Saturday 28 September 2013

நட்பிற்கு முண்டோ அடைக்கும் தாழ்....?

ஒருவர் தன் மனைவி படுத்தும் பாட்டால்,வீட்டிற்கு வருவதற்கே...விருப்பமில்லாமல் வந்துகொண்டு இருந்தார்.எப்போதும் சந்தேகம்,தன் பேச்சைத்தான் கேட்க வேண்டும் என்ற அகம்பாவம் இதனால் கணவருக்கும் மனைவிக்கும் இடையே பிரச்னைகள் தோன்றிக்கொண்டே இருந்தது.இருவரும் தன் இரு பிள்ளைகளுக்காக விருப்பமே இல்லாமல் ஒருவீட்டில் வாழ்ந்துகொண்டு இருந்தார்கள்.

தன் நண்பன் ஒருவரின் ஆலோசனையின் படி கேட்க ஆரம்பித்தார்.ஒரு பெண்ணின் நட்பின் மூலம் நமக்கு ஓரளவு நிம்மதி கிடைக்க வாய்ப்புண்டு.ஒரு பெண் தான் நமக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவாள்.ஆண் நண்பர்கள் நம் சோகக்கதையை கேட்டுவிட்டு அடுத்தவர்களிடம் சொல்லி கிண்டல் பண்ணிக்கொண்டு இருப்பார்கள் என்று தன் நண்பன் கூறியதை மனதிற்குள் வைத்துக்கொண்டே,

ஒரு பெண் தோழியை தேட ஆரம்பித்தார்.எதன்மூலம் தேடுவது..?முதல் வழி பேஸ்புக்,டிவிட்டர் என தேடி அலைய ஆரம்பித்தார்.அவருக்கு இன்பாக்ஸில் வரும் பெண்களின் நட்புகளை சோதிக்க விரும்பி அனைவரிடமும் தனக்கு திருமணம் ஆகிவிட்டது.ஆனால் நல்ல பெண் தோழி கிடைக்க ஏங்குகிறேன் என்று கூறினார்.யப்பா...கல்யாணம் ஆன பெண்கள் ஒரு க்யூவில் நின்று இவருக்கு நட்பு வலை வீசினர்.

கடைசியாக இவர் தேர்ந்தெடுத்த பத்து பெண்களில் இருவர் மட்டும் நட்புத்தொடர நல்லவர்களாக அமைவார்கள் என்று நினைத்தார். அவர்களிடம் சகலமும் பேசி தன் துயரை துடைக்க விரும்பினார்.வீட்டில் நடக்கும் பிரச்னைகள்,சண்டைகள் என இவரும்,அந்த இருவரும் (பெண்கள்)பேசிக்கொண்டு இருந்தனர்.

ஒரு பெண் என்னடா இது நட்பு இவ்வளவு சோகமாக போகுது என்றபடி எஸ்கேப் ஆகிட்டா..மற்ற ஒரு பெண்ணும்,இவரும் நட்பை தொடர்ந்து,பின் ஒருநாள் சந்திக்க விரும்பி,மகாபலிபுரத்தில் ரூம் போட சம்மதித்து,அவரும்,அப்பெண்ணும் ஒன்று சேர்ந்து குளவி தங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள்.

காத்துக்கொண்டிருந்த அவரைப் பார்க்க அப்பெண் கால் டாக்ஸியில் வந்து இறங்கினாள்.இறங்கியவளை கண்ட இவன் தலை சுற்றி கீழே விழுந்தான்.அப்பெண் அழுது கொண்டே மீண்டும் டாக்ஸியில் ஏறி கிளம்பிவிட்டாள்.

ஏன்..?ஏன் அதிர்ச்சி ஆனான்..?ஏன் அவள் அழுதாள்..?

ஏனெனில் கால் டாக்ஸியில் வந்து இறங்கியது,இத்தனை நாள் தன் சோகங்களை பகிர்ந்து கொண்டது,தன் கணவர் பற்றிய குறைகளைச் சொல்லிக்கொண்டு இருந்தது..எல்லாம் தன் தங்கை தான் என்றதும்,இவரால் அவமானத்தை,ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.
அதனால் வந்த மயக்கம் அவருக்கு...

