பெரிய பெரிய கோவிலையெல்லாம் பார்த்தா இடது பக்கம் விநாயகர்
சிலை வச்சு இருப்பாங்க.ஏன்னா விநாயகர் கும்பிட்டு போனா நம்ம பாவம் எல்லாம் கழிந்துவிடுமாம்.அதன்
பிறகு மெயின்(சிவனோ, எவனோ,அல்லது பெண் சாமியோ) சாமியை போய் சந்திக்கலாமாம்.
ஏனென்றால் விநாயகரிடம் தான் சனி பகவான் கூட அண்டவில்லையாம்.மற்ற
எல்லா சாமிகளிடத்தும் சனிஸ்வர சாமி என்னும் கஷ்டம் கொடுக்கும் சாமி பிடித்துக்கொண்டு
ஆறு மாதமோ அல்லது ஏழரை வருடமோ பிடித்து கஷ்டங்களை கொடுத்து ஆட்டி படைத்து விடுமாம்.
ஆனால் விநாயகர் மட்டும் சனிஸ்வரன் பிடிக்க வரும் போது டகால்டி
வேலை காண்பித்து எஸ்கேப் ஆகிவிட்டார்.அதனால் தான் விநாயகரை பர்ஸ்டு கும்புடு போட்டு
நெக்ஸ்ட் மற்ற சாமிகளுக்கு வணக்கம் செலுத்தனுமாம்.
ஆனா விநாயகர் பிறந்த கதையை மட்டும் கேட்டு அவரை தப்பு சொல்லாதீங்க.பார்வதியின்
முதுகில் இருந்த அழுக்கை சுரண்டி எடுத்து தான் விநாயகர் உருவானாராம்.சிவனுக்கு ஒன்னும்
வேலைப்பளு இல்லாமல் பிறந்த விநாயகர் மீது தான் பார்வதிக்கு மிகுந்த பிரியமாம்.
அதனால் தான் குளிக்க செல்லும் போது பார்வதி விநாயகரை காவலுக்கு
உட்கார வைத்துவிட்டு செல்வாராம்.(அவ்வளவு நம்பிக்கை சிவன் மீது)ஒருநாள் பார்வதி இப்படி
குளிக்கச்செல்லும் போது,சிவன் வந்து இருக்கிறார்.
விநாயகரும் அம்மா குளிக்கிறாங்க அதனால் சற்று நேரம் கழித்து
வாங்கன்னு தன் அப்பா(?)விடம் சொல்லியிருக்கிறார்.ஆனால் சிவன் என்ன அவசரமோ பாத்ரூமுக்குச்
செல்ல வேண்டும் என அடம்பிடித்து இருக்கிறார்.விநாயகர் விடவே இல்லை.கோபம் கொண்ட,சிவன்
விநாயகரின் கழுத்தை தன்னிடம் இருந்த வாளினால் ஒரே வெட்டு வெட்டி இருக்கிறார்.
விநாயகருக்கோ கழுத்து துண்டாகி அழுக்கு வராமல் இரத்தம் தான்
வந்து இருக்கிறது.அதைக்கண்ட பார்வதி வழக்கம் போல் கோபித்துக்கொண்டு அப்பாவீட்டுக்குச்
சென்று விட்டார்.(இந்த பெண்கள் கோபித்துக்கொண்டு செல்லும் பழக்கம் அப்போ இருந்தே தொடர்ந்து
இருந்து இருக்கிறது.).கடைசி வரை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த சிவனுக்கு யாரோ
ஐடியா கொடுத்து வடக்குப் பக்கம் சென்று அங்கே முதலாவது வடக்குப்பக்கம் தலை வைத்து படுத்து
இருக்கும் உயிரினத்தின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் விநாயகர் முகத்தில் ஒட்டிவிடலாம்
என்று கூறியிருக்கிறார்கள்.
