Monday 2 September 2013

இணைய பாசறை நண்பர்களை இணைக்கும் பாசறை :

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு அவர்கள் எனக்கு நட்பு வட்டத்தில் இருந்தாலும்,அவரை பற்றிய அறிமுகம் எனக்குக் கிடையாது.நண்பர்கள் அனைவரும் புதுக்கோட்டையில் நடக்கும் பாசறை கூட்டத்திற்கு வருவார்கள்,அதில் என் கணவர் கோவி.லெனின் பேசுகிறார் என்பது மட்டும் தெரியும்.
பாசறை கூட்டம் நடக்கும் முதல் நாள் வரை நான் கலந்துகொள்ள முடியுமா என்பது பற்றிய கவலைதான் இருந்தது.அந்த அளவிற்கு என் உடல்நிலை இருந்தது.இருந்தும் நான் கலந்துகொள்கிறேன் எனப்பிடிவாதம்  பிடித்து தோழர் சரவணக்குமார் மற்றும் ஜெயின் கூபி அண்ணன் என் கணவர் மற்றும் என் பொண்ணுடன் புதுக்கோட்டை நோக்கி பயணம் செய்தோம்.
செப்டம்பர் 1ந் தேதி காலையில் மண்டபத்தை அடைந்தபோது தான் தெரியும் மிகப்பெரிய நண்பர்கள் கூட்டம்,தேன் கூடில் மொய்க்கும் ஈக்கள் போல் நிறைந்து இருந்தனர்.காலை உணவு கல்யாண உணவைப்போல் சிறப்பாக இருந்தது.
பெரியண்ணன் அரசு அவர்கள் ஒரு 50 வயதை கடந்தவராக இருப்பார் என நினைத்து இருந்தேன்.சாப்பிட அழைத்துச்செல்லும் போது தான் தெரிந்தது.இவ்வளவு இளமையாக இருப்பார் என்பது.தினகரன் அரசு அண்ணன் அவர்கள் மிலிட்டரி மேன் ரூபத்தில் அப்படியே இருந்தார்.எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வெள்ளைக்கலர் டி சர்ட்,அணிந்து வயது,கலர்,ஏற்ற, இறக்கம் எதுவும் இல்லாமல் எல்லோரும் ஒரே ரூபத்தில் இருந்தனர்.
காலையில் பேசிய செளமியன்,அப்துல்லா,ராஜா,கீரை தமிழ்ராஜா இவர்களைத்தொடர்ந்து பேசிய கோவி.லெனின் திமுக உறுப்பினர் அல்லாத திமுகவின் உண்மையான,உறுதியான ரசிகனாக ,கலைஞர் அவர்களின் மேல் வைத்துள்ள பாசத்தின் எல்லையை அவரின் பேச்சில் காணமுடிந்தது.
மதிய உணவு வேளையின் போது முஸ்லீம் வீட்டு கல்யாணம் போல் உணவு பரிமாறப்பட்டது.உண்டமயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்ற பழமொழியை மாற்றியது,வக்கீல் வைரமுத்து,திருப்பூர் கார்த்திக்,சிவானந்தம் அவர்களைத்தொடர்ந்து பேசிய மாணவர் அணி துணைச் செயலாளர் தோழர் ஜெரால்டு மற்றும் ஐ பெரியசாமி அவர்களின் புதல்வர்  இளைஞர் அணி துணைச்செயலாளர் செந்தில்,மற்றும் டி ஆர் பி ராஜா எம் எல் ஏ ,மன்னை தொகுதி எம் எல் ஏ எஸ் எஸ் சிவசங்கர் அவர்களும் எல்லோரையும் கவரும் வகையில் பேசினார்கள்.அதிலும் டி ஆர் பி ராஜா அவர்கள் நகைச்சுவையை மழையாக பெய்ய,அனைவரும் அதில் நனைந்தே விட்டோம்.
இறுதியாக பேச வந்த சு ப வீரபாண்டியன் அய்யா மிகவும் அழகான தமிழில் ஆணித்தரமாக பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார்.விழா ஏற்பாட்டில் உறுதுணையாக இருந்த தினகரன் அரசு அண்ணன் நன்றியுரை கூறியதும்,எல்லோருக்கும் ஒருலேப்டாப் பேக் அதில் உழுந்து மாவு பாக்கெட்,ஒரு தொப்பி,விருது,பேனா,நோட்பேடு,ஒரு புத்தகம் என அனைத்தும் ஒவ்வொரு நண்பர்களுக்கும் கொடுத்து திகைப்பில் திழைக்கச்செய்து விட்டார் மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு அவர்கள்.
நம்ம தெருவில் இருக்கும் கவுன்சிலர்களையே இப்போதெல்லாம் பார்க்கமுடிவதில்லை.ஆனால் ஒரு மாவட்ட செயலாளர் அனைவருடனும் அன்பாக பேசி அரவணைத்துச்செல்வது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
மேடையில் அமர்ந்து இருந்தவர்களில் சு ப வீ அய்யாவைத்தவிர மற்ற அனைவரும் 30 ,40 வயதுகளில் இருந்தார்கள்.அடுத்த தலைமுறைகளின்  கையில் தமிழ்நாடு வரும் காலம் நெருங்கிவிட்டது.தலைவர் கலைஞரும்,தளபதி முக ஸ்டாலினும் விழாவில் பேசியவர்களில் எல்லோரும் வியந்து பாராட்டும் நாயகர்களாக பின்னால் இருந்த பேனரில் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.

இந்த இணைய பாசறை கூட்டம் அடுத்தடுத்த மாவட்டங்களில் தொடரும் என நம்பிக்கை வாக்குறுதி கொடுத்தார்கள் டி ஆர் பி ராஜா அவர்களும்,எஸ் எஸ் சிவசங்கர் அவர்களும்,ஐ பி செந்தில் அவர்களும்.மிக அருமையான சந்திப்பு கலந்து கொள்ளாமல் இருந்து இருந்தால் நான் நிறைய விசயங்களை அன்பான நண்பர்களையும் மிஸ் பண்ணியிருப்பேன்.விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பெரியண்ணன் அரசு அவர்களுக்கு மிக்க நன்றி..

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இனி நடைபெறும் இது போன்ற நிகழ்வுகளில் தங்களைப் போல் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் தங்களைப் பார்த்தவுடன் எங்களுக்கும் தோன்றியது. நல்ல பதிவு. நன்றி...

    ReplyDelete
  3. தமிழ் நிலாவுடன் இனிய உலா வந்து பதிவிட்ட தங்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. Ethu pole porgram all districtnada ga thalapathy annai edavandum ..

    ReplyDelete