இத்தனை சோகங்களையும் பகிர்ந்த நாம் இவர் யார்..?எங்கு வேலை செய்கிறார்? என்று கூட கேட்கவில்லையே..இப்படி அண்ணனிடமே தன் அந்தரங்க விசயங்களைக் கூறி அசிங்கப்பட்டுவிட்டோமே..என்ற வருத்தத்தில்,அசிங்கத்தில் அவளும் சென்றாள்.

அடுத்தவர்களிடம் ஆறுதல் தேட வந்தவர்கள் தன் உண்மையான முகங்களையும் பேரையும் ஏன் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்தனர்.?

என்ன மனது...இது..நாம் நினைக்கும் நமக்குச் சாதகமான விசயங்களுக்கு எல்லாம் நம்முடன் சேர்ந்து நம் நிஜங்களையும் ஏமாற்றப்பார்க்கிறதே..?

இவர்கள் ஏன் பிரிந்தனர்.அது அண்ணன் தங்கையாக இருந்தாக்கூட,பார்த்ததும் அழுதபடி  தன் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு இருக்கலாமே.தன் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள வெறும் வார்த்தைகள்,ஆறுதல்களை நம்பி மட்டும் இருவரும் மகாபலிபுரம் வரவில்லை என்பது திரும்பிச்செல்லும் போது அவர்கள் மனதிற்குள் தோன்றியது. காரின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து...காரித்துப்ப வேண்டும்  போல் இருந்தது.

நடைமுறை வாழ்க்கையில் வெறும் வார்த்தைகளோடு நட்பை முடித்துக்கொள்ள....உணர்ந்து கொள்ள...ஆண் நண்பர்களோ..பெண் நண்பர்களோ...விரும்புவதில்லை.அதையும் தாண்டி ஒரு உணர்வு,மனதிற்குள் தோன்றும் சல்லாபம் இவைகளைத்தான் எதிர்பாலினத்தவரின்( உள்மன )நட்புக்கள் எதிர்பார்க்கின்றன.

(அதனால் தான் எதிர்பார்த்து வந்த உறவு தன் தங்கை என்றதும்,அவனால் மயங்கி விழ முடிந்தது.தன் நட்பு காதலனை எண்ணி வந்த வேளையில் தன் அண்ணன் தான் அந்த நண்பன் என்ற போது அப்பெண் அழுகையுடன் காரில் ஏறிச் சென்றுவிட்டாள்.)

ஒருவேளை இருவரும் அண்ணன் தங்கையாக இல்லாமல் இருந்து இருந்தால்..கண்டிப்பாக ஒரு நட்பு மகாபலிபுரத்தில் ஒரு ரூமில் ஒரு படுக்கையில் களவாடப்பட்டு,அங்கே ஒளிந்துகொண்டிருந்த ஒரு வேசியின் மகனோ,மகளோ தங்கள் கஷ்டங்களை மறந்து ஏக்க மூச்சை, வெட்கத்தை விட்டு பெற்றுக்கொண்டு இருந்து இருப்பார்கள்.

நல்லவேளை இவர்களின் அம்மா அந்தக் கெட்ட(வேசி) பெயரிலிருந்து தப்பித்து விட்டாள்.

எதிர்பாலினரின் நட்பு விக்கிரமன் பட லாலாலாலாலலல....போன்றது அல்ல,எங்காவது ஒருவகையில் ஒரு சின்ன ஆசையை வெளிப்படுத்திக்கொண்டால் போதும்.அந்த ஆசை மிருகத்தனமாக மாறி நமது உண்மையான நட்பை மாற்றி தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க பழகிக்கொள்ளும்.அந்த மாதிரி நட்பின் எல்லையைத்தான் தாண்டிவிட்டார்கள் இந்த கதையில் வரும் நட்பு கதாப்பாத்திரம்.

ஏதோ ஒரு வகையில்......எதிர்பாலின நட்பு எல்லை மீறலை தேடிக்கொண்டு இருக்கும்.அந்த மீறலையும் தாண்டி ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் இருக்குமானால்...அது தான் உண்மையான நட்பின் இலக்கணமாக மாறி இலக்கியமாகக்கூடும்.


நட்பிற்கு முண்டோ அடைக்கும் தாழ்....?

No comments:

Post a Comment