இவரும் வடக்குப்பக்கம் தேடிக்கொண்டே செல்லும் போது முதலாவதாக
வடக்குப்பக்கம் தலை வைத்து படுத்து இருந்தது யானை மட்டுமே எனவே யானையின் தலையை வெட்டி
அதன் தலையை கொண்டு வந்து இருக்கிறார்.(அதனால் தான் நாம் வடக்குப்பக்கமாக தலையை வைத்து
தூங்கக்கூடாது என்று பெரியவங்க சொல்லுவாங்க.ஏன்னா யானைக்கு வந்த ஆபத்தை போல நமக்கு
வந்துவிடுமாம்.ஹஹஹ என்ன கொடும சரவணா வடக்குப்பக்கம் வைப்ரேஷன் அதிகமாக வரும் என்ற அறிவியலை
சொன்னால் மக்கள் கேட்க மாட்டார்கள் அதனால் இப்படி ஒரு பயக்கதை)
அந்த யானை முகத்தை கொண்டு வந்து தன் பையனுக்கு ஒட்ட வைத்து
விநாயகரை யானைமுகத்தோடு ஆக்கிவிட்டார்.உடனே பார்வதியும் வந்துவிட்டார்.தன் பையன் யானைமுகதோடு
இருப்பதைக்கண்டு அழுதாலும் பாசத்துடன் அணைத்துக்கொண்டார்.
அன்றிலிருந்து தான் யானைமுகத்தானே என்று விநாயகர் அழைக்கப்படுகிறார்.ஒருநாள்
குடும்பத்தில் கோபத்தை உண்டாக்குவதற்கே ஒளவை பாட்டு ஒரு மாம்பழக்கனியை கொண்டு வந்து
சிவனிடம் கொடுத்துள்ளார்.முருகனும் விநாயகரும் அந்த மாங்கனிக்கு ஆசைப்பட்டு சண்டை போட்டுக்கொண்டனர்.உடனே
சிவன் ஒரு ஐடியா எடுத்தார் ”இக்கனி யாருக்கு வேண்டுமோ”? அவர்கள் இந்த உலகத்தை ஒருமுறை
சுற்றி வரவேண்டும்,முதலாவதாக வருபவருக்குத்தான் இக்கனி என்று கூறிவிட்டார்.
முருகன் தன்னுடைய மயில் வாகனத்தில் உலகைச்சுற்ற போய்விட்டார்.ஆனால்
விநாயகரோ தன்னுடைய அம்மா அப்பாவை சுற்றி விட்டு அக்கனியை பெற்றுக்கொண்டார்.அப்போது
அங்கே வந்த முருகன் சீட்டிங் சீட்டிங் என்று கத்திக்கொண்டு வந்தார்.என் அம்மாவும் அப்பாவும்
தான் எனக்கு உலகம் அதனால் அவர்களை சுற்றிக்கொண்டு வந்து நான் கனியை பெற்றுக்கொண்டேன்
என்றதும் கோபித்துக்கொண்டு பழனி மலையில் போய் உட்கார்ந்து விட்டார்.(முருகன் ஆனா ஊனா
மலைல போய் உட்கார்ந்து கொள்வதே அவர் வேலை.)
அசுரனாக வந்த மூஞ்சுறுவை தனது வாகனமாக ஆக்கிக்கொண்டார்.யானைமுகத்தோனுக்கு
கொழுக்கட்டை என்றால் உயிர் அதான்ல் தான் அவருக்கு கொழுக்கட்டை படைத்து காட்டி விட்டு
நாம அதை திங்கிறோம்.
இப்படி விநாயகனுக்கு பல திறமைகள் இருக்கு அதையெல்லாம் எழுத
வேண்டும் எனில் நிறைய பக்கம் தேவைப்படும்.ஆனால் நமக்கு போர் அடித்துவிடும் என்பதால்..இத்தோடு
முழித்துக்கொள்கிறேன்.
என்ன இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…யாருக்கு……
உண்மையிலேயே
விநாயகர் இருந்தா விநாயகருக்கு………ஹி ஹி ஹி… இல்லைனா கொழுக்கட்டைக்கு…..!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
ReplyDelete