பத்தில்
நான் தப்பா நினைக்கல..நட்புனா இப்படி இருக்கனும் என்று நினைப்பேன்.
ஆனா நாளடைவில் அந்த நண்பர் என்னை அதட்டவும்,என் சமையலை குறைசொல்லவும்
ஆரம்பித்தார்.என் கணவர் ஆபிஸ் சென்ற பிறகுகூட வீட்டிலேயே அமர்ந்துகொண்டு பொம்பளை மாதிரி
எனக்கு சமையல் சொல்லித்தரவும்,அடுத்தவர்கள் குடும்பத்தைப் பற்றி கதை பேசவும் என்று
இருப்பார்.
எனக்கு அவரின் செய்கை நாளடைவில் எரிச்சலைத்தந்தது.ஆனால் திருமணம்
ஆன புதிது என்பதால் என் கணவரிடம் நண்பரைப்பற்றி குறை சொல்ல மிகுந்த பயம்.
ஒருநாள் நானும் என் கணவரும் ஞாயிறு மதியம் சாப்பிட்டுவிட்டு
தூங்கிக்கொண்டு இருந்தோம்.அப்போது வந்த அந்த நண்பர்.என் கணவரிடம்.என்னடா இது மட்டமதியானத்துல
பொண்டாட்டியோட படுக்குற.இதெல்லாம் நல்லாவா இருக்கு.சே அசிங்கமா இல்ல.என்பது போல் கேட்டதும்,என் கணவர்
அப்படித்தான் படுப்பேன்.உன் வேலையைப்பார் என்று திட்டி அனுப்பிட்டார்.அந்த நண்பரும்
கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அப்பாடா தொல்லைவிட்டது என்று நினைத்தால் இரண்டாம் நாளே கதவு
தட்டும் சத்தம் கேட்டு திறந்தால் அந்த நண்பர் நின்று கொண்டு இருந்தார்.
சரி அவரே கோபித்துக்கொள்ளாமல் வந்துவிட்டாரே என்று எண்ணிய
நானும் என் கணவரும் இரவு அன்பாக பேசிக்கொண்டு இருந்து விட்டு,படுக்கச்சென்றோம்.
அந்த நண்பரும் தூங்கிவிட்டு இருந்தார்.
ஒரு ஐந்து மணி இருக்கும்.எனக்கு பாத்ரூம் வந்ததால் எழுந்தேன்.என்
கணவரை அருகில் காணோம்.
கதவைத்திறந்துகொண்டு வந்து வெளியில் வந்து பார்த்தால் என்
கணவர் அந்த நண்பரின் பக்கத்தில் படுத்துக்கொண்டு இருந்தார்.
என்றவள் கொஞ்சநேரம் மவுனம் காத்தாள்.அவளது கண்களில் கண்ணீர்
மீறிக்கொண்டு வந்து கன்னத்தில் வழிந்தது.
எனக்கு என்ன சொல்வது என்றே புரியாமல் திகைத்து நின்றேன்.தொடரும